பத்து வருடங்களுக்கு முன்னால் தமிழகத்திலிலிருந்து சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆனால் அண்மை காலங்களில் இத்தேர்வில் வெற்றியாளர்கள் கூடிக் கொண்டே வருகின்றனர். இதற்கு முக்கிய காரணங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ள உயர் கல்வி வளர்ச்சி, மிக குறைவான கட்டணத்தில் தரமான பயிற்சிகளை வழங்கும் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள், இளைஞர் களிடையே அதிகரித்து வரும் விழிப்புணர்வு, பெற்றோர்களின் ஊக்குவிப்பு ஆகியவைகள்தான்.
வாழ்த்துகள். உங்களின் வெற்றி தமிழகத்திற்கு கிடைத்த கௌரவம். நீங்கள் இந்த மிகப்பெரிய வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்?
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவில் முதல் ரேங்க் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தை முதன்மையாக்க நான் ஒரு காரணமாக இருக்கும் போது, அது மிகவும் சந்தோஷத்தை தருகிறது. தமிழ்நாட்டிற்கு என்னால் பெருமை சேரும் என நினைக்கிறேன்.
உங்கள் படிப்பை பற்றி கூறுங்கள்.....
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். நான் சென்னையில் உள்ள அசன் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் படித்தேன். பின்பு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கூல் ஆப் எக்ஸ்லன்ஸ் லாவில் சட்டம் படித்தேன். படிப்பை முடித்த பின்னர் வங்கி போட்டித் தேர்வில் வெற்றிப் பெற்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணிக்கு சேர்ந்தேன். இப்போதுவரை வங்கியில் பணிப்புரிந்து வருகிறேன்.
சட்டம் படித்த நீங்கள் ஏன் சிவில் சர்வீசஸ் பணியை தேர்ந்தெடுத்தீர்கள்?
சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென விரும்பினேன். அதற்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நல்ல ஏணிப்படியாக இருக்கும் என நினைத்தேன். அதனால் சிவில் சர்வீசஸ் தேர்வை தேர்ந்தெடுத்தேன். இதன் மூலமாக ஏதாவது நல்லது செய்ய முடியும் என நம்புகிறேன். கண்டிப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற உங்களின் படிப்பு இரகசியம் என்ன?
தன்னம்பிக்கை, கடின உழைப்பு, எனது பெற்றோர்கள் கொடுத்த ஊக்கம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தந்த நம்பிக்கை, இதோடு எனது வெற்றியில் முக்கிய பங்காற்றிய பிரபா ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குனர் பிரபாகரன் சார். அவர் இல்லாமல் என்னால் இந்த அளவிற்கு வெற்றிப் பெற்றிருக்க முடியாது. எல்லோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களின் வெற்றியில் எந்த அளவிற்கு பெற்றோர்களும் நண்பர்களும் பங்காற்றினர்?
அவர்கள் இந்த வெற்றியை அடைவதற்கு பல விதங்களில் உதவியாக இருந்தனர். இந்த வெற்றியை அடைவதற்கு நம்பிக்கை, தைரியம், ஊக்கம் மற்றும் சுதந்திரம் கொடுத்தனர்.
இந்த தேர்வுக்கு எவ்வளவு நேரம் தீவிரமாக படித்தீர்கள் ?
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படிப்பது நபருக்கு நபர் வித்தியாசப்படும். நான் இந்த தேர்விற்கு ஆண்டு முழுவதும் கடின உழைப்பை செலுத்தினேன். தினமும் நான்கு மணி நேரம் படிப்பேன். வாரத்தில் ஐந்து நாட்கள் படிப்பேன் அவ்வளவுதான்.
பொது அறிவு தாளுக்கு எந்தெந்த பத்திரிகைகள் மற்றும் இதழ்களை படித்தீர்கள்?
தினமும் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ்களை படித்துவிடுவேன். அதற்கடுத்து பப்ளிகேஷன் டிவிஷன் வெளியிடும் யோஜனா, குருஷேத்திரா, சி.எஸ்.ஆர் இயர்புக் ஆகியவற்றை படித்தேன்.
இந்த தேர்வில் உங்களின் விருப்பப் பாடங்களாக எவற்றை தேர்ந்தெடுத்தீர்கள்?
பிரிலிலிமனரி தேர்வில் பொது நிர்வாகம் விருப்பப்பாடத்தையும், மெயின் தேர்வில் பொது நிர்வாகம், சட்டம் ஆகிய இரண்டையும் விருப்பப்பாடங்களாக தேர்ந்தெடுத்தேன்.
இந்த விருப்பப்பாடங்களை தேர்ந் தெடுத்ததற்கு ஏதேனும் காரணங்கள் உண்டா?
