ஞாபக சக்தி என்பது பல மாணவர்களின் இன்றைய பிரச்சனை. சில மாணவர்கள் என்னிடம், சார் நான் படிச்சேன், அப்ப ஞாபகம் இருக்கு ஆனா தேர்வு அறையில் மறந்து போய்விடுகிறது, என்ன செய்ய என்று கேட்டு இருக்கிறார்கள். அப்படி பட்ட மாணவர்களுக்கு சில ஆலோசனைகள்..
1. முதலில் படிக்கும் போது சிந்தனைகள், எண்ணங்கள் ஆகியவை படிக்கும் பாடத்தில் இருக்க வேண்டும்.
2. படிக்கும் பாடங்களை சில பத்திகளாக 'பிரித்து படிக்க' கற்றுக் கொள்ளவேண்டும்.
3. வகுப்பில் பாடங்கள் நடத்தும்போது உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆசிரியர் கூறும் உதாரணங்கள் தேர்வு நேரத்தில் நினைவுக்கு வரலாம்.
4. போதுமான தூக்கம் கண்டிப்பாகத் தேவை, சரியாக தூங்காமல் படித்தால் அது ஞாபக மறதியை ஏற்படுத்தும்.
5. ஒரே இடத்தில் படிக்காமல், இடம் மாறி சிறிது நேரம், நடந்து கொண்டு சிறிது நேரம் என படிக்கலாம்.
6. படங்கள், வார்த்தைகளோடு ஒத்த நகைச்சுவைகள், இடங்கள் என சில எடுத்துக் காட்டுகள், குறிப்பிட்ட இணைப்பு வார்தைகள் என அன்றாடம் நிகழும் நிகழ்ச்சிகள் என ஞாபகம் இருக்கிறபடி படிக்கலாம்.
7. படிக்கும் பொது ஏற்படும் எண்ணங்கள் குறிப்பேட்டில் எழுது வைத்து படிக்கலாம்.
8. படித்ததை ஒருமுறை அப்போதே எழுதி பார்கவேண்டும். மறு படியும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து படித்த பாடங்கள் ஞாபகத்தில் இருக்கிறதா என சோதித்து கொள்ள மறுபடியும் ஒரு முறை எழுதிப் பார்க்க வேண்டும்.
9. மூளையை சுறு சுறுப்பாக்கும் விளையாட்டுகள் அவ்வப்போது விளையாடவேண்டும்.
முறையாக பயிற்சி எடுத்து, திட்டமிட்டு படித்தால் (கற்றுக்கொண்டால்) வெற்றி நிச்சயம்.
நல்ல அறிவுரைகள், நல்ல பதிவு நண்பா.
ReplyDeleteஇவைகளை பின்பற்றினால் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம்தான்...
ReplyDeleteமாணவர்களின் நலனில் அக்கறைப் பதிவு.
ReplyDeleteநம்ம தளத்தில்:
ஹையோ! எவ்ளோ அருமையான படங்கள்! சூப்பரோ சூப்பர்!!
படிக்கிற பசங்களுக்கு ஞாபகம் வச்சுக்க வழி சொல்லியிருக்கிறியள் Good. நானும்கூட கஜனி சூரியாதான் (with shorttime memory), எனக்கும் கொஞ்சம் ஆலோசனை சொல்லுங்களேன்.
ReplyDeleteபடிப்பதை தவிர்த்து விட்டு, கற்றுக் கொண்டால் மறக்கவே மறக்காது என்பது என் எண்ணம்
ReplyDeleteநல்லதொரு மாணவர்களுக்கான அறிவுரை-ஆலோசனைப் பதிவு.. பயன்மிக்க பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி..! கருன்..!!
ReplyDeleteஎனது வலையில் இன்று:
மாவட்டங்களின் கதைகள் - தேனி மாவட்டம் (Theni)
நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
சூர்யா ஜீவாவின் கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன். !!
ReplyDelete10 .இது போன்ற அறிவுரைகள் நமது நன்மைக்காக என்பதை மாணவர்கள் உணரவேண்டும் ....
ReplyDeleteஅருமை.....
ReplyDeleteவாத்தியார் அருமையா டிப்ஸ் தந்துருக்காரே பலே....!!!
ReplyDeleteகபடி விளையாடலாமா...?
ReplyDeleteஎழுதிப் பார்த்து படிப்பது என்பது மிகச் சிறந்த பயிற்சி அதற்காக தான் ஹோம்வொர்க் கொடுப்பது. ஆனால் இந்த ஹோம்வொர்க் கொடுக்கும் ஆசிரியர்கள், வீட்டில் வாங்கும் வசவு இருக்கிறதே!!
ReplyDeleteமாப்ள இதுல நடந்துகிட்டே படிப்பதில் எனக்கு உடன்பாடில்லை...மற்றவை செம!
ReplyDeleteவணக்கம் ஐயா. பதிவிற்கு நன்றி ஐயா
ReplyDeleteசூப்பர். ஆனால் நான் படிச்சு முடிச்சுட்டேனே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteஇது போன்ற அறிவுரைகள் நமது நன்மைக்காக என்பதை மாணவர்கள் உணரவேண்டும் .
ReplyDeleteத.ம.7
ReplyDeleteநன்று.
நல்ல ஆலோசனைகள் பாஸ்
ReplyDeleteநல்ல கருத்து நண்பரே
ReplyDeleteத.ம 7
Nallarukku Sago.
ReplyDeleteVote potachi Sago.
ReplyDeleteஆலோசனைகள் அனைத்துமே அருமை நண்பரே..
ReplyDeleteபகிர்வு அருமை வாத்தியார் சகோ. மிக்க நன்றி பகிர்வுக்கு ........
ReplyDeleteபள்ளியில நான் படிக்கும் போது இப்படியொரு ஆலோசனை சொல்ல ஆளில்லாம போச்சி.
ReplyDeleteஇப்ப தெரிஞ்சி நான் பண்றதுங்க கருன்.
நல்ல அறிவுரைகள்... நல்ல பதிவு நண்பா...
ReplyDelete