Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts
Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts

3/07/2012

தோல்வி என்பது நிரந்தரமல்ல தோழா.... Repost



ல்வி இறுதி ஆண்டு தேர்வுகளும், உயர் கல்வி பயில்வதற்கான நுழைவுத் தேர்வுகளும் என்று மாணவர்கள் தேர்வுப் பயணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த தேர்வாக இருந்தாலும் சரி, எப்படி படித்திருந்தாலும், எந்த மாணவருக்கும் தோல்வி ஏற்படுவது சகஜம்தான். ஒரு சில மாணவர்கள், தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் மனம் துவண்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குக் கூட போய்விடுவதுண்டு. இதற்கு மாணவர்களது பெற்றோரும் கூட ஒரு காரணமாக அமைந்துவிடுவார்கள்.

11/09/2011

இது, கனிமொழி,விஜயகாந்துக்கு அவசியம் தேவை !!!


கனிமொழியின் மீது குற்றம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை, அவர்கள் நிரபராதியாக இருந்தால் தன்னம்பிக்கை கண்டிப்பாக அவர்களுக்கு தேவை. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்த விஜயகாந்தும் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து செயல்பட தன்னம்பிக்கை வேண்டும். 


அவமானம் ஒரு மூலதனம்

இந்த உலகம் பல அதிசயங்களைக் கொண்டது. அதே சமயத்தில் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது. இந்த உலகத்தில் சில விஷயங்கள் நமக்கு சாதகமாக இல்லை என்பதால் இந்த மொத்த உலகமே நம்மை எதிர்க்கிறது என்ற முடிவுக்கு வரக்கூடாது.

11/08/2011

பெற்றோர்களின் கவனத்திற்கு..


ஒரு சின்னக் குழந்தை புத்தகத்தை எடுக்கப் போனால் உடனே பெற்றோர்கள், வேண்டாம்பா, அந்த புத்தகத்தை அங்கேயே வைத்து விடு கிழித்துவிடப் போகிறாய் என எச்சரிப்பதை பார்த்திருப்போம். ஆனால் இது தவறான அணுகுமுறை என்றே அறிஞர்கள் சொல்லுகிறார்கள். குழந்தைகளுக்கு புத்தகத்தின் மகத்துவத்தை பொறுமையாக சொல்லுங்கள் என்கிறார்கள் அவர்கள்.

11/07/2011

பிரச்சனைகள் வரும்போது....


நமது வெற்றித் தோல்விகளை நம்முடைய மனதுதான் தீர்மானிக்கிறது. நமக்கு முன்னே ஒரு சவால் ஒரு பிரச்சனை இருந்தால், அதைத் தீர்க்க நாம் என்ன நடவடிக்கை எடுக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நம் வெற்றித் தோல்விகள் அமைகிறது.

11/06/2011

புறக்கணிப்பை புறந்தள்ளுவோம்..


ஒரு வகுப்பில் ஒரு மாணவன் ஒரு கவிதையை எழுதி ஆசிரியரிடம் காண்பித்தான். அவர் அக்கவிதையை படிக்காமல் அந்த காகிதத்தை பறித்து கசக்கி எறிந்துவிட்டு , டேய் போய் ஒழுங்கா படிக்கற வேலைப் பார் என குட்டு வைத்தார்.

அதன்பிறகு அந்த சிறுவன் கவிதை எழுதுவதில்லை. இது மாதிரி பல திறமைசாலிகள் முளையிலேயே கிள்ளி எறியப்படுகின்றனர். சரி அந்தப் பையன் எழுந்து நின்று ஏன் எழுத ஆரம்பிக்கவில்லை.

அவன் சந்தித்த முதல் புறக்கணிப்பு. முதல் புறக்கணிப்பைத் தாங்கி ஜெயிக்க அபாரமான தன்னம்பிக்கை வேண்டும். அது அவனிடம் இல்லை. ஒவ்வொரு மனிதனிக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது. ஆனால் முதல் புறக்கணிப்பில் அவன் செத்துப் போகிறான்.

