கருக்கலிலே களையெடுக்கப் போன
என் ஆத்தா
பொழுதுசாய வீடு வரும்...!
சாயங்காலம் நான் வருவேன்...!
பஜார் தெரு டாஸ்மாக் கடையிலே
கடன் வாங்கி சாராயம் குடிச்சிட்டு
இருட்டினதும் தள்ளாடி அப்பன் வரும்...!
கூலிப் பணம் கேட்டு
ஆத்தாவ இழுத்தடிக்கும்
உடம்பு முழுக்க வீக்கம் கொப்பளிக்கும்...!
பயந்து சுருண்டு
படுக்க நான் போகையிலே
சட்டியில கேப்பக் கூழ உப்புப்போட்டு,
ஏலபுள்ள ...
கஞ்சி குடிச்சித் தூங்குன்னு
வெரசா கரைக்கும்...!
களை புடுங்கிக்
கையெல்லாம் கொப்பளமும் காய்ப்பும் ...!
அப்பன் அடிச்சாலும்
கை கொப்பளம் போட்டாலும்
என்னைத் தொட்டு ஆசையா தடவுறதுல
உன் வலியெல்லாம் பறந்துடுமா?
எனக்கு தெரியும் ஆத்தா
வலியெல்லாம் ஒளிச்சுவச்சு
உம் மனசுல வடுவாக நிக்கிறது...!
Repost.
துறவிகளால் கூட துறக்க முடியாதது தாயன்புதான். உலகில் மிக உன்னதமானது அது.
ReplyDeleteஅம்மா என்றாலே அன்புதான்
ReplyDeleteநெஞ்சை கனக்க வைத்துவிட்டது உங்கள் கவிதை
ReplyDelete// அப்பன் அடிச்சாலும்
ReplyDeleteகை கொப்பளம் போட்டாலும்
என்னைத் தொட்டு ஆசையா தடவுறதுல
உன் வலியெல்லாம் பறந்துடுமா?//
மனதை உருக்கும் வரிகள்
பாராட்டுக்கள்!
புலவர் சா இராமாநுசம்
//பயந்து சுருண்டு
ReplyDeleteபடுக்க நான் போகையிலே
சட்டியில கேப்பக் கூழ உப்புப்போட்டு,
ஏலபுள்ள ...
கஞ்சி குடிச்சித் தூங்குன்னு
வெரசா கரைக்கும்...!//
கணக்க வைத்த வரிகள்..
பிரசவ வலியையே தாங்கிக்கொண்டு பிறந்தவுடன் புன்னகைதவளாயிற்றே?
ReplyDeleteஅருமையான,வாழ்க்கையை பிரதிபலிக்கும் கவிதை-வாழ்த்துக்கள்
ReplyDeleteமனதை கனக்கச்செய்தகவிதை
ReplyDeleteஉள்ளத்தை வருடும் வரிகள்....
ReplyDeleteஒரு ஏழை வீட்டுச்சம்பவங்கள் கவிதை வரிகளில் பளிச்சிடுகிறது...
இப்படி ஏகப்பட்ட குடும்பங்கள் இந்தியாவில் உள்ளது..
இந்த நிலை மாறும் வரவேண்டும்...
//அப்பன் அடிச்சாலும்
ReplyDeleteகை கொப்பளம் போட்டாலும்
என்னைத் தொட்டு ஆசையா தடவுறதுல
உன் வலியெல்லாம் பறந்துடுமா?//
தாயன்பைச் சொல்லும் வரிகள் மனதில் இறங்கி கனமாக்குகிறது.
வலிகள் என்றுமே வடுக்களாக தான் இருக்கும்... கண்ணாடியின் ஓட்ட வைக்கப் பட்ட விரிசல் போல
ReplyDeleteமனதைகரைத்த கவிதை,கேப்பைகூழ் கரைக்கையில் மனது சேர்ந்து கரைகிறது.
ReplyDeleteகொப்புளங்கள் விழுந்த அம்மாககளின் கைகள் இந்த சமூகத்தில் சாதித்தவை நிறைய,நிறையவே/
கண்ணுல தண்ணி வரவச்சிட்டியேய்யா வாத்தி...!!!
ReplyDeleteகண்ணுல தண்ணி வரவச்சிட்டியேய்யா வாத்தி...!!!
ReplyDeleteஅப்ப நீங்க சொன்னது நம்ம அம்மாவைப் பத்தி இல்லையா...
ReplyDeleteஅருமை .
ReplyDeleteதாய்மை எங்கும் ஒன்றுதான். மனதைத் தொட்டது கவிதை. பிரமாதம் ஐயா...
ReplyDeleteGood kavithai
ReplyDeleteஅம்மாவின் அன்புக்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை
ReplyDelete:)
ReplyDelete