Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/01/2011

சாட்டையால் அடி வாங்கினால், பிள்ளை பிறக்கும்! - உண்மைச் சம்பவம்


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்திபலகானூர் என்ற கிராமத்தில் உள்ள, நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாவில் பூசாரி கையால் சாட்டையடி வாங்கும் நிகழ்ச்சி வருடா வருடம் வெகு விமர்சையாக நடைபெறும்.

 இந்த வருடம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று அதிகாலை தீச்சட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி ஏந்திவந்து வழிபட்டனர். 

பின்னர் வினோதமான சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அந்த கோயில் பூசாரி சாட்டையுடன் நிற்க, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் நீண்ட வரிசையில் நின்றனர். 

இந்த கோயில் பூசாரியிடம் சாட்டை அடி வாங்கினால் குழந்தை பாக்கியம் உண்டாகுமாம், தீராத நோய்கள் நீங்குமாம், மேலும் குடும்ப பிரச்னைகள் தீருமாம்.  அதேபோல இந்த வருடமும் அந்த சாட்டையடி நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் ஒவ்வொருவராக வந்து நிற்க அவர்களை சாட்டையால் அடித்து அந்த கோயில் பூசாரி ஆசீர்வதித்தார்.  

உறவுகளே என்னைப் பொருத்தவரை கடவுள் நம்பிக்கை வேண்டும்தான், ஆனால் இதுபோல மூட நம்பிக்கைகள் தேவையா?

15 comments:

  1. மூட நம்பிக்கை அறவே ஒழிக்கப்படவேண்டும் .... தகவலுக்கு நன்றி கருண் சார்....

    ReplyDelete
  2. இதை எப்படி ஒழிப்பது!?

    2011 லும் இப்படியா?

    ReplyDelete
  3. தன்னம்பிக்கை உள்ளவனுக்கு வேறு எந்த நம்பிக்கையும் தேவை இல்லை அண்ணா

    ReplyDelete
  4. நம்பிக்கைகள் பல விதம். இது ஒரு விதம்.

    ReplyDelete
  5. பூசாரி சாட்டையால் அடித்தால் புள்ளை பொறக்கும் என்பது உண்மைஎன்றால் புருசனின் பங்களிப்பு பூஜ்யமா?

    ReplyDelete
  6. மூட நம்பிக்கைகள் தேவையா?

    இல்லை.

    ஆனால்...அவர்கள் பக்கமிருந்து யோசித்தால் தவறாய் தெரியாது நண்பரே...அவர்கள் நம்பிக்கையை நாம் குலைப்பதால் யாருக்கும் லாபமில்லையே...It is a form of faith...

    நம்மைப்பார்த்து...நம் வழிபாடுகள் பார்த்து ..நம் நம்பிக்கைகள் பார்த்து ... வேறு சிலர் சொல்வதில்லையா..அது போல் தான்...லூஸ்ல விடுங்க நண்பரே...


    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. ச்சே ச்சே என்னே ஒரு மூட நம்பிக்கை கலிகாலம்டா சாமீ...!!!

    ReplyDelete
  8. இப்படியும் ஒரு நம்பிக்கையா?

    ReplyDelete
  9. ////உறவுகளே என்னைப் பொருத்தவரை கடவுள் நம்பிக்கை வேண்டும்தான், ஆனால் இதுபோல மூட நம்பிக்கைகள் தேவையா?////

    சரியாகச்சொன்னீங்க பாஸ்..இது போன்ற செயல்கள் மூடநம்பிக்கை இல்லை முட்டாள்தனமான செயற்பாடுகள்....

    ReplyDelete
  10. சாட்டை அடிச்சா புள்ள போறக்குமா? அப்போ மத்ததெல்லாம் வேஸ்டா? என்ன சார் அடி மடியிலேயே கைவைக்கிறாங்க?

    ReplyDelete
  11. என்ன..கொடுமைடா சரவணா....

    ReplyDelete
  12. மூட நம்பிக்கைகள் முடக்கப்பட வேண்டியவை..

    ReplyDelete
  13. இப்படியும் நம்பிக்கை உள்ள மனிதர்களா...

    சே...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"