உறவுகளே புறக்கணிப்பை புறக்கணியுங்கள். வெற்றி நம் பக்கம் .

10/26/2011

கொஞ்சம் ஜாலி கொஞ்சம் தன்னம்பிக்கை..


இன்று தீபாவளி , பலருக்கு நோன்பு , ஜாலியா பட்டாசு வெடிச்சு அதிரசம் எல்லாம் சாப்டாச்சா? ஓகே.. இப்போ ஜாலியா சில தன்னம்பிக்கை ஊட்டும் காணொளிகள் பார்ப்போம் ..












கடைசியா ஒரு பாட்டு :



மீண்டும் ஒருமுறை தீபாவளி வாழ்த்துக்கள்., நன்றி...

9/03/2011

வெற்றி பெற தேவையான 5 குணங்கள் - அப்துல்கலாம்


"நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. உன்னால் வெற்றியை அடைய முடியும். உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு. அதனை அடைய உழைப்பு முக்கியம். உழை. உழைத்து கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கு இருந்தால், நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்." இதுவே வெற்றியின் ரகசியம்.

எங்கு சென்றாலும் இளைஞர்களிடம், வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையையும், லட்சியத்தையும், கனவையும் நான் பார்க்கிறேன்.

6/12/2011

2011 IAS வெற்றியாளர் திவ்ய தர்ஷினி - சிறப்பு பேட்டி


த்து வருடங்களுக்கு முன்னால் தமிழகத்திலிலிருந்து சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆனால் அண்மை காலங்களில் இத்தேர்வில் வெற்றியாளர்கள் கூடிக் கொண்டே வருகின்றனர். இதற்கு முக்கிய காரணங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ள உயர் கல்வி வளர்ச்சி, மிக குறைவான கட்டணத்தில் தரமான பயிற்சிகளை வழங்கும் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள், இளைஞர் களிடையே அதிகரித்து வரும் விழிப்புணர்வு, பெற்றோர்களின் ஊக்குவிப்பு ஆகியவைகள்தான். 

அதனால்தான் தமிழகம் வெற்றி சிகரத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. அதில் மிகப்பெரிய சாதனையாக, இந்தாண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் முதலிலிடத்தை பெற்று தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளார் திவ்ய தர்ஷினி. அவரது வெற்றி இத்தேர்வுக்கு தயார் செய்துவரும் 'நன்றி - பொது அறிவு உலகம்' வாசகர்களுக்கு  அளித்த சிறப்புப் பேட்டியை உங்களுக்காக இங்கு வெளியிடுகிறோம்.

வாழ்த்துகள். உங்களின் வெற்றி தமிழகத்திற்கு கிடைத்த கௌரவம். நீங்கள் இந்த மிகப்பெரிய வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்?

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவில் முதல் ரேங்க் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தை முதன்மையாக்க நான் ஒரு காரணமாக இருக்கும் போது, அது மிகவும் சந்தோஷத்தை தருகிறது. தமிழ்நாட்டிற்கு என்னால் பெருமை சேரும் என நினைக்கிறேன்.

உங்கள் படிப்பை பற்றி கூறுங்கள்.....

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். நான் சென்னையில் உள்ள அசன் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் படித்தேன். பின்பு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கூல் ஆப் எக்ஸ்லன்ஸ் லாவில் சட்டம் படித்தேன். படிப்பை முடித்த பின்னர் வங்கி போட்டித் தேர்வில் வெற்றிப் பெற்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணிக்கு சேர்ந்தேன். இப்போதுவரை வங்கியில் பணிப்புரிந்து வருகிறேன்.

சட்டம் படித்த நீங்கள் ஏன் சிவில் சர்வீசஸ் பணியை தேர்ந்தெடுத்தீர்கள்?

சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென விரும்பினேன். அதற்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நல்ல ஏணிப்படியாக இருக்கும் என நினைத்தேன். அதனால் சிவில் சர்வீசஸ் தேர்வை தேர்ந்தெடுத்தேன். இதன் மூலமாக ஏதாவது நல்லது செய்ய முடியும் என நம்புகிறேன். கண்டிப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற உங்களின் படிப்பு இரகசியம் என்ன?

