Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/17/2011

ஒரு கேள்விக்கு பத்து விடைகள்..(மகான்களின் வாழ்க்கையில்)


புகழ் பெற்ற அறிஞரான ஹஸ்ரத் அலி அவர்களைக் காண ஒரு நாள் பத்து அறிஞர்கள் வந்தார்கள்.

அவர்களில் ஒருவர் ஹஸ்ரத் அலியிடம் "நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்க வந்தோம், எங்கள் பத்து பேருக்கும் தனித் தனியே உங்களால் பதில் தர முடியுமா?" என்று கேட்டார்.

அதற்கு ஹஸ்ரத் அலி தாராளமாய் கேளுங்கள் என்றார்.

செல்வம், அறிவு இரண்டில் எது சிறந்தது? ஏன்? இதுதான் கேள்வி என்றார் அறிஞர்களில் ஒருவர்.

ஹஸ்ரத் அலி பத்து பேருக்கும் பதில் சொன்னார், அவை..

1. அறிவானது ஞானிகள், மகான்கள், தீர்க்கதரிசிகள் இவர்களது பரம்பரைச் சொத்து, ஆனால் செல்வமோ கொடுங்கோலரின் ஆயுதம். ஆகவே அறிவே சிறந்தது.

2. உங்களிடம் செல்வம் இருந்தால் நீங்கள் அதைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் அறிவோ உங்களை எப்போதும் காப்பாற்றும். ஆகவே அறிவுதான் சிறந்தது.

3. செல்வனுக்கு எப்போதும் விரோதிகள் அதிகம். ஆனால் அறிஞனுக்கோ நண்பர்கள் அதிகம். ஆகவே அறிவுதான் சிறந்தது.

4. செல்வம் பிறருக்கு கொடுக்க, கொடுக்க குறையும், ஆனால் கல்வியோ அதிகரித்துக் கொண்டுதான் வரும். ஆகவே அறிவே சிறந்தது.

5. அறிவுள்ளவன் எப்போதும் தன் அறிவை பிறருக்கு வாரி வழங்கிக் கொண்டிருப்பான். அவனிடம் தாராளத் தன்மை இருக்கும். ஆனால் செல்வனிடம் கஞ்சத் தனந்தான் இருக்கும். எனவே அறிவுதான் சிறந்தது.

6. செல்வங்களை திருடர்கள் திருடிக் கொண்டு போக முடியும், ஆனால் அறிவை யாராலும் கொல்லோ அடிக்க முடியாது. ஆகவே அறிவே சிறந்தது.

7. செல்வம் கால ஓட்டத்தில் அழிந்துவிடும் ஆனால் அறிவை கால ஓட்டம ஒன்றும் செய்ய முடியாது. எனவே அறிவுதான் சிறந்தது.

8. செல்வத்திற்கு எப்போதும் எல்லையுண்டு , அளவுண்டு, கணக்கு உண்டு. ஆனால் அறிவுக்கோ எல்லையோ, கணக்கோ இல்லை. எனவே அறிவே சிறந்தது.

9. செல்வம் உள்ளத்தில் ஒளியைப் போக்கி அதை இருளடைய செய்கிறது. விரிந்த மனப்பான்மையை குறுகலாக்குகிறது. ஆனால் அறிவோ இருண்ட உள்ளத்தில் ஒளிப் பாய்ச்சி அதை விசாலப் படுத்துகிறது. ஆகவே அறிவே சிறந்தது.

10. செல்வம் உள்ளச் செருக்கையும் ஆணவத்தையும் ஏற்படுத்துகிறது. அதனால்தானே கடவுள் என்று உரிமை கொண்டாடும் நிலைக்கு மனிதனைக் கீழாக்கி விடுகிறது. ஆனால் அறிவோ, இறைவனே! நாங்கள் உனது அடிமைகள் என்ற பண்பையும், பண்பாட்டையும் வளர்த்து நல்வாழ்வு தருகிறது. என்றார்.

23 comments:

  1. அறிவு எல்லைகள் அற்றது, விரிவடைந்து கொண்டே செல்வது... என்ன அருமையான கருத்து. நல்ல பகிர்விற்கு நன்றி கருன்.

    ReplyDelete
  2. மகான் பற்றி பதிவா? அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  3. அறிவுரைகள் அனைத்துமே ஒவ்வொருவரும் வாழ்வில் அறிந்து கொள்ள வேண்டியவை..

    தொடர் இன்னும் சிற்க்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அருமையான கருத்துக்கள்

    ReplyDelete
  5. கை கொடுங்க கருன் சார்,
    இந்த முத்தான பதிவுக்காக ஒரு ராயல் சல்யூட்.

    ReplyDelete
  6. செல்வத்திற்கு எப்போதும் எல்லையுண்டு , அளவுண்டு, கணக்கு உண்டு. ஆனால் அறிவுக்கோ எல்லையோ, கணக்கோ இல்லை. எனவே அறிவே சிறந்தது


    எல்லாமே சிறப்பா இருக்கு எனக்குப்பிடித்தவரிகள் மேலே.

    ReplyDelete
  7. 10 பதில்களும் அருமை...

    ReplyDelete
  8. பத்தும் முத்து

    ReplyDelete
  9. பத்தும் சத்து

    ReplyDelete
  10. இப்படி பத்து பதில் சொல்ல எம்புட்டு அறிவாளியா இருக்கணும்!

    ReplyDelete
  11. //இறைவனே! நாங்கள் உனது அடிமைகள் என்ற பண்பையும், பண்பாட்டையும் வளர்த்து நல்வாழ்வு தருகிறது.//

    அடிமைகளிடம் பயம் மட்டுமே இருக்கும்.. பண்பும் பண்பாடும், தன்னம்பிக்கை உள்ளவனிடம் மட்டுமே இருக்கும்

    ReplyDelete
  12. செல்வத்தைவிட அறிவுதான் சிறந்ததா? அவ்வ்வ்வ். இது முதல்லியே தெரிந்திருந்தால், ஒழுங்கா படிச்சிருப்பேனோ!

    ReplyDelete
  13. செல்வம் பிறருக்கு கொடுக்க, கொடுக்க குறையும், ஆனால் கல்வியோ அதிகரித்துக் கொண்டுதான் வரும். ஆகவே அறிவே சிறந்தது.//

    ஆஹா அருமையான பதில்கள் உலகில் அறிவே சிறந்தது....!!!

    ReplyDelete
  14. ஜூப்பரு.. உண்மையிலேயே எல்லோரும் புரிஞ்சிக்கவேண்டிய விஷயம்.. அறிவையும் ஞானத்தையும் எப்பிடி காசாகலாம்ன்னு சுத்துது ஒரு கூட்டம்

    ReplyDelete
  15. நல்ல அறிவுரைகள்.

    ReplyDelete
  16. பத்துப் பதில்களும் அருமை !..மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ...

    ReplyDelete
  17. எல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  18. அஞ்ஞான இருள் போக்கும் மெஞ்ஞான
    வார்த்தைகள் ஒளியூட்டுகின்றன...

    ReplyDelete
  19. இப்பதான் தெரியுது,, நம்ம அரசியல்வாதிகள் ஏன்அறிவைத் தேடுவதில்லை எனபது! அறிவை வைத்து பிறருக்கு அல்வா தரலாம்,ஆனால் அல்வா வாங்க முடியாது!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"