ஐ.மு.கூட்டணி அரசாங்கம் டீசல் லிட்டருக்கு 3 ரூபாயும், மண்ணெண்ணெய் லிட்டருக்கு 2 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 50 ரூபாயும் உயர்த்தியிருக்கிறது.
மத்திய அரசு ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் இவ்வாறு விலைகளை உயர்த்தியிருப்பது ஏற்கனவே கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசி உயர்வால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களின் துன்ப துயரங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத தடித்தன்மையைக் காட்டுகிறது; அதோடு மட்டுமல்லாமல் நாட்டு மக்களைக் காவுகொடுத்திடும் ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் கயமைத்தனத்தையும் தோலுரித்துக் காட்டு கிறது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண் ணெய்யின் விலை உயர்ந்திருப்பதால் தான் நம் நாட்டிலும் இவற்றின் விலையை உயர்த்த வேண்டியதாயிற்று என்கிற அர சின் கூற்று வஞ்சகமான ஒன்று. உண்மையில் இப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 90-92 அமெரிக்க டாலர்கள்தான்.
ஆனால் இதே ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 100 - 115 டாலர்களாக இருந்தது. ஆனால் அப்போது அரசாங்கம் இவ்வாறு விலையை உயர்த்தத் துணியவில்லை. காரணம், அப்போது ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் இவ்வாறு விலைகளை உயர்த்தி மக்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ள அப்போது அரசாங்கம் விரும்ப வில்லை.
ஆனால் இப்போது அதைவிட விலைக் குறைச்சலாக உள்ள நிலையிலேயே இதனைச் செய்திருக்கிறது. அதாவது தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயங்களில் - மக்கள் வாக்களிக்கப் போகும் சமயங்களில் மட்டுமே அரசாங் கம் மக்களின் வறுமை நிலையைப் பரி சீலனை செய்யும்போல் தோன்றுகிறது.
பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயம் சம்பந்தமாக கடந்த பல ஆண்டு களாக இடதுசாரிக் கட்சிகளும் நாடாளு மன்ற நிலைக் குழுவும் கோரி வந்ததுபோல், மத்திய - மாநில அரசுகள் தங்கள் மறை முக வரிகளுக்கான கட்டமைப்பை மாற்றி அமைக்காது, அரசாங்கங்கள் பெயரளவில் வரிகளைக் குறைப்பதன் மூலம் எந்தப் பய னும் கிடையாது.
கச்சா எண்ணெய் இறக்கு மதித்தீர்வை 5 விழுக்காடு விலக்கப்பட் டிருப்பதாக அறிவித்திருப்பதன் மூலம் அரசாங்கம் மக்களை வஞ்சகமாக ஏமாற் றிக் கொண்டிருக்கிறது. உண்மையில் ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது இந்த வரியை 2010 மத்திய பட்ஜெட்டில் எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பினையும் எதிர்க்கட்சிகள் மக்களவையில் கொண் டுவந்த வெட்டுத் தீர்மானத்தையும் மீறி மக்கள் மீது திணித்தது.
2010-2011ஆம் ஆண்டில் மத்திய அரசின் கருவூலத்திற்கு பெட்ரோலியத் துறையிடமிருந்து கிடைத்த தொகை சுமார் 1 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபா யாகும். மாநில அரசாங்கங்களுக்கு சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.
இதே காலகட்டத்தில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளி யிட்டுள்ள எண்ணெய் பத்திரங்கள் உட்பட அரசாங்கம் அளித்துள்ள மானியங்களின் அளவு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாயாகும். அதாவது சாமானியர் களிடமிருந்து வரிகளாகவும் தீர்வைகளாகவும் 100 ரூபாயைப் பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக அவர்களுக்கு வெறும் 20 ரூபாய் மானியமாக அளிக்கப்பட்டிருக்கிறது.