தன்னம்பிக்கை, கடின உழைப்பு, எனது பெற்றோர்கள் கொடுத்த ஊக்கம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தந்த நம்பிக்கை, இதோடு எனது வெற்றியில் முக்கிய பங்காற்றிய பிரபா ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குனர் பிரபாகரன் சார். அவர் இல்லாமல் என்னால் இந்த அளவிற்கு வெற்றிப் பெற்றிருக்க முடியாது. எல்லோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களின் வெற்றியில் எந்த அளவிற்கு பெற்றோர்களும் நண்பர்களும் பங்காற்றினர்?

அவர்கள் இந்த வெற்றியை அடைவதற்கு பல விதங்களில் உதவியாக இருந்தனர். இந்த வெற்றியை அடைவதற்கு நம்பிக்கை, தைரியம், ஊக்கம் மற்றும் சுதந்திரம் கொடுத்தனர்.

இந்த தேர்வுக்கு எவ்வளவு நேரம் தீவிரமாக படித்தீர்கள் ?

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படிப்பது நபருக்கு நபர் வித்தியாசப்படும். நான் இந்த தேர்விற்கு ஆண்டு முழுவதும் கடின உழைப்பை செலுத்தினேன். தினமும் நான்கு மணி நேரம் படிப்பேன். வாரத்தில் ஐந்து நாட்கள் படிப்பேன் அவ்வளவுதான்.

பொது அறிவு தாளுக்கு எந்தெந்த பத்திரிகைகள் மற்றும் இதழ்களை படித்தீர்கள்?
தினமும் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ்களை படித்துவிடுவேன். அதற்கடுத்து பப்ளிகேஷன் டிவிஷன் வெளியிடும் யோஜனா, குருஷேத்திரா, சி.எஸ்.ஆர் இயர்புக் ஆகியவற்றை படித்தேன்.

இந்த தேர்வில் உங்களின் விருப்பப் பாடங்களாக எவற்றை தேர்ந்தெடுத்தீர்கள்?


பிரிலிலிமனரி தேர்வில் பொது நிர்வாகம் விருப்பப்பாடத்தையும், மெயின் தேர்வில் பொது நிர்வாகம், சட்டம் ஆகிய இரண்டையும் விருப்பப்பாடங்களாக தேர்ந்தெடுத்தேன்.

இந்த விருப்பப்பாடங்களை தேர்ந் தெடுத்ததற்கு ஏதேனும் காரணங்கள் உண்டா?

பொது நிர்வாகம் எனக்கு மிகவும் பிடித்த விருப்பப்பாடம். இதற்கு அனைத்து நூல்களும் எளிதாக கிடைக்கிறது. இரண்டாவது விருப்பப்பாடமான சட்டம் எனது கல்லூரி பாடம். இதனால் தேர்வுக்கு தயார்செய்ய எளிதாகவும் இருந்தன.

இந்த தேர்வை எத்தனை முறை எழுதினீர்கள்?

சிவில் சர்வீசஸ் தேர்வை முதல் முறையாக எழுதியபோது பிரிலிலிமனரி தேர்விலேயே வெற்றி பெறமுடியவில்லை. எனது இரண்டாவது முயற்சியில்தான் இந்த வெற்றியை பெற்றிருக்கிறேன்.

பொது அறிவு தாள்களுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?

பொது அறிவுக்கான பல நூல்களையும், இண்டர்நெட்டிலிலிருந்து தேவையான குறிப்புகளையும் தயார் செய்து படித்தேன். மொழித் தாள்கள் மற்றும் கட்டுரை தாளுக்கு விசேஷமான தயாரிப்பு எதையும் செய்யவில்லை.

நேர்முகத் தேர்வு எப்படியிருந்தது?

இண்டர்வியூ போர்டு மிகவும் இயல்பாக இருந்தது. தன்னம்பிக்கையுடன் இருந்தேன். பல கேள்விகள் இயல்பாகவும் நுட்பமாகவும் கேட்டதனால் எளிதாக பதில் தந்தேன். மிகவும் திருப்திகரமாக இருந்தது.

சிவில் சர்வீசஸ் தேர்வு தயார் செய்பவர்களுக்கு உங்களின் ஆலோசனை...

புதிதாக வந்துள்ள சிவில் சர்வீசஸ் ஆப்டிடியூட் டெஸ்ட் அப்படி ஒன்றும் கடினமானதல்ல. பாசிட்டிவ்வாக எடுத்துக்கொண்டு படித்தால் வெற்றிப்பெற முடியும். அதனால் இந்த தேர்வுக்கு படிப்பவர்கள் தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பு வேண்டும். இவை நிச்சயம் வெற்றிப்பெற உதவும்.
 

4/26/2011

உங்கள் தோல்வி துவண்டு போக அல்ல..

ல்வி இறுதி ஆண்டு தேர்வுகளும், உயர் கல்வி பயில்வதற்கான நுழைவுத் தேர்வுகளும் என்று மாணவர்கள் தேர்வுப் பயணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த தேர்வாக இருந்தாலும் சரி, எப்படி படித்திருந்தாலும், எந்த மாணவருக்கும் தோல்வி ஏற்படுவது சகஜம்தான். ஒரு சில மாணவர்கள், தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் மனம் துவண்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குக் கூட போய்விடுவதுண்டு. இதற்கு மாணவர்களது பெற்றோரும் கூட ஒரு காரணமாக அமைந்துவிடுவார்கள்.


ஆனால், எந்த தோல்வியும் துவண்டு போவதற்காக அல்ல.. நமது வழியை மாற்றி, நம்மை ஒரு நல்ல லட்சியத்தை நோக்கி பயணிக்க வைக்கலாம் என்பதை எடுத்துக் கூற பல வரலாறுகள் உள்ளன.


இந்தியாவின் தந்தையாகப் போற்றப்படும் மகாத்மா காந்தி, வழக்கறிஞராக படித்து பட்டம் பெற்றிருந்தால், ஒரு பத்து பேருக்கு தெரிந்த வழக்கறிஞராக மட்டுமே இருந்திருப்பார். ஆனால், வெள்ளையர்கள் அவரை ரயிலில் இருந்து இறக்கிவிட்ட ஒரு சம்பவத்தால் அவர் வாழ்க்கைப் பயணம் தடம் மாறியது. அதனால் அவர் அடைந்தது மகாத்மா என்ற பெருமையை.



இதேப்போல, எத்தனையோ பேர், தாங்கள் அடைந்த சிறு தோல்வியால் பயணம் மாறி பெரிய லட்சியங்களை அடைந்துள்ளனர்.


ஸ்பெயினைச் சேர்ந்த ஜுலியோ என்ற இளைஞன் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். அதீத பயிற்சியில் ஈடுபட்டு, ரியல் மேட்ரிட் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் அணியின் சிறந்த கோல் கீப்பராக வருவார் என்று எல்லோரும் எண்ணினார்.


ஒரு நாள் கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜுலியோவிற்கு நடப்பதே கடினமானது. 18 மாத மருத்துவமனை வாழ்க்கையில் இருந்து வெளியே வந்த ஜுலியோ, தனது வாழ்க்கைப் பயணம் இப்படி இருண்டு விட்டதே என்று எண்ணி கண்ணீர் விட்டார். கண்ணீரை பேனாவில் மையாக ஊற்றி பாடல்கள் எழுதினார். இதனை கிட்டாரில் தானே வாசித்து பாடவும் செய்தார்.


பின்னாளில், இசை வரலாற்றில் ஜுலியோ இக்லேசியஸ், சிறந்த பத்து பாடகர்களில் ஒருவராக இடம்பெற்றார். 300 ஆல்பங்களை வெளியிட்டு, ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார்.


அந்த கார் விபத்து அவருக்கு நேரிட்டிருக்காவிடில், ஜுலியோ இக்லேசியஸ் வெறும் 100 பேருக்கு தெரிந்த ஒரு கோல் கீப்பராக இருந்திருப்பார். ஆனால் தற்போது உலகமே அறிந்த பாடகராக இருக்கிறார்.


