உலக ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், சீனா சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால், ஒரு தங்க மெடல் வாங்கவே இந்தியா திணறுகிறது.
இப்போது, டென்னிஸ் விளையாட்டிலும், சீனா முன்னேறி வருகிறது. ராணுவத்தில், நம்மைவிடப் பல மடங்கு சக்தி வாய்ந்ததாக, சீனா வளர்ந்துள்ளது. பொருளாதாரத்தில், ஜப்பான், அமெரிக்காவுடன் போட்டி போடும் அளவு, பல மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது.
கல்வி முறையில், ஆரம்பம் முதல், பட்டப்படிப்பு வரை, கட்டுக் கோப்பாக முன்னேறி வருகிறது. சமீபத்தில் சீனா, பீஜிங்கிலிருந்து, ஹாங்காங் வரை, 1,318 கி.மீ., தூரத்தை, ஐந்து மணி நேரத்தில் கடக்கும், உலகிலேயே அதிவேக புல்லட் ரயிலை அறிமுகப்படுத்தி, புகழ் பெற்றிருக்கிறது. இங்கோ, ரயில் தண்டவாள விரிசலைக் கூட உடனடியாக சரிப்படுத்த முடியாத நிலையில் நாம் இருக்கிறோம்.
மதுரை - சென்னை இடையே இயக்கப்படும் வைகை அதிவேக ரயில், 120 கி.மீ.,க்கு பரிசோதனை ஓட்டம் செய்து, 100 கி.மீ., வேகத்தில் இயக்க, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அனுமதியளித்தும், 80 கி.மீ., வேகத்தில் தான் இயக்கப்படுகிறது.
டில்லி - ஆக்ரா இடையே செல்லும், ராஜ்தானி அதிவேக ரயில், 100 - 120 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகிறது. மணிக்கு, 260 கி.மீ., வேகத்தில் இயக்கும் சீனாவை, நாம் முந்தப்போவது எப்போது?
உலகிலேயே, லஞ்ச ஊழலில் முதலிடம் பிடிக்க, இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என்பதே நம் சாதனை!
ஒப்பீடு தவறுதான். இருந்தாலும் என்னுடைய ஆதங்கம் இது..
உண்மைதானே உறவுகளே.....
உண்மைதானே உறவுகளே.....
நல்ல ஒப்பீடு.... இன்று எனது பக்கத்திலும் “தாங்காதய்யா தாங்காது” என்று ஒரு இடுகை பகிர்ந்து இருக்கிறேன்... பாருங்கள் நண்பரே.....
ReplyDeleteஆதங்கம் நியாமானதே
ReplyDeleteஇது நடந்தால் உங்கள் வாயில் சக்கரை போடணும் பாஸ்
ReplyDeleteஉங்கள் கருத்து முற்றிலும் நியாயமானதுதான்
ReplyDeleteஉண்மையான ஒப்பீடு.... கருன்
ReplyDeleteஅப்பா நம்ம வல்லரசு கனவு பலிக்காதா
ReplyDeleteஉலகிலேயே, லஞ்ச ஊழலில் முதலிடம் பிடிக்க, இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என்பதே நம் சாதனை!
ReplyDeletehahahahah!!!!!
சகோ/உண்மையில் நான் குழம்பிட்டேன் .கடைசியில் சிரிப்பு வந்துவிட்டது.என்ன செய்ய இது உங்கள் ஆதங்கம்.பதிவிற்கு வாழ்த்துக்கள்.
என்ன நம்ம பக்கம் காணக்கிடைக்கல?
ரைட்டு!
ReplyDeleteஉண்மைதா கருன்
ReplyDeleteஉங்கள் ஆதங்கம் ஓரளவிற்கு நியாயம்தான்.
ReplyDeleteஇன்னிக்கு நியூஸ்ல பாத்து தான் தெரிஞ்சிகிட்டேன்...சீன செய்தி சானல்கள் நக்கலாக செய்தி சொல்கின்றன!!
ReplyDeleteமாப்பு, இண்ட்லி மேல ட்விட்டர் உட்கார்ந்துக்கிச்சு..இப்போ எப்படி ஓட்டுப் போட..
ReplyDeleteஇதிலாவது முதலிடத்தில் இருப்போமாக!
ReplyDeleteஇதிலாவது முதலிடத்தில் இருப்போமாக!
ReplyDeleteintha vegathukke varam oru vipathu intha lachanathil......im ennatha solla!
ReplyDeleteநல்ல ஒப்பீடு தான் நண்பா...
ReplyDeleteஅங்கு ஏழைகளும் டாக்ஸ் கட்டுகிறார்கள். இங்கு ஏழைகள் இலவசத்தில் வாங்கி உண்டு திளைக்கிறார்கள். அங்கு அரசியல் தலைவர்கள் வணங்கப்படுகிறார்கள். இங்கு அரசியல் தலைவர்கள் கோமாளிகளாக்கப்படுகிறார்கள். அங்கு மக்கள் உழைக்கிறார்கள். இங்கு மக்கள் அதிமேதாவித் தனமாகப் பேசுவதிலேயே பொழுதை கழிக்கிறார்கள். அங்கு ஒரு சீனத்துக் கம்பெனியின் பொருள் சரியில்லையென்றால் அமெரிக்காவிலிருக்கும் ஒரு சீனன் அது குறித்து சீனாவிலிருக்கும் கம்பனிக்கு போன் போட்டு கேட்கிறான். இங்கு நம் நாட்டு கம்பெனிகளை உடைத்தெறிந்துவிட்டு வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு அடிமை சேவகம் செய்வதையே பிறவிப் பயனாகக் கருதுகிறார்கள். நாம் ஒரு வல்லரசாக வேண்டுமென்றால் அதற்கு காரணமாக இருக்க வேண்டிய இண்டஸ்ட்ரீசையும், அரசியல்வாதிகளையும் கோமாளிகளாக்கிவிட்டு ஒவ்வொரும் தான்தான் இந்நாட்டு மன்னன் என்பது போல் நடந்துகொண்டும் பேசிக்கொண்டும், பின்னர் இந்தியா முன்னேறவில்லையென்று ஆதங்கப்பட்டுக்கொண்டும் திரிவது விசித்திரமாக இருக்கிறது.
ReplyDeleteBTW, all is not rosy in China, please read this link.
ReplyDeletehttp://snapjudge.blogspot.com/2011/07/chinas-bumpy-road-ahead-wsjcom.html
ஒப்பீட்டு அடிப்படையில் இந்தியாவின் இன்றைய நிலையினை நன்றாக விளக்கியுள்ளீர்கள். இவற்றுக்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகளும், உலகில் நாம் எந் நிலையில் இருக்கிறோம் என்பதனை உணராது மீண்டும் மீண்டும் ஓட்டளித்து அதே மந்திரிகளைப் பதவியிலமர்த்தும் மக்களும் தான்,
ReplyDeleteஇளைஞர்கள்- கல்வியறிவில் நன்றாக மேம்பட்டவர்கள்- நாட்டின் முன்னேற்றத்தில் மட்டும் அக்கறையுள்ளோர் அரசியலுக்கு வந்தால் தான் இந்தியாவில் ஊழல் நீங்கி அபிவிருத்தி சிறப்பாக நடை பெறும்.
எல்லா புகழும் ராசா ஒருவருக்கே....
ReplyDeleteஎன்னத்த சொல்ல குட்டிசுவரா போகுது
ReplyDelete@அ. சகன்
ReplyDeleteநியாமான ஆதங்கம்.
ReplyDeleteunmailgal kasakathan seyyum
ReplyDelete