ஒரு சின்னக் குழந்தை புத்தகத்தை எடுக்கப் போனால் உடனே பெற்றோர்கள், வேண்டாம்பா, அந்த புத்தகத்தை அங்கேயே வைத்து விடு கிழித்துவிடப் போகிறாய் என எச்சரிப்பதை பார்த்திருப்போம். ஆனால் இது தவறான அணுகுமுறை என்றே அறிஞர்கள் சொல்லுகிறார்கள். குழந்தைகளுக்கு புத்தகத்தின் மகத்துவத்தை பொறுமையாக சொல்லுங்கள் என்கிறார்கள் அவர்கள்.
மாணவ பருவத்தில் சில பெற்றோர்கள் நீ, மருத்துவம் அல்லது பொறியியல் தான் படிக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை தங்கள் பிள்ளைகளிடம் திணிக்கிறார்கள். இதுவும் தவறான அணுகுமுறையே. பிள்ளைகளை அவர்களின் விருப்பப்படியே படிக்க வைக்கவேண்டும் அப்போதுதான் அவர்களின் தனித்திறன் வெளிப்படும்.
பெரும்பாலும் சில பெற்றோர்கள் வறுமையாலும், வாய்ப்பின்மையாலும், தான் படிக்கமுடியாத படிப்பை தன் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று விருப்பப்படுகிரார்கள். இதுவும் சரியல்ல.
ஒரு மாணவனின் திறன், விருப்பம், இயல்பு, படிக்கும் பழக்கம், ஈடுபாடு போன்ற பல விஷயங்கள் அவன் படிப்பை முடிவு செய்பவை. அனால் முற்றிலும் எதிமறையான இயல்புடைய பிள்ளைகளை தங்கள் விருப்பங்களை சுமக்கும் சுமைத்தூக்கியாக சில பெற்றோர்கள் செய்வது நல்லதல்ல.
பெற்றோர்கள், பிள்ளைகள் அவர்கள் படிக்க விரும்பும் படிப்பில் அடைகிற வெற்றியை, ஆர்வமில்லாத படிப்பின் மூலம் என்றுமே அடைய முடியாது என உணரவேண்டும். தங்கள் பிள்ளைகள் எந்தப் படிப்பை விரும்புகிறார்களோ அதையே படிக்க வைக்கவேண்டும்.
விரும்பி படிக்க வேண்டிய கல்வியைத் தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் வாழ்வின் உச்சத்திற்கு போவார்கள் என்பதே உண்மை.
விரும்பி படிக்க வேண்டிய கல்வியைத் தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் வாழ்வின் உச்சத்திற்கு போவார்கள் என்பதே உண்மை.
ReplyDeleteரொம்ப சரியா சொன்னீங்க.
:)
ReplyDelete//விரும்பி படிக்க வேண்டிய கல்வியைத் தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் வாழ்வின் உச்சத்திற்கு போவார்கள் என்பதே உண்மை
ReplyDelete//
200 % உண்மை
இன்று என் வலையில்
ReplyDeleteHamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக
நல்லதொரு ஆசிரியராக பொறுப்புடன் பதிவிட்டிருக்கீங்க. நன்றி சகோ!
ReplyDeleteத.ம 3
ReplyDeleteஉண்மை. !! முற்றிலும் உண்மைதான் கருண். தன் விருப்பத்திற்கு மாறாக நடைபெறும் செயல்கள் யாவுமே அவ்வண்ணமே அமையும்..! நன்றி நண்பர் கருண்.!!
ReplyDeleteஎனது வலையில் இன்று:
ReplyDeleteமாவட்டங்களின் கதைகள் - திருவள்ளூர் மாவட்டம்
நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
வழிகாட்டலாமே தவிர திணிப்பது தவறுதான்!
ReplyDeleteஅனுபவம் தந்த பாடங்களோ நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஎன் மகள் புத்தகத்தை கிழித்ததில்லை, ஆகையால் எதுவும் சொன்னதில்லை.. ஆனால் என் மகன் புத்தகத்தை அக்கு வேறு ஆணி வேறாக்கி விடுகிறான்.. நானும் எவ்வளவோ சொல்லி பார்க்கிறேன்... எடுபட மாட்டேன் என்கிறது.. அவனுக்காக கிழிக்க முடியாத புத்தகங்களை வாங்கி கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கிழியும் பழக்கம் குறைந்து வருகிறது
ReplyDeleteநன்றாகச்சொல்லியிருக்கீங்க
ReplyDeleteநன்று.
ReplyDeleteத.ம.5
விரும்பி படிக்க வேண்டிய கல்வியைத் தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் வாழ்வின் உச்சத்திற்கு போவார்கள் என்பதே உண்மை.//
ReplyDeleteசத்தியமான வார்த்தையும், நூறு சதவீதம் உண்மையும் கூட, அருமையா சொன்னீர் வாத்தி...!!!
கல்வியை அவரவர் விருப்பத்திற்க்கு விட்டுவிட வேண்டும் அப்போதுதான் அது தரமானதாக இருக்கும்...
ReplyDeleteதேங்க்ஸ் மச்சி... யூஸ் ஆகும்...
ReplyDeleteதிணிக்கப்படாத அக்கறைகளே தேவை..
ReplyDeleteபகிர்விற்கு நன்றி.
//பெற்றோர்கள், பிள்ளைகள் அவர்கள் படிக்க விரும்பும் படிப்பில் அடைகிற வெற்றியை, ஆர்வமில்லாத படிப்பின் மூலம் என்றுமே அடைய முடியாது என உணரவேண்டும். தங்கள் பிள்ளைகள் எந்தப் படிப்பை விரும்புகிறார்களோ அதையே படிக்க வைக்கவேண்டும்.//
ReplyDeleteமுற்றிலும் உண்மையான வார்த்தைகள்..
நன்றி நண்பரே..பகிர்விற்க்கு..
நட்புடன்
சம்பத்குமார்
தமிழ் பேரன்ட்ஸ்
கருண் நீங்கள் சொல்வது சரி...
ReplyDeleteவளர்ந்து விட்ட மேலை நாடுகள் பல ஆண்டுகளாய் பின் பற்றுவது அது..
இன்றைய நம் நாட்டில் அது எந்த அளவு எல்லா பெற்றோருக்கும் சாத்தியம் என்பது பெரிய கேள்விக்குறியே?
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள்... இன்றைக்கு மைனஸ் ஓட்டு வாங்காததற்கு...
ReplyDeleteவிரும்பி படிக்க வேண்டிய கல்வியைத் தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் வாழ்வின் உச்சத்திற்கு போவார்கள் என்பதே உண்மை.
ReplyDeleteநல்ல கருத்து நண்பரே
த.ம 10
ரொம்ப நல்ல கருத்துகள்
ReplyDelete