நமக்கு ஒரு கதவு மூடப்பட்டால், நம்மருகே மற்றொரு கதவு திறந்திருக்கிறது என்று அர்த்தம். ஆனால், பலரும், மூடியே கதவருகே அமர்ந்து அழத்தான் செய்கிறார்களேத் தவிர, திறந்திருக்கும் கதவை கவனிப்பதே இல்லை.


ஒரு தோல்வி தந்த அனுபவத்தைக் கொண்டு, நமது வாழ்க்கையை இன்னும் எவ்வாறு சிறப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். நாம் அதிகம் விரும்பும் ஒன்றை நாம் இழப்பதற்குக் காரணம், நம்மை அதிகம் விரும்பும் ஒன்று நமக்காக காத்திருக்கிறது என்பதால்தான்.


தோல்வி அடையும் போது துவண்டு விடாமல், நமக்கிருக்கும் திறமை மீது நம்பிக்கை வைத்து, மற்றொரு நல்ல வழியை பின்பற்றி, லட்சியத்தை அடைய முயற்சியுங்கள். தோல்விதான் நமக்கிருக்கும் திறனை வெளிப்படுத்தும் கருவி என்பதை உணருங்கள். நீங்கள் விரும்பியதே கிடைத்துவிட்டால், உங்கள் மனத் திடம் வெளிப்படாது. உங்கள் மீதான நம்பிக்கை பயனற்றுப் போகும்.


உங்களைப் பற்றி உங்கள் தோல்வியில்தான் நீங்கள் முழுமையாக அறிய முடியும்.


பாலிடெக்னில் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்தான் ஐன்ஸ்டீன். அவர் விஞ்ஞானியாகவில்லையா. தோல்வி அடைந்துவிட்டோம். நமக்கு எதுவும் தெரியாது என்று அவர் நினைத்திருந்தால் நமக்கு ஐன்ஸ்டீன் என்ற ஒரு நபர் தெரியாமலேப் போய் இருப்பார் அல்லவா?


கேரளாவின் ஒரு சிறிய கிராமத்தில் மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டார் ஒரு இளைஞர். ஆனால் மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததன் மூலமாக அந்த கனவு தகர்ந்தது.


தோல்வியில் துவளாமல், அடுத்து எம்.எஸ்சி., முதுநிலை முடித்து ஐடி துறையில் சேர்ந்தார். ஐடி துறையில் தனது திறமையின் மூலம் மிக உயரிய இடத்தை அடைந்தார். அந்த இளைஞன் வேறு யாருமல்ல, இன்போசிஸ் தலைவர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன்தான். ஒருவேளை கிரிஸ், மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வி அடையாமல் போயிருந்தால், தற்போது கேரளாவின் ஒரு குக் கிராமத்தில், மூக்கொழுகும் குழந்தைக்கு மருந்து எழுதிக் கொடுத்துக் கொண்டிருப்பார். தோல்வியின் காரணமாக உலகமறிந்த சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவராகியுள்ளார். (உதவி  தினமலர்)


எனவே, மாணவர்களே, தோல்வி என்பது வெற்றியின் முதற்படி என்ற பழமொழி பொய்யல்ல. ஒரு வெற்றியை பெற்றவர்கள், அந்த படிகட்டிலேயே அமர்ந்துவிடுவார்கள். தோல்வியினால், அடுத்தடுத்த படிகட்டுகளை அடைந்து உச்சத்தை எட்டுபவர்கள்தான் அதிகமாக ஜெயிக்கிறார்கள்.


எந்த தோல்வியும், நிரந்தரமல்ல. ஒரு கதவு மூடினால், அதனருகில் இருக்கும் மற்றொரு கதவை பலம் கொண்டு திறவுங்கள். நீங்கள் பயணிக்கும் பாதை லட்சியத்தை எட்டுவதாக இருக்கும்.


தோல்வியைக் கண்டு துவளாதீர்கள்.

4/18/2011

யார் உனது சிறந்த நண்பன் ?


உன்னை மிகவும் தாழ்ந்த மட்டத்திற்கு வர ஊக்குவிக்கிறவன், அவனோடு சேர்ந்து முட்டாள்தனமான காரியங்களைச் செய்ய அல்லது தவறான வழிகளில் செல்ல ஊக்குவிக்கிறவன், நீ செய்கிற அசிங்கமான காரியங்களுக்காக உன்னைப் பாராட்டுகிறவன் உன்னுடைய நண்பன் என்பதில் சந்தேகமில்லை...


யாருக்காவது தொற்றுநோய் இருந்தால் நாம் அவனுடன் நெருங்கிப் பழகமாட்டோம், கவனமாக அவனிடமிருந்து விலகிவிடுவோம். பொதுவாக அவனிடமிருந்து அந்த நோய் பிறருக்கும் பரவிவிடாமலிக்க அவனை ஒரு தனி இடத்தில் ஒதுக்கி வைப்பார்கள். தீயொழுக்கம், தவறான நடத்தை, கயமை, பொய், கீழ்மை இவையெல்லாம் எந்தத் தொற்று நோயையும்விட மோசமான தொற்று நோய்களாகும், இவற்றை வெகு கவனமாகத் தவிர்க்க வேண்டும்.
 
எவன் உன்னுடைய தவறான அல்லது அசிங்கிமான செயல்களில் பங்கு கொள்ள மறுக்கிறானோ, தவறான செயல்களைச் செய்யத் தூண்டுதல் ஏற்படும்போது அதை எதிர்த்து நிற்க எவன் உன்னை ஊக்குவிக்கிறானோ அவனே உன் நண்பன். அவனையே உன்னுடைய சிறந்த நண்பனாக நீ கருதவேண்டும். அப்படிப்பட்டவனுடன்தான் நீ பழகவேண்டும், எவனுடன் வேடிக்கைகளில் ஈடுபடலாமோ, எவன் உன்னுடைய தீய குணங்களைப் பலப்படுத்துகின்றானே அவனுடன் அன்று. அவ்வளவுதான்.


இதை நான் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்பவில்லை. நான் யாரை மனத்தில் கொண்டு இதைச் சொல்கிறேனோ அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.


உண்மையில், யார் உன்னைவிட அறிவுடையவர்களாக இருக்கிறார்களோ, யாருடைய கூட்டுறவு உன்னைச் சான்றோனாக்குகிறதோ, உன்னை நீ அடக்கி ஆளவும், முன்னேறவும், நன்றாகச் செயல்படவும், விஷயங்களை மேலும் தெளிவாகக் காணவும் உதவுகிறதோ அவர்களையே நீ நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


இறுதியாக, நீ பெறக்கூடிய மிகச் சிறந்த நண்பன், எல்லாவற்றையும் சொல்லக்கூடிய, உன்னை முற்றிலும் திறந்துகாட்டக்கூடிய நண்பன் இறைவனே அல்லவா? எல்லாக் கருணையின் ஊற்றும், திரும்பவும் செய்யாவிட்டால் நமது பிழைகளையெல்லாம் துடைத்துவிடக்கூடிய சக்தியின் ஊற்றும், உண்மையான சித்திக்கு வழியைத் திறப்பவனும் அவனே அல்லவா? எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக்கூடியவனும், பாதை‌யில் தவறாமல், தடுமாறாமல், வீழ்ந்துவிடாமல், இலட்சியத்தை நோக்கி நேரே நடந்துசெல்ல உதவுகிறவனும் அவனே. 


அவனே உண்மையான நண்பன், வாழ்விலும் தாழ்விலும் நீங்காத நண்பன், உன்னைப் புரிந்துகொள்ளக்கூடிய, குணமாக்கக்கூடிய நண்பன், வேண்டும்போது எப்பொழுதும் ஓடிவரும் நண்பன். நீ மனப்பூர்வமாக அழைத்தால் உனக்கு வழிகாட்டவும், உன்னைத் தாங்கவும் அவன் எப்பொழுதும் இருப்பான் - அதோடு உண்மையான முறையில் உன்னை நேசிப்பான். 
நன்றி  வெப்துனியா. 

4/08/2011

"செய் அல்லது செத்து மடி " ஹசாரே ஆவேசம்


 ""சாவை கண்டு நான் பயப்படவில்லை. நான் இறந்து விட்டால், எனக்காக அழுவதற்கு, குடும்பம் என்று யாரும் இல்லை. நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே, போராடி வருகிறேன். ஊழலுக்கு எதிராக இரண்டாவது சுதந்திர போராட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். அரசு துறைகளில் வெளிப்படையான அணுகுமுறை அவசியம். நேர்மையான அதிகாரிகளை, அடிக்கடி இடமாற்றம் செய்வது தடுக்கப்பட வேண்டும். இந்த நோக்கங்கள் நிறைவேறும் வரை, என் போராட்டத்தை தொடர்வேன்!'' - அன்னா ஹசாரே

* அன்னா ஹசாரே, மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், 1940ல் பிறந்தவர்.

* இந்திய ராணுவத்தில் டிரைவராக பணிபுரிந்தவர். தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போது எல்லாம், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, ஆச்சார்யா வினோபா பாவே போன்றோரின் புத்தகங்களை படித்தார். இதனால், இவருக்கு சமூக சேவை செய்வதிலும், அஹிம்சையிலும் ஆர்வம் ஏற்பட்டது.

* 1978ல், ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, முழு நேர சமூக சேவகரானார்.

* ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராட்டங்களை நடத்தினார். இவரின் பெரும்பாலான போராட்டங்கள், ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரானதாக அமைந்தது.

* இவரின் தீவிரமான போராட்டம் காரணமாக, 1995-96ல், அப்போதைய மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியாக இருந்த சிவசேனா - பா.ஜ., அரசை சேர்ந்த ஊழல் அமைச்சர்கள் இரண்டு பேர் நீக்கப்பட்டனர்.

* 2003ல், ஹசாரேயின் போராட்டம் காரணமாக, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த நான்கு பேருக்கு எதிராக, மகாராஷ்டிரா அரசு, விசாரணை கமிஷன் அமைத்தது.

* இவரின் போராட்டங்களால் கடும் அதிருப்தியடைந்த சரத் பவார், பால் தாக்கரே போன்ற அரசியல்வாதிகள், அவரை "பிளாக் மெயில் மனிதர்' என கடுமையாக விமர்சித்தனர்.

* தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்.

* ஹசாரேயின் பெரும்பாலான போராட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்களாகவே இருந்தன.

* ஊழலுக்கு எதிரான இவரின் போராட்டங்களுக்கு மேதா பட்கர், கிரண் பேடி, ஆன்மிக தலைவர்கள் சுவாமி ராம்தேவ், சுவாமி அக்னிவேஷ் போன்றோர், தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

* இவருக்கு சொத்து இல்லை; வங்கியில் ஒரு பைசா கூட சேமிப்பும் இல்லை என்பது பெரும்பாலானோருக்கு தெரியாத விஷயம்.

* அகமது நகர் மாவட்டம், சித்தி நகர் கிராமத்தில் யாதவபாபா கோவில் அருகே உள்ள, பத்துக்கு பத்து சதுரடி கொண்ட ஒரு சிறிய அறை தான் இவரது வசிப்பிடம்.

* இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு மனிதரா என, ஆச்சர்யப்பட வைக்கும் இவர் தான், தற்போது, ஊழலுக்கும், ஊழல்வாதிகளுக்கும் எதிராக, மிகப்பெரிய புரட்சியை நிகழ்த்தி வருகிறார்.

நாட்டை அவமதித்த ஊழல்கள்

1975ம் ஆண்டு: லாட்டரி ஊழல்

1990-99ம் ஆண்டு:போபர்ஸ் ஊழல்

1992ம் ஆண்டு: ஹர்ஷத் மேத்தா ஊழல்

1993ம் ஆண்டு: ஹவாலா

1996ம் ஆண்டு: பீகார் கால்நடை தீவன ஊழல். முன்னாள் அமைச்சர் சுக்ராம் மீதான டெலிகாம் ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது.

1999 முதல் 2001 வரை பங்கு சந்தை புரோக்கர் கேதன் பரேக் செய்த பங்கு சந்தை ஊழல் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது. 2008ல் இவர் தண்டிக்கப்பட்டார்.

2001ம் ஆண்டு: ராணுவத்துறையில் நடந்த ஆயுத பேர ஊழலை தெகல்கா வார இதழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இதில், முன்னாள் அமைச்சர் பங்காரு லட்சுமணன், ஜெயா ஜெட்லி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2003ம் ஆண்டு: போலி முத்திரைத்தாள் ஊழல் (அப்துல் கரீம் தெல்கி)

2005ம் ஆண்டு: உணவுக்காக எண்ணெய் தொடர்பான முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் சம்பந்தப்பட்ட ஊழல்.

2009ம் ஆண்டு: பல்வேறு இடங்களில் சொத்துக்களை குவித்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மீதான 4,000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

2010ம் ஆண்டு: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல்.
செய்தி உதவி தினமலர்.

4/02/2011

சக்தே இந்தியா...



2011 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற நம் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்..

3/21/2011

முடிவெடுக்கக் கற்கலாமா? -2 ( வை.கோ.. கிட்ட கேட்கலாமான்னு சொல்லாதீங்க)


முடிவெடுப்பதற்கு நம்முன் இருக்கும் விஷயங்களை மூன்று கட்டங்களில் அடக்கிவிடலாம். 
1. உடனே...உடனே...
2. இப்போதைக்கு வேண்டாம்.
3. வேண்டவே வேண்டாம்... 
உதாரணங்கள் மூலம் இதை எளிதாக புரிந்துகொள்ளலாம்.

சிலருக்கு டூவீலர் என்றாலே பயம் வந்துவிடும் . ஆக்சிடென்ட், டிராபிக், டஸ்ட் என ஆயிரம்  காரணம் சொல்வார்கள். இவற்றுக்கு பயந்து டூவீலர்  ஓட்டுவதை கற்காமல்விட்டால் வளர்ந்த பிறகு ரொம்ப கஷ்டமாகிவிடும். எனவே இதைப்போல் உள்ளவற்றை “  உடனே... உடனே ” கட்டத்தில் போடவேண்டும்.

ரு கட்டத்தில் எல்லா மாணவர்களுக்கும் வருகிற  எண்ணங்களுள் ஒன்று காதல். அதாவது ஈர்ப்பு. இது படிப்புச் சிந்தனையைக் கலைக்கும் என்பதால் இதை தவிர்க்கலாம். படிக்கிற வயதில் “நட்பு ”  என்கிற உறவைத் தாண்டி வேறு பக்கம் போகவே கூடாது. இதை  “ இப்போதைக்கு வேண்டாம் ” கட்டத்தில் போட்டு வைக்கலாம்.

ந்தப் பிரச்சனை எல்லா மாணவர்களுக்கும் வரக்கூடியதல்ல. ஒரு சிலருக்கு மட்டுமே வரும். ஆனாலும் மிகவும் முக்கியமானது தீய நட்பால் புகைப்பிடித்தல், போதை போன்ற மோசமான பழக்கங்களுக்கு அடிமையாக நேரிடும். அப்பழக்கம் அம்மாணவனை மட்டுமல்ல அவனுடைய குடும்பத்தையே சீரழித்துவிடும்.
 இதை “ வேண்டவே வேண்டாம் ” கட்டத்தில் போட்டு விடுங்கள்.

ந்தக் கட்டங்களில் உள்ள விஷயங்களை நாம் திரும்பி பார்க்ககூடாது. குப்பைத் தொட்டி சமாச்சாரங்கள்  என்று ஒதுக்கிவிட வேண்டும்.
மேலும் சில முடிவுகளை அடுத்த தன்னம்பிக்கை பதிவில் காண்போம்.
                          
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....