பொது நிர்வாகம் எனக்கு மிகவும் பிடித்த விருப்பப்பாடம். இதற்கு அனைத்து நூல்களும் எளிதாக கிடைக்கிறது. இரண்டாவது விருப்பப்பாடமான சட்டம் எனது கல்லூரி பாடம். இதனால் தேர்வுக்கு தயார்செய்ய எளிதாகவும் இருந்தன.
இந்த தேர்வை எத்தனை முறை எழுதினீர்கள்?
சிவில் சர்வீசஸ் தேர்வை முதல் முறையாக எழுதியபோது பிரிலிலிமனரி தேர்விலேயே வெற்றி பெறமுடியவில்லை. எனது இரண்டாவது முயற்சியில்தான் இந்த வெற்றியை பெற்றிருக்கிறேன்.
பொது அறிவு தாள்களுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?
பொது அறிவுக்கான பல நூல்களையும், இண்டர்நெட்டிலிலிருந்து தேவையான குறிப்புகளையும் தயார் செய்து படித்தேன். மொழித் தாள்கள் மற்றும் கட்டுரை தாளுக்கு விசேஷமான தயாரிப்பு எதையும் செய்யவில்லை.
நேர்முகத் தேர்வு எப்படியிருந்தது?
இண்டர்வியூ போர்டு மிகவும் இயல்பாக இருந்தது. தன்னம்பிக்கையுடன் இருந்தேன். பல கேள்விகள் இயல்பாகவும் நுட்பமாகவும் கேட்டதனால் எளிதாக பதில் தந்தேன். மிகவும் திருப்திகரமாக இருந்தது.
சிவில் சர்வீசஸ் தேர்வு தயார் செய்பவர்களுக்கு உங்களின் ஆலோசனை...
புதிதாக வந்துள்ள சிவில் சர்வீசஸ் ஆப்டிடியூட் டெஸ்ட் அப்படி ஒன்றும் கடினமானதல்ல. பாசிட்டிவ்வாக எடுத்துக்கொண்டு படித்தால் வெற்றிப்பெற முடியும். அதனால் இந்த தேர்வுக்கு படிப்பவர்கள் தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பு வேண்டும். இவை நிச்சயம் வெற்றிப்பெற உதவும்.
திவ்ய தர்ஷினிக்கு எனது வாழ்த்துக்களும்...
ReplyDeleteCongratulation to divya
ReplyDeletevaazhthukkal
ReplyDeleteவாழ்த்துகள்.திவ்ய தர்ஷினி வெற்றி தமிழகத்திற்கு கிடைத்த கௌரவம்.
ReplyDelete\\\பொது அறிவுக்கான பல நூல்களையும், இண்டர்நெட்டிலிலிருந்து தேவையான குறிப்புகளையும் தயார் செய்து படித்தேன்.\\\ அப்படீன்னா எங்க பிளாக்கையும் படிச்சீங்களா ???!!!
ReplyDeleteஆஹா, அருமை, கேட்பதற்கே பெருமையா இருக்கு, வாழ்த்துக்கள் திவ்யதர்ஷினி!
ReplyDeleteதர்சினியின் பேட்டி அருமை சகோ.
ReplyDeleteதர்சினியினை முன்னுதாரணமாக் கொண்டு பல நல் மாணவர்கள் வருங்காலத்தில் உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம்.
திவ்ய தர்ஷினிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteதிவ்யதர்ஷினிக்கு எனது வாழ்த்துக்களும்! வெற்றிகள் தொடரட்டும்!!!
ReplyDeleteநல்ல முன்னுதாரணம்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிவ்ய தர்ஷினிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteதிவ்ய தர்ஷினிக்கு எனது வாழ்த்துக்களும்...
ReplyDeleteதிவ்ய தர்ஷினியின் வெற்றி தமிழகத்திற்கு கிடைத்த கௌரவம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பதிவுக்கு நன்றியும், பாராட்டுக்களும்.
முன் உதாரணமாக இருபவர்களை பற்றி நல்ல ஆக்கம் போட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதிவ்ய தர்ஷினிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாப்ள நல்ல பதிவு தான் போட்டிருக்காப்ல..
ReplyDeleteஒரு முன்னுதாரணப் பதிவு.. பகிர்ந்தமைக்கு நன்றி கருன்..!
ReplyDeleteoru sirandhe eduthukattahe ilaiye thalaimuraiku thivya tharsini vilanguhirar. avaruku enadhu manamarndhe nantri
ReplyDeletethivya tharsini oru sirandhe eduthukattu varum ilaiye samuthayathuku... valthukkal tharsini
ReplyDeleteதிவ்ய தர்ஷினிக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete