தமிழ் திரையுலகின் முன்னாள் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர் நினைவு நாளை அனுசரிக்க திரையுலகில் யாருமே வராததது அவரது குடும்பத்தாரை பேரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
எம். கே. தியாகராஜ பாகவதர் - மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959) தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகன் மற்றும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார்.
1934 ஆம் ஆண்டுபவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடத்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.
சென்னையில் (அன்றைய மதராஸ்) மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக உற்றத் தோழரான என்.எஸ்.கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார். தண்டனைக் காலத்திலேயே இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டு 1948இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர்.
இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதில் நொடிந்துபோன பாகவதர் அதன்பின் திரைப்படங்களில் நடிக்க மனமில்லாமல் இருந்துவந்தார். நவம்பர் 1, 1959 இல் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே மரணமடைந்தார். தமிழ்த் திரையிலகில் அவரைப்போல வாழ்ந்தவருமில்லை, அவரைப் போல வீழ்ந்தவருமில்லை என்ற கருத்து அவருடைய ஆத்ம ரசிகர்களிடையேயும், திரையுலகிலும் நிலவுவது உண்டு.
இன்றைய காலகட்டத்தில், ஒரு படம் 10 நாட்கள் தியேட்டரின் முழு கொள்ளளவுடன் ஓடினாலே வெற்றிப்படம் என கூறி வரும் நிலையில், தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்றும் வர்ணிக்கப்படும் தியாகராஜ பாகவதர் நடித்த, ஹரிதாஸ் என்