Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/06/2011

வாகன ஓட்டிகளே உஷார் !!!


லகிலேயே அதிகளவில் சாலை விபத்துகள் நடக்கும் நாடுகளில், இந்தியா முதலிடம் வகிக்கிறது என, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் அதிக விபத்துகள் நடக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வந்தது. ஆனால், அந்த இடத்தை தற்போது தமிழகம் பிடித்துள்ளது.

அந்த அளவுக்கு சாலைகளில் விபத்துகள் ஏற்பட, பற்பல காரணங்கள் உள்ளன.நம் நாட்டில், நீண்ட காலத்துக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. உதாரணமாக, 30 வயது நிரம்பிய ஒருவருக்கு, 20 வருட காலத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 

20 ஆண்டுகள், அவரது உடல்நிலை மற்றும் கண் பார்வை நல்ல நிலையில் இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அயல் நாடுகளில், இரண்டு வருடத்துக்கு ஒரு முறை உரிமத்தைப்
புதுப்பிக்கும்படி சட்டம் உள்ளது.


அடுத்தபடியாக, நான்கு வழி மற்றும் ஆறு வழிச் சாலைகளில், வலப்புறம் வந்து இணையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள குறுக்குச் சாலைகள் மிக ஆபத்தானவை. 

அயல் நாடுகளில், இதுபோல் இடையில் வந்து சேரும் குறுக்குச் சாலைகள், மேம்பாலம் அமைத்து, மறுபுறம் கொண்டுவரப்பட்டு, இடதுபுர ஓரத்தில் வந்து, பெரிய சாலையோடு சேரும்படி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அயல் நாடுகளைப் பார்த்து, ஆறுவழிச் சாலை அமைத்த நம் பொறியாளர்கள், இதைக் கவனிக்கத் தவறிவிட்டனர்.அதற்கடுத்து, நெடுஞ்சாலைகளில் விதி மீறல் செய்வோரைத் துரத்திப் பிடிக்க, ரோந்து ஹெலிகாப்டர்கள் தேவை. 

ரோந்து வாகனங்களால் துரத்திப் பிடிக்க முடியாது. சமீபத்தில், அமைச்சர் ஒருவர் உயிரிழக்க காரணமான லாரியை பிடிக்க முடியாமல், பல நாட்கள் ஆனது. லாரியையே பிடிக்க முடியவில்லையெனில், காரை எப்படி துரத்திப்பிடிக்க இயலும்?

அதற்கடுத்து, வாகன நடமாட்ட தேவைக்கேற்ப, சாலைகளை அகலமாக விரிவுபடுத்தல் அவசியம். வளைவுகளை நேர் செய்வதோடு, நல்ல தரமான, மேடு, பள்ளமில்லாத சாலைகளாக, அனைத்து சாலைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.இவை அனைத்தும் விரைந்து செய்ய முடியுமானால், சாலை விபத்தற்ற மாநிலமாக தமிழகத்தை நாம் நிச்சயமாக மாற்ற முடியும்.

சொல்லுங்கள் உறவுகளே...

41 comments:

  1. புதன் கிழமைன்னா மாப்ளை விழிப்புணர்வுப்பதிவா போட ஆரம்பிச்சடறாரே?

    ReplyDelete
  2. விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  3. வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும். நல்ல விழிப்புணர்வு பதிவு.

    ReplyDelete
  4. இந்தியாவில் அதிக விபத்துகள் நடக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வந்தது. ஆனால், அந்த இடத்தை தற்போது தமிழகம் பிடித்துள்ளது.//


    வேதனையான விஷயம் மக்கா.....!!!

    ReplyDelete
  5. சி.பி.செந்தில்குமார் கூறியது...
    புதன் கிழமைன்னா மாப்ளை விழிப்புணர்வுப்பதிவா போட ஆரம்பிச்சடறாரே?//

    பின்னே என்னடா, உன்னை மாதிரி கில்மா பதிவர்னு நினச்சியாக்கும் ராஸ்கல்....

    ReplyDelete
  6. விழிப்புணர்வுப் பதிவு! ஒக்கே சார்!

    ReplyDelete
  7. நாம் கவனமாக இருந்துகொள்ள வேண்டியது தான் அண்ணா...
    4 மற்றும் 6 வழி சாலைகளில் வாகனங்களின் வேகமும் அதிகமா ஆகி விட்டது ஆனால் பெரும்பாலான லாரி மற்றும் ட்ரக் டிரைவர்கள் இடது புறத்தில் செல்வதற்கு பதிலாக வலது புறத்திலேயே செல்கின்றனர். இதுவே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம்.

    ReplyDelete
  8. வாகன விதிகளை கண்டிப்பாக பின்பற்ற மறந்தால் விளைவுகளை அனுபவித்தே தீரவேண்டும்..

    ReplyDelete
  9. விழிப்புணர்வு நிரம்பிய பதிவு.

    ReplyDelete
  10. ஹெலிகாப்டர் நல்ல யோசனைதான் ......ஆனா நல்ல ஹெலிகாப்டரா இருக்கோணும் .....

