Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/24/2011

ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்!!!


ழ்மையான குடும்பத்தில் அவன் பிறந்தான். சிறுவனாக இருந்தபோது தந்தையின் பணிகளுக்கு  உதவிபுரிந்தான். ஒன்பது வயதில்  ஒன்பது மைல் நடந்து ஆரம்பக் கல்வியைக் கற்றான்.  ஒரு நீக்ரோ பெண்ணை அடிமையாக விற்கப்படுவதைக் கண்டு  அதிர்ந்தான்.  இம் மாதிரியான கொடுமைகளை  தடுத்து நிறுத்த அரசியலில் ஈடுபடவேண்டும் என முடிவு  செய்தான். அரசியலில் குதித்தான்.

ட்டமன்ற தேர்தல், செனட் உறுப்பினர் தேர்தல் என போட்டியிட்டு வெற்றிபெற்ற அவன், அந்த நாட்டு ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றான்.

ணபலமில்லை, அரசியல் பின்புலம் இல்லை, கம்பீரத் தோற்றமும் இல்லை, கவர்ச்சியான செற்பொழிவாற்றும் திறமை இல்லை இவை எதுவும் இல்லாமல் அவனுடைய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவனுடைய உழைப்பும், மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற  எண்ணமும் கைகொடுத்தன.

னாதிபதி ஆனதும் ஒரு பழைய காரை அவன் விலைக்கு வாங்கினான்.  அது கூட ஆடம்பரத்திற்காக அல்ல, பணிகளை விரைந்து முடிக்கலாமே என்ற ஆர்வத்தில்தான்!!! அரசு செலவில் ஓட்டுனர் வைத்துக் கொள்ள விதியிருந்தும், ஓட்டுனருக்கு கொடுக்கும் சம்பளப் பணத்தில் ஒரு  ஏழைக்கு உதவலாமே என்ற எண்ணத்தில் ஓட்டுனர் வைத்துக் கொள்ளாமல் அவனே காரை ஓட்டிசென்றான்.

ன்று பாராளுமன்ற கூட்டம்...  அதனால் அதிகாலையிலே ‌ எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு பாராளுமன்றத்தை நோக்கி காரை செலுத்தினான். போகும்வழியில் அவன் பார்வை ஓரிடத்தில் நிலைத்து நின்றது! ஆம்!! சாக்கடை தேங்கியிருந்த ஒரு பள்ளத்தில் ஓரு பன்றிக் குட்டி விழுந்து மேலே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

ந்தவழியில் சென்ற பலர் அதை வேடிக்கை பார்த்து சென்றனர். ஜனாதிபதியாகிய அவன் காரிலிருந்து இறங்கினான். அந்த பன்றியை காப்பாற்றினான். அதன் மீதிருந்த சாக்கடை துளிகள் அவன் ஆடையிலும் ஒட்டியது. அதைப்பற்றி கவலைப் படாமல் அவன் பாராளுமன்றம் நோக்கி பயனித்தான். Repost.

அந்த  ஜனாதிபதி யார்?  
தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடவும்.

15 comments:

  1. என்ன நண்பரே கேள்வி கேட்டுட்டீங்க

    ஆ.லிங்கனா ?

    தெரியல மற்றவர்களின் பதிலில் விடை தெரிந்து கொள்கிறேன்

    தமிழ் மணம் முதல் வாக்களித்தேன்

    ReplyDelete
  2. Good question. . . Ha . . Ha . . Escape

    ReplyDelete
  3. pause வேற கேள்வி கேளுங்க சார்

    ReplyDelete
  4. ஆபிரகாம் லிங்கன் தான். ஒரு சிறுமி தாடி வைத்தால் அழகாய் இருப்பீர்கள், நிறைய ஓட்டு விழும் என்று ஆலோசனை கூறியதை அலட்சியப் படுத்தாமல் அப்படியே செய்த மனிதாபிமானி. சரிதானே...! நன்றாக இருக்கிறது கருன்...

    ReplyDelete
  5. ஏப்ரஹாம் லிங்கனா?

    ReplyDelete
  6. கண்டிப்பாக எனக்கு மிகவும் பிடித்த ஆபிரகாம் லிங்கன்தான்.

    ReplyDelete
  7. ஆப்ரஹாம் லிங்கன் என்றுதான் என் மனதிலும் படுகிறது...

    ReplyDelete
  8. ஆபிரஹாம் லிங்கனேதான் எம்புட்டு படிச்சிருக்கோம் ஹி ஹி...!!!

    ReplyDelete
  9. மாப்ள அவன் அவன் என்று ஒவ்வொரு வரிக்கும் போட்டு இருப்பது தான் ஒரு மாதிரியா இருக்கு... அவர் என்று மாத்தவும்....

    ReplyDelete
  10. ஆபிரகாம் லிங்கன் தான்
    கருப்பினத்தவர்களுக்காக குரல் கொடுத்தவர்

    ReplyDelete
  11. எல்லாரும் சொல்லிட்டாங்க!நான் என்ன சொல்ல?

    ReplyDelete
  12. Sir!
    Namma pathivargala pathi enna nenaichinga?
    Ethanai per correcta ans panni irukkanga pathingala.
    Ana enakku doupta than irukku. Abraham Lingon or Obamo iruvaril oruvaraga irukkalam.
    TM 9.

    ReplyDelete
  13. ஆபிரகாம்லிங்கன் அவர்கள்...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"