முதல்வர் ஜெயலலிதாவால் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை உடனே பணியில் சேர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மக்கள் நலப் பணியாளர்களை, 1990 இல் கலைஞர் கருணாநிதி அவர்கள் இருபத்தி ஐந்தாயிரம் பணியாளர்களை நியமித்தார். பின்பு 1991ல் அப்போதைய முதல்வர் ஜெ அவர்களை நீக்கினார். மீண்டும் 1997 ல் ஆட்சிக்கு வந்தபோது கலைஞர் மீண்டும் அவர்களை பணியில் நியமித்தார்.
2001ல் மீண்டும் ஜெயலலிதா பதவி நீக்கம் செய்தார். 2006ல் ஆட்சியைப் பிடித்த கலைஞர் மீண்டும் நியமித்தார். தற்போது மூன்றாவது முறையாக ஜெயலலிதா அவர்களை பழிவாங்கியுள்ளார். இதுபோல மாற்றி,மாற்றி அவர்கள் பந்தாடப்பட்டனர்.
1990 ல் இருநூறு ரூபாய் தொகுப்பு ஊதியதிற்கு நியமிக்கப்பட்ட அவர்கள், இப்போது ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்கின்றனர். பெரும்பாலும் அனைவரும் நாற்பது வயதை கடந்தவர்கள், அவர்கள் இனிமேலும் இன்னொரு வேலை செய்து பிழைப்பது கடினமே என்ற மனிதாபிமானம் கூட இல்லாமல் நீக்கி இருந்தது அரசு.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நல பணியாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி போன பதினோராம் தேதி இடைக்கால தடை விதித்தார்.
மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பணி நீக்கம் செய்யப் பட்ட அனைத்து மக்கள் நல பணியாளர்களையும் நாளை காலைக்குள் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
ஏற்கெனவே சமச்சீர்கல்வியில் நீதிமன்றத்தால் குட்டு வாங்கியும் திருந்தாத ஜெ, இதை எதிர்த்து உச்ச நீதி மன்றம் செல்ல யோசிப்பார் என்றே தெரிகிறது. பார்ப்போம் நாளை என்ன நடக்கப் போகிறது என்று?
//முதல்வர் ஜெயலலிதாவால் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை உடனே பணியில் சேர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.//
ReplyDeleteபகிர்விற்க்கு நன்றி நண்பரே..
எனினும் அம்மா சும்மா இருக்க மாட்டாங்களே..
உச்சநீதிமன்ற குட்டுதான் அம்மாவுக்கு பிடிக்கும்..
உயர்நீதிமன்ற குட்டு எல்லாம் அம்மாவுக்கு ஜுஜுபிதானே...
அம்மா அம்மம்மா அம்மா சும்மா சும்மம்மா சும்மா, வாத்தி ரொம்ப வாய் விடாதேய்யா அம்மா உங்களுக்கும் ஆப்பு வச்சிரப்போறாங்க ஹி ஹி....
ReplyDeleteஹா ஹா ஹா ஹா
ReplyDeleteஅம்மானா சும்மா இல்லை - வெயிட் அண்ட் சி.
நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம்
ReplyDelete//பார்ப்போம் நாளை என்ன நடக்கப் போகிறது என்று?
ReplyDelete//
நாமதான் நடப்போம் (பஸ் டிக்கெட் விலையால் )
அம்மா, ஐயா உங்களுக்கு மக்கள் தான் பந்தா? தூக்கி போட்டு பந்தாட?
ReplyDeleteநம்ம தளத்தில்:
மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள்
பஸ்கட்டண விலையுயர்வைப் பத்தி எதுவும் சொல்லலியா கருன்?!!
ReplyDeleteபார்ப்போம் நாளை என்ன நடக்கப் போகிறது என்று...-:)
ReplyDeleteSoodana Tea. Taste-a irukku Sago.
ReplyDeleteTM 5.
ReplyDeleteநாளைக்கு அம்மா கர்நாடகா போவாங்களா? அல்லது உச்ச நீதிமன்றம் போவாங்களா?
ReplyDeleteஜெ வின் அரசியல் நமக்கு புரியவில்லை பாஸ்
ReplyDeleteஆத்தா அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவது மாதிரி தெரியவில்லை.
ReplyDeleteஅம்மாவின் எந்தவொரு முடிவுக்கு முன்னும் கருனாநிதி ஐயாவின் முகம்தான் அம்மா கண் முன் நிழலாடுகிறது. அப்புறம் எப்படி நல்லது நடக்கும்..,
ReplyDeleteம்ம்ம் பரவாயில்லை... ஒரு நாலு வரியில சரக்கு இருக்கு...
ReplyDeleteமேலாளரின் உத்தரவுக்கு ஏற்ப
ReplyDeleteகாட்சிகள் மாற்றப் படும்!
புலவர் சா இராமாநுசம்
சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு? ஆறு பால்ல ஒரு பால் சிக்சர் போகத்தான் செய்யும். இதுக்கெல்லாம் அசருகிற ஆளா அம்மா?
ReplyDeleteதலை வீங்கிடும்!
ReplyDelete