பெட்ரோல், இன்று இந்தியாவில் அடிக்கடி விலை ஏறும் ஒரு பொருள். எப்போது உயரும் என்று யாராலும் சொல்ல முடியாது. இன்று உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஆனால் இந்த விலை ஏற்றம் ஏன்?
இந்த பெட்ரோல் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
நாம் பயன்படுத்தும் பெட்ரோலை உற்பத்தி செய்ய 90 % கச்சா எண்ணெய்யும், 10% நம்நாட்டிலேயே தயாராகும் பொருட்களும் பயன் படுத்தப்படுகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்தி செய்ய வேண்டும் எனில் கச்சா எண்ணெய்க்கும் சேர்த்து ஆகும் செலவு ரூ 26.11(2008- 09 ம் ஆண்டு புள்ளி விபரப்படி) ஆகும். 2009- 10ம் ஆண்டு ரூ. 21.75 என்று அரசின் புள்ளி விபரங்களே கூறுகிறது.
ஆனால் ஆளும் மத்தியஅரசு எந்த வில் எல்லாம் வரியை கூட்ட முடியுமோ அப்படி கூட்டி இந்த பெட்ரோலின் விலையை உயர்த்து கிறது.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் கட்டும் வரிகள்: (24.8.2011 அன்றைய நிலவரப்படி)
பெட்ரோலின் ஆதார விலை - ரூபாய் 24.23 காசுகள்,
அதற்கான சுங்கத்தீர்வை வரி - ரூபாய் 14.35 காசுகள்,
கல்விவரி - ரூபாய் 0.43 காசுகள்,
விற்பனை செய்பவர்களுக்கான கமிஷன் - ரூபாய் 1.05 காசுகள்,
அதன் சுத்திகரிப்பு செலவு - ரூபாய் 0.52 காசுகள்,
சுத்திகரிக்கும் பொது ஆகும் மூலதனச்செலவு - ரூபாய் 6.00,
மதிப்புக்கூட்டு வரி - ரூபாய் 5. 50 காசுகள்,
கச்சா எண்ணெய்க்கு விதிக்கப்படும் சுங்கவரி- ரூபாய் 1.10 காசுகள்,
பெட்ரோலுக்கான சுங்கவரி - ரூபாய் 1. 54 காசுகள்,
போக்குவரத்து செலவு- ரூபாய் 6.00,
ஆக மொத்தம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 60.72 காசுகள் ஆகிறது.
இப்படித்தான் பெட்ரோல் விலை வரிகளாலையே மூன்று மடங்காகிறது. இது தவிர சுத்திகரிக்கும் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் வேறு.
பின்பு ஏன் பெட்ரோல் விலை அடிக்கடி ஏறாது?
பொட்ரோலிப கச்சா பொருட்கள் நம்நாட்டில் குறைந்த அளவில் கூட நம்நாட்டில் கிடைக்கவில்லை.
ReplyDeleteதேவையின் மொத்த அளவையும் நாம் இறக்குமதியை மட்டுமே நம்பவேண்டியிருக்கிறது.
பெட்ரோலிய பொருட்களின் நாளக்கு நாள் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் விலை உயர்வு குறையும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தகவலுக்கு நன்றி..
புள்ளி விவரங்களுடன்
ReplyDeleteபெட்ரோல் விலை நிர்ணயத்தை
விளக்கியிருத்தல் அருமை...
பெட்ரோலுக்காக விதிக்கப்படும் வரிப்பணம் சரியான
முறையில் சரியான இடத்துக்கு போய்ச் சேருகிறதா???
என்ற கேள்விக்கு விடை இன்னும் கிடைக்கவில்லை...
அயல்நாடுகளில் இந்தியன் ஆயில் நிறுவனம்
எடுத்துவரும் கச்சா எண்ணையை இந்த புள்ளி விவரங்கள் குறிப்பிடுவதே இல்லை..
விலைவாசி ஏற்றத்தை காலப்போக்கில் வயது கூடிக்கொண்டே போவதுபோல அதுவும் ஏறும் என்ற மாயையை ஏற்படுத்தி விட்டார்கள்...
விளக்கத் தகவல்களுக்கு நன்றி நண்பரே..
சாமி சரணம்.. சபரிமலைப்பதிவு போடலை?
