Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/29/2011

யார் இப்போது முட்டாள்? - சிறுவர் கதைகள்


அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா ஒரு நாள் ஒரு குறுகலான ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்.

அதே பாதையின் மறு முனையில் இருந்து ஒரு முரட்டு ஆள் வந்து கொண்டிருந்தான். எதிரில் வருவது யார் என்று அறிந்த அந்த முரடன் வேண்டுமென்றே வழியை மறைத்துக் கொண்டு வழி விடாமல் நின்றான்.

வழியை விடுங்கள் என்று பெர்னாட்ஷா அமைதியாக கேட்டார்.

அந்த முரடனோ முட்டாள்களுக்கு வழிவிடுவது என் வழக்கமில்லை என்று கூறி வழியை மறைத்துக் கொண்டான்.

பெர்னாட்ஷா சிரித்துக்கொண்டே எனது பழக்கம் வேறு விதமானது, ' நான் முட்டாள்களுக்கு வழிவிட்டு விலகி நிற்பேன்' என்று கூறிவிட்டு பாதையில் ஒரு புறமாக விலகி நின்றார்.

மிகவும் சாதுர்யமாக அவமானப்படுத்தப்பட்ட அந்த முரடன் பெர்னாட்ஷாவை முறைத்துக்கொண்டு அவரைக் கடந்து சென்றான்.

இது எப்படி இருக்கு?

17 comments:

  1. //பெர்னாட்ஷா சிரித்துக்கொண்டே எனது பழக்கம் வேறு விதமானது, ' நான் முட்டாள்களுக்கு வழிவிட்டு விலகி நிற்பேன்' என்று கூறிவிட்டு பாதையில் ஒரு புறமாக விலகி நின்றார்.//

    அருமையான கருத்து..

    இதைதான் துஷ்டனைக் கண்டால் தூரவிலகு என்பார்களோ..?

    பகிர்விற்க்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. இது போல் பெர்னார்ட் ஷா குறித்து பல கதைகள் இருக்கிறது.. அதை தேடி எடுத்து ஒரு தொடர் பதிவாய் போடுங்களேன்

    ReplyDelete
  3. அருமையான தகவல்கள் நண்பரே..

    ReplyDelete
  4. அருமையான ஷா கதை நண்பரே...

    ReplyDelete
  5. காட்சி கண்ணுக்குள் தெரிய சிரிப்பு வந்தாலும் நல்லதொரு நீதி !

    ReplyDelete
  6. ஹே... ஹே... நீங்களும் பெர்னார்ட் ஷாவும் சந்தித்துக்கொண்ட அனுபவத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்... இப்ப சொல்லுங்க யார் முட்டாள்...?

    ReplyDelete
  7. ////பெர்னாட்ஷா சிரித்துக்கொண்டே எனது பழக்கம் வேறு விதமானது, ' நான் முட்டாள்களுக்கு வழிவிட்டு விலகி நிற்பேன்' என்று கூறிவிட்டு பாதையில் ஒரு புறமாக விலகி நின்றார்./////

    பெர்னாட்ஷா உண்மையில் மேதைதான்

    ReplyDelete
  8. ஏன்னா அவரு பெர்னாட்ஷா

    ReplyDelete
  9. மேதை மேதை தாம்யா

    ReplyDelete
  10. நல்லாத்தான் சார் இருக்கு. இதே மாதிரி இப்போ சொன்னா என்ன ஆகும்? வடிவேலு மாதிரி வாயில் தக்காளி சட்னி அல்லவா வரும்?

    ReplyDelete
  11. அருமை!...வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு ....

    ReplyDelete
  12. எல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ ....

    ReplyDelete
  13. சுவையான எடுத்துக் காட்டு!
    நல்ல பதிவு!





    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"