ஐ.மு.கூட்டணி அரசாங்கம் டீசல் லிட்டருக்கு 3 ரூபாயும், மண்ணெண்ணெய் லிட்டருக்கு 2 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 50 ரூபாயும் உயர்த்தியிருக்கிறது.
மத்திய அரசு ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் இவ்வாறு விலைகளை உயர்த்தியிருப்பது ஏற்கனவே கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசி உயர்வால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களின் துன்ப துயரங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத தடித்தன்மையைக் காட்டுகிறது; அதோடு மட்டுமல்லாமல் நாட்டு மக்களைக் காவுகொடுத்திடும் ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் கயமைத்தனத்தையும் தோலுரித்துக் காட்டு கிறது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண் ணெய்யின் விலை உயர்ந்திருப்பதால் தான் நம் நாட்டிலும் இவற்றின் விலையை உயர்த்த வேண்டியதாயிற்று என்கிற அர சின் கூற்று வஞ்சகமான ஒன்று. உண்மையில் இப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 90-92 அமெரிக்க டாலர்கள்தான்.