    ReplyDelete
  11. நல்ல அலசல் கருண்

    ReplyDelete
  12. விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  13. மாப்ள புதுப்புது ஐடியாவா கொடுக்குறார் கடைபிடிக்குமா இந்த அரசு

    ReplyDelete
  14. விபத்துக்கள் நடக்க மதுவும் ஒரு காரணம். குடிச்சிவிட்டு போதையில் வண்டி ஒட்டுவதால் பெரும்பாலான விபத்துக்கள் நடக்கிறது

    ReplyDelete
  15. உங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும் என்பதே
    இப்பேர்ப்பட்ட விபத்துக்களைப் பார்க்கும்போது
    எம்மனதிலும் எழும் போராட்டம்.இதைக் கவனிக்க
    வேண்டியவர்கள் விரைவில் கவனிக்க வேண்டும்.
    நன்றி பகிர்வுக்கு.மனத்தைக் கொஞ்சம் ஆற்ற என்
    தளத்திற்கு வந்துபோங்கள்............

    ReplyDelete
  16. விழிப்புணர்வூட்டும் தரமான பதிவு
    அவரவர்கள் அளவில் வேகம் குறைத்தல்
    விதிகளை முறையாகக் கடைப்பிடித்தல்
    குடிக்காது வாகனம் ஓட்டுதல்
    நடு இரவு பயணம் தவிர்த்தல் முதலானவைகளை
    கடைப்பிடித்தால் கூட ஓரளவு விபத்துகளைத்
    தவிர்க்க இயலும்
    தரமான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. //அயல் நாடுகளில், இதுபோல் இடையில் வந்து சேரும் குறுக்குச் சாலைகள், மேம்பாலம் அமைத்து, மறுபுறம் கொண்டுவரப்பட்டு, இடதுபுர ஓரத்தில் வந்து, பெரிய சாலையோடு சேரும்படி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


    அயல் நாடுகளைப் பார்த்து, ஆறுவழிச் சாலை அமைத்த நம் பொறியாளர்கள், இதைக் கவனிக்கத் தவறிவிட்டனர்.//

    அயல் நாடுகளில் keep right, நம் நாட்டில் keep left. ஒருவேளை இதற்கும் சாலை வடிவமைப்பிற்கும் சம்பந்தம் இருக்குமோ?

    தேவையான பதிவு நண்பரே..

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. நல்ல விழிப்புணர்வுப் பகிர்வு நன்றி கருன்

    ReplyDelete
  19. வணக்கம் சாரே. எப்டி இருக்கீங்க? என் நெட் பிரச்னை இப்பதான் சரி ஆச்சி!

    ReplyDelete
  20. Sir, the Website is very interesting and useful. Venkat.
    Visit my website also www.hellovenki.blogspot.com and put your valuable comments.

    ReplyDelete
  21. விழிப்புணர்வுப் பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  22. உண்மைதான்..

    அரசு இந்த சாலை விதிகளில் அவசியம்
    கவனம் செலுத்துவதோடு + தேவையான வசதிகளையும் செய்து தர வேண்டும்.

    டோல்கேட் கொள்ளையடித்தால் மட்டும் போதுமா ?

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  23. .கவனிக்கப்பட வேண்டிய விஷயமும்

    ReplyDelete
  24. இன்றைய சூழ்நிலையில் தேவையான பதிவும் உண்மையில் விபத்துகளின்னால் நம் அடையும் துன்பங்கள் எண்ணிலடங்கா பாராட்டுகள் தொடருங்கள்

    ReplyDelete
  25. விழிப்புணர்வு பதிவு அவசியம் தேவை கவனம்

    ReplyDelete
  26. ரொம்ப சரியான, நியாயமான கருத்துக்கள் தலைவரே....!

    ReplyDelete
  27. நல்ல பொறுப்பான விழிப்புணர்வு பதிவு ,
    உண்மைதான் இந்தியா செய்திகளில் அதிகம் இடம் புடிப்பது சாலை விபத்துக்கள்தான்,
    ஆட்சிக்கு வருபவர்கள் இதை கணக்கில் எடுத்து விபத்துக்களைக்குறைக்க ஏதாவது
    சட்டம் இயற்றினால் சந்தோஷம்.

    ReplyDelete
  28. நல்ல பதிவு . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. சாலை விதிகளை சரிவர தெரிந்து கொள்ளாத இளையவர்களின் தவறுகளும் காரணம். எங்கள் கல்லூரியின் சாலையின் இது போன்ற விபத்துகள் அதிகம். நல்ல பதிவு.

    ReplyDelete
  30. நல்ல விழிப்புணர்வான அலசல்....
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. நல்லதொரு விழிப்புணர்வுப்பதிவு

    ReplyDelete
  32. நம்மவர்கள் சாலை போடுவதே ஊழல் செய்ய தானே ---)))

    ReplyDelete
  33. ஓட்டுனர்கள் கவனம் வேண்டும்

    ReplyDelete
  34. உண்மைதான் அண்ணே சாலைகளில் வாகனம் செலுத்தும் சாரதிகள் கவனத்தோடு வாகனத்தை செலுத்தினால் விபத்துக்கள் குறையும்.

    ReplyDelete
  35. கவனத்தில் எடுப்பவர்கள் இந்தப் பதிவைக் கவனிப்பார்களா !

    ReplyDelete
  36. அயல் நாடுகளில், இரண்டு வருடத்துக்கு ஒரு முறை உரிமத்தைப்
    புதுப்பிக்கும்படி சட்டம் உள்ளது. will it possible in India. getting license is life time risk. If the licence issued in correct way we can reduce accidents. need not to take other measures

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"