உண்மையில் யாருக்கு யார் மானியம் அளிக்கிறார்கள்? மிகவும் சரியாகச் சொல்வதென்றால், 2001இல் பெட்ரோலி யத் துறை மூலமாக அரசுக்குக் கிடைத்த பங்களிப்பு 46 ஆயிரத்து 603 கோடி ரூபாயிலிருந்து, 2010-11ஆம் ஆண்டில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 026 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
அரசாங்கம் இவ்வாறு மக்களின் வயிற்றில் அடிக்கும் அதே சமயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகைகளை வாரி வழங்கிக் கொண்டி ருக்கிறது. சுத்திகரிப்புக்காக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்திடும் கார்ப் பரேட் நிறுவனங்கள் அவற்றைச் சுத்தி கரிப்பு செய்து ஏற்றுமதி செய்யும்போது அரசாங்கத்திடமிருந்து ‘‘தீர்வைத் திரும்பப்பெறும் ஊக்கத்தொகைகள்’’ மூலமாக அபரிமிதமான லாபத்தை ஈட்டிக் கொண்டிருக்கின்றன.
சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலியப் பொருட்கள் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களால் ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான “ஊக்கத்தொகைகள்” ஏன் விலக்கப்படக் கூடாது?
பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் அதிகப்படுத்துவதே தங்கள் கொள்கைகள் என்பதை ஐ.மு.கூட்டணி அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியிருப்பதன் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கின்றது.
பணவீக்க விகிதம் 9 விழுக்காட் டிற்கும் மேல் அதிகரித்திருக்கிறது. அரசாங்கம் தன்னுடைய நவீன தாராளமயக் கண்ணோட்டத்தின் மூலம் இவ்வாறு வரிகளை மக்கள் மீது ஏற்றிக் கொண்டிருக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் மேலும் உயர்த்திடும் இத்தகைய கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்ற கோரிக்கை யுடன் மக்களால் நடத்தப்படும் வலுவான இயக்கங்களைக் கட்டுவதன் மூலமாகவே அரசின் இத்தகைய படுமோசமான நடவடிக்கைகளை அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வைத்திட முடியும்.
மாப்ளைக்கு முத சீர் மச்சான்
ReplyDeleteஓட்டு வாங்குனவுங்க அடிக்கிறது சகஜம்தானே ......... அவங்க இப்படித்தான் அடிச்சிகிட்டே இருப்பாங்க
ReplyDeleteஇன்னும் இருக்கிறது இவர்களிக் செயலை சொல்ல
ReplyDeleteபழகி போயிருச்சி
ReplyDeleteநல்லதொரு பதிவு
ReplyDeleteஎன்ன சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்!
ReplyDeleteஅடங்குங்கய்யா....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஎரும மாட்டுக்குக்கூட ரோஷம் வந்தாலும் அய்க்கிய முவுக்கு வராதுங்க.
ReplyDeleteஅருமை. பெட்ரோல் விலை பகல் கொள்ளை .
ReplyDeleteஅழகாக சொல்லி இருக்கீங்க
அருமை. பெட்ரோல் விலை பகல் கொள்ளை .
ReplyDeleteஅழகா சொல்லி இருக்கீங்க
தங்களின் கருத்து சாட்டையடி
ReplyDeletethulithuliyaai.blogspot.com
நல்ல தகவல் நண்பரே
ReplyDeleteசூப்பர் போஸ்ட் மாப்ள..அடுத்த தேர்தல்ல காங்கிரஸ்க்கு ஆப்பு வச்சாத்தான் முடியும்.
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteகாங்கிரஸ்காரனுக்கு இன்னும் அடி கொடுக்கணும்
//பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் மேலும் உயர்த்திடும் இத்தகைய கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்ற கோரிக்கை யுடன் மக்களால் நடத்தப்படும் வலுவான இயக்கங்களைக் கட்டுவதன் மூலமாகவே அரசின் இத்தகைய படுமோசமான நடவடிக்கைகளை அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வைத்திட முடியும்.//நல்ல பதிவு
ReplyDeleteகாங்கிரஸ்காரனுக்கு இன்னும் அடி கொடுக்கணும்
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
GOOD POST
ReplyDeleteஅன்பின் கருன் - நல்லதொரு அலசல் - என்ன செய்வது - வேறு வழி இல்லை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete