Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/30/2011

முதல்வர் 'ஜெ'- க்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து..நமக்கும்தான்..


நம் தமிழ் நாட்டில் விளை நிலங்களின் பரப்பு இப்போது பெரிதும் குறைந்துவிட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டில் 53 லட்சம் எக்டேராக இருந்த விளையும் நிலங்களின் பரப்பு இப்போது 48 லட்சம் எக்டேராகக் குறைந்துள்ளதே இதற்கு சாட்சி.

இதற்கு என்ன காரணங்கள் என ஆராய்வோம்:

தொழிற்துறையின் அபார வளர்ச்சி, 
ரியல் எஸ்டேட் தொழில், 
நகர மயமாதல், 
நிலங்கள் அதிக விலைக்கு போகுதல்,
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்றவைகள்தான்.

விவசாயத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையால் விளைநிலங்கள் எல்லாம் விலை நிலங்களாகி மாறிவிட்டன. பெரும்பாலும் மா நகரங்களைச் சுற்றியுள்ள மாவட்டங்களில்தான் இந்த விளைநிலங்கள் அதிகமாகக் குறைந்துள்ளன.

முந்தைய அரசு இந்த நிலங்களைக் காப்பாற்ற ஓர் அரசாணை அறிவிக்கப்பட்டது. விலை நிலத்தை வாங்குவோர் அந்த மாவட்டத்தில் உள்ள வேளாண் இயக்குனரிடம் 'இந்த நிலத்தில் பயிர் எதுவும் செய்யமுடியாது' என தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். ஆனால் சில ரியல் எஸ்டேட் பேர்வழிகள் சில தகுடுதித்தங்கள் செய்து அந்த என்.ஒ.சி யை வாங்கி விலை நிலங்களை விற்க ஆரம்பித்தார்கள். காலப் போக்கில் அந்த உத்தரவு கைவிடப் பட்டது.

விலை நிலங்கள் குறைந்துகொண்டு வருவதால் உற்பத்தி குறைந்து உணவு பொருள்களின் விலை அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளது. எனவே விளைநிலங்கள் அழிக்கப்படுவதை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரவேண்டும். இதை கண்காணிக்க தனியாக ஆணையமும் அமைத்தால் நன்றாக இருக்கும்.

பல இலவச(?) திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டும் முதல்வர்  தமிழகத்தில் விளைநிலங்களிலும், ஏரிகளிலும் வீடு கட்ட தடை விதிக்க வேண்டும். ரியல் எஸ்டேட் வியாபாரத்தையும் தடை செய்யவேண்டும். 

செய்வார்களா? 
இல்லை கண் கெட்டப் பிறகு சூர்யநம்ஸ்காரம் செய்வார்களா?

17 comments:

  1. இந்நிலை நீடித்தால் நாளை உணக்கு பரிதவிக்கும் நிலை கண்டிபபாக வரும்...

    ReplyDelete
  2. இனி அடுத்து கண்டிப்பா அதிமுக இல்லை, அடுத்து வில்லன் திமுகதான் அவ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  3. எவன் கவலைப்பட்டா இதுக்கு எல்லாம்.. அது எல்லாம் ௩௦ வருசத்துக்கு முன்னாடியே முடிஞ்சு போன கதை

    ReplyDelete
  4. //பல இலவச(?) திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டும் முதல்வர் தமிழகத்தில் விளைநிலங்களிலும், ஏரிகளிலும் வீடு கட்ட தடை விதிக்க வேண்டும். ரியல் எஸ்டேட் வியாபாரத்தையும் தடை செய்யவேண்டும்.
    //

    நடக்குற காரியமா சொல்லுங்க ..

    ReplyDelete
  5. nichayam vilai nilangal kurainthaal urpathi kuraiyum. Vilaivaasi uyarum.

    ReplyDelete
  6. மச்சி.... இது சரிப்பட்டு வராது...

    ReplyDelete
  7. கண்ணெல்லாம் கெட்டு பல வருசம் ஆச்சு...எங்க ஊர்ல விவசாய நிலம் பாதி அழிஞ்சிருச்சு....

    ReplyDelete
  8. நில விற்பனையை நிறுத்தினால் போதும்..அனைத்தும் விளைநிலமாகும்.

    ReplyDelete
  9. இல்லை கண் கெட்டப் பிறகு சூர்யநம்ஸ்காரம் செய்வார்களா?

    >>
    ஹி ஹீ இது சொல்லிதான் தெரியனுமா மாப்ளே!

    ReplyDelete
  10. மாப்ள வெறும் கேள்வி பத்தாது இறங்கி ஆட ரெடியா சொல்லு...!

    ReplyDelete
  11. //விக்கியுலகம் said...

    மாப்ள வெறும் கேள்வி பத்தாது இறங்கி ஆட ரெடியா சொல்லு...!////

    நல்ல கேள்வி மாம்ஸ்....
    #ஹி ஹி ஹி...

    ReplyDelete
  12. விளைய நிலங்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் கரங்களில் விளையுது கையூட்டு .....

    ReplyDelete
  13. வணக்கம் பாஸ்,

    நல்லதோர் பதிவு,
    விளை நிலங்களின் அளவு குறைகின்றதே என்பதற்காக ரியல் எஸ்டேட் துறையின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் செயற்பாட்டோடு என்னால் உடன்பட முடியவில்லை.

    காரணம் ரியல் எஸ்டேட் முயற்சிகளைத் தடுத்தால் மக்கள் குடியிருப்புக்களில் சனத் தொகை நெரிசல் அதிகமாகும்.

    ஆகவே இதற்கு மாற்றீடாக முதல்வர் ஏதும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதே சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  14. //ரியல் எஸ்டேட் வியாபாரத்தையும் தடை செய்யவேண்டும்//

    ஆளாளுக்கு ப்ரோக்கர் என்று கிளம்பிடுறாங்க...

    ReplyDelete
  15. இந்நிலை நீடித்தால் நாளை உணக்கு பரிதவிக்கும் நிலை கண்டிபபாக வரும்

    ReplyDelete
  16. இப்பவெல்லாம் பொத்திக்கிட்டு இருந்துட்டு, பொறவு வந்து சிறையில போட்டு அடிச்சி புடுங்குவாங்க.

    அப்ப தானே அவங்களுக்கு பேரு கெடைக்கும்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"