Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/21/2011

இதற்கு பதில் சொல்ல முடியுமா? (மகான்களின் வாழ்க்கையில்)


பகவான் இராமகிருஷ்ணர் ஒரு நாள் தமது சீடர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது பொதுவான ஒரு வினாவை எழுப்பினார்.

நீங்கள் ஒரு 'ஈ'யின் பருவத்தைப் பெற்று இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எதிரே அமுதம் நிறைந்த ஒரு கோப்பை இருக்கிறது அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

இதுதான் பகவான் ராமகிருஷ்ணரின் கேள்வி.

கேள்வியின் தன்மையைப் புரிந்து கொள்ளாத மாணவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் மெளனமாக இருந்தனர்.

சுவாமி விவேகானந்தர் எழுந்து 'நான் அந்தக் கோப்பையின் விளிம்பில் கவனாமாக உட்கார்ந்து கொண்டு கோப்பையில் உள்ள அமுதத்தைப் பருகுவேன். அவசரப்பட்டு கோப்பையில் உள்ள அமுதத்தில் விழுந்து உயிரை விடமாட்டேன்' என்றார்.

இராமகிருஷ்ணர் சிரித்துக் கொண்டே "நீ ஒரு விஷயத்தை அடியோடு மறந்துவிட்டாய்" என்றார்.

"என்ன அது?" என்று விவேகானந்தர் வியப்புடன் கேட்டார்.

கோப்பையில் இருப்பதோ அமுதம். அமுதத்தை உண்டவர்களுக்கு மரணமே இல்லை. அப்படி இருக்க கோப்பையின் விளிம்பில் உட்கார்ந்தால் என்ன? அமுதத்திலேயே விழுந்தால் என்ன? என்றார் இராமகிருஷ்ணர்.

16 comments:

  1. தமிழ் மணம் நெம்பர் ஒன் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. சொல்லிக்குடுத்த மாதிரியே கமெண்ட் போட்டுட்டேன் ஹி ஹி

    ReplyDelete
  3. இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்...

    ReplyDelete
  4. ////கோப்பையில் இருப்பதோ அமுதம். அமுதத்தை உண்டவர்களுக்கு மரணமே இல்லை. அப்படி இருக்க கோப்பையின் விளிம்பில் உட்கார்ந்தால் என்ன? அமுதத்திலேயே விழுந்தால் என்ன? என்றார் இராமகிருஷ்ணர்.
    /////

    சுவாரஸ்யம் தொடருங்கள்

    ReplyDelete
  5. சுவாரசியமான கேள்வி பதில். நல்லா இருக்கு

    ReplyDelete
  6. இப்படித்தான் நாம் வாழ்க்கையின் தத்துவங்களை புரியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்..

    ReplyDelete
  7. நானா இருந்தா கிட்ட கூட பொய் இருக்க மாட்டேன் அந்த ஈ னப் பிறவி எனக்கு வேண்டாம் ஹி ஹி ஹி !!?

    ReplyDelete
  8. கேள்வி பதில் சூப்பர்...

    ReplyDelete
  9. ஈ யாக வாழ்ந்தால் என்ன செத்தால்தான் என்ன .............?

    ReplyDelete
  10. நல்ல சேதி கேட்டு சந்தோஷம் கொண்டேன், வேற என்னத்தை சொல்ல வாத்தி...

    ReplyDelete
  11. குரு மகாராஜ் சொல்லும் கதை களெல்லாம் அருமையானவையே. நன்றி.

    ReplyDelete
  12. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறந்து விட்டாரோ - டவுட் கோவாலு

    ReplyDelete
  13. தத்துவம் கலக்கல்

    ReplyDelete
  14. இந்த கதையில் இருப்பவர்கள் போல்தான் நாம் நம் உழைப்பின் மகிமை தெரியாமலே வீணடிக்கிறோம்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"