அம்மா அடிப்பதாய்
வகுப்பில் வந்து
அழுவது
வாடிக்கையாகி விட்டது
அந்தச் சிறுமிக்கு ....
அன்று கேட்டேன்,
' அம்மா ஏன்
அடிக்கடி அடிக்கறாங்க?'
" அம்மாவுக்கு
என்னை பிடிக்காது "
ஏன்?
"என்னோட ஜாதகம்தான்
அப்பா சாவுக்கு காரணமாம் "
பாசத்தைவிடவும்
வலிவாகவே இருக்கின்றன
இந்த
பாழாய்ப் போன நம்பிக்கைகள்...!
பாழாய் போன நம்பிக்கைகள் - பாழாக்கி விடுகிறதே வாழ்க்கையை.
ReplyDeleteஅருமை கருன்.
ReplyDeleteநம்பிக்கைகள் தான் வாழ்வின்
ReplyDeleteஅடிப்படையாகும். ஆனால்..
இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள்
வாழ்க்கையை எப்படி பாழாக்கி விடுகிறதே என்ற கவிதையின் கருத்து அருமை
புலவர் சா இராமாநுசம்
பாசத்தைவிடவும்
ReplyDeleteவலிவாகவே இருக்கின்றன
இந்த
பாழாய் போன நம்பிக்கைகள்...!//
பாவம் பச்சை குழந்தைக்கு என்ன தெரியும்...??!!!
பாழாய் போன நம்பிக்கைகள்...
ReplyDeleteஇந்த மாதிரி நம்பிக்கைகளுக்கு விடிவே இல்லையா?
ReplyDeleteகண்மூடிப்பழக்கம் மண்மூடிப்போக வாழ்வு செழிக்கும்.
ReplyDeleteஎங்கள் சமூகங்கள் திருந்த இன்னும் நிறையக் காலம் எடுக்கும் !
ReplyDeleteகொடுமை தான் ;-(
ReplyDeleteஒரு தாய் இப்படி செய்தால்..???
ReplyDeleteதகப்பனுமற்ற குழந்தை!!!
அநாதை மனப்பான்மைக்கு தள்ளப்படும்.
எதிர்காலம்? "????"
அனுபவ பகிர்வு அருமை...
ReplyDeleteஇப்படியும் தாயா? பாவம் அந்த குழந்தை . கரூண் அவளுடைய தாய்க்கு புரியவையுங்கள்.
ReplyDeleteஎன்ன செய்வது கருண் - பாழாய்ப்போன நமபிக்கைகள் நம்மை நாசம் செய்கின்றன. நாம் எப்பொழுது திருந்தப் போகிறோம் ?
ReplyDeleteஎன்ன நம்பிக்கையோ .....ஹூம் ..
ReplyDeleteநெஞ்சு கனக்கும் நிஜ வரிகள்!...
ReplyDeleteஇந்த நிலை மாறவேண்டும்.
படைப்பாளி உங்களுக்கு மிக்க
நன்றி. எங்களையும் எட்டிப்
பாருங்கள்.............
இந்த
ReplyDeleteபாழாய்ப் போன நம்பிக்கைகள்
முடிவுதான் எப்போதோ?
நெஞ்சை தொடுகிறது
ReplyDeleteநல்லா இருக்கு கருன்.
ReplyDeleteஎன்ன கொடுமையா இது...ஒன்னுந்தெரியாத குழந்தய இப்படி கூட செய்வாளா தாய்!
ReplyDeleteஅருமையான கவிதை கருன்!
ReplyDeleteஅடக்கொடுமையே
ReplyDeleteகொடுமை பாஸ்
ReplyDeleteபலர் வாழ்க்கையை குத்தி குதறி விட்டு போய் விடுகிறது சில நம்பிக்கைகள்
ReplyDeleteநாட்டு நடப்பை நல்லதொரு கவிதையாய் சொல்லியிருக்கீங்க.கேட்டுத் திருந்துபவர்கள் திருந்தட்டும்.
ReplyDeleteபாழாப்போன நம்பிக்கைகள் வீணாப்போகட்டும்!
ReplyDeleteஅந்தப் பெண் வளர்ந்தபின்
ReplyDeleteநீ முந்தி விரித்த நேரம் சரியில்லை
அதற்கு நான் என்ன செய்ய்யட்டும் எனச் சொல்லுமோ?
மனதை வருத்திற்று
ReplyDeleteமனதை வருத்திற்று
ReplyDeleteவணக்கம் தோழர் கருண் அவர்களே,
ReplyDeleteஇது நம்பிக்கைகள் அல்ல..
இதற்குப் பெயர் - மூட நம்பிக்கைகள்
சாத்திரங்களும் கடவுளும் என்றும்
பொய்க்காது...
விரைவில்
கடவுள் குறித்த தொடர்
சிவயசிவ - வில்
நன்றிகள் பல
http://sivaayasivaa.blogspot.com
அந்த பிள்ளை படித்தால் அடுத்த தலைமுறையில் இதெல்லாம் ஒழிந்துவிடும்
ReplyDeleteமனதை கனக்க வைக்கும் உண்மைக் கவிதை! ஜோதிடம் கூறுகின்றது என தன் செல்வ மகனை 12 வ்ருடங்கள் உறவினர் வீட்டில் தங்க வைத்து பாசத்தை பூட்டிக் கொண்ட குடும்பம் ஒன்றினையும் அவர்கள் பாசப் போராட்டத்தினையும் நான் நன்கறிவேன். அம் மகனுக்கு எப்படி பிற்காலத்தில் பெற்றோர் மீது பாசம் வரும்?
ReplyDelete