ReplyDeleteபுள்ளி விபரமொடு பெட்ரோல்
ReplyDeleteவிலைப்பட்டியல் தந்துள்ளீர்
பற்றி எரிகிறது பெட்ரோல்
அல்ல!வயிறு!
புலவர் சா இராமாநுசம்
பெட்ரோல் விலையை உயர்த்துவது, அரசின் திட்டமிட்ட மோசடி! போக்குவரத்து துறையை சீரழியச் செய்து தனியாருக்கு கொடுக்கும் செயல்திட்டம்!
ReplyDeleteதகவலுக்கு நன்றி!
ReplyDeleteகவிதை வீதி தோழர் கேட்ட கேள்விக்கு பதில், நம் நாட்டில் உற்பத்தி ஆகும் கச்சா என்னை அளவு 40 சதவிகிதம்... அதை என்ன விலைக்கு விற்கிறார்கள், என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை
ReplyDeleteபாக்கிஸ்தான் பங்களாதேஷ் நேப்பாள், இங்கேயெல்லாம் வரிகள் குறைவால்தான் பெட்ரோல் விலை ஏறாமல் கட்டுக்குள் இருக்கிறது...!!!
ReplyDeleteமொத்தத்தில் நாட்டை ஆளும் வர்க்கம் சரி இல்லைன்னு சொல்லலாம்...!!!
ReplyDelete//பொட்ரோலிப கச்சா பொருட்கள் நம்நாட்டில் குறைந்த அளவில் கூட நம்நாட்டில் கிடைக்கவில்லை.
ReplyDeleteதேவையின் மொத்த அளவையும் நாம் இறக்குமதியை மட்டுமே நம்பவேண்டியிருக்கிறது.
பெட்ரோலிய பொருட்களின் நாளக்கு நாள் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் விலை உயர்வு குறையும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தகவலுக்கு நன்றி..////
அண்ணே! கிருஷ்ணா நதிப் படுக்கை வெவகாரம் தெரியுமா?
வணக்கம் மச்சி,
ReplyDeleteநலமா?
வரியை அடிப்படையாக கொண்டு பெற்றோல் விலை எவ்வாறு உயர்கின்றது என்பதனை விளக்கமாக சொல்லியிருக்கிறீங்க.
நன்றி!
//கல்விவரி - ரூபாய் 0.43 காசுகள்,//
ReplyDeleteமாப்ள பெட்ரோலுக்கு எதுக்கு கல்வி வரி... அது என்ன பாடமா படிக்க போகுது... முட்டாப்பசங்க... யாரு அவுங்களா இல்ல நாமளா?????
இதை தடுக்க என்ன செய்யலாம்?
ReplyDeleteசார்,
ReplyDeleteஅரசாங்கம் எதனோட வெலையையாவது ஏத்திட்டு போறானுக.
இலவசம்-னு வாயத் தொறக்குற கட்சிக்கு ஓட்டு போடுவோம்.
அவங்க, எங்க கோவணத்தை உருவிக்கிட்டு போனாலும் எங்களுக்கு கவலை இல்லை.
பெட்ரோல் விலை!? மறைக்கப்படும் மர்மங்கள்.../
ReplyDeleteமறைந்திருந்தே உயர்த்தும் மர்மம்!!
மச்சி, இத்தன வரியில் பெட்ரோல் மூழ்கினா காசு கூட தானே செய்யும்.
ReplyDeleteநம்ம தளத்தில்:
எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு
புள்ளி விவரங்களுடன்
ReplyDeleteபெட்ரோல் விலை நிர்ணயத்தை
விளக்கியிருத்தல் அருமை...நன்றி
விளக்கமா தான் சொல்லி இருக்கீங்க.. ஆனா எவன் கேப்பான் இங்கே?
ReplyDeleteஇட்லிவரி,சட்னி வரி மாதியாகிவிடக்கூடாது.
ReplyDeleteஇறக்குமதி என்றால் வரிகளே வாரிக் கட்டிகொள்கிறது..என்ன செய்வது..
ReplyDeleteஇந்தியாவில் இருக்கும் எந்த கட்சி நல்ல கட்சி????? அவ்வவ்
ReplyDeleteErinathu petrol vilai mattumalla Sago. Namma pressurum than.
ReplyDeleteTM 12.
தகவலுக்கு நன்றி!
ReplyDelete28 November 2011 1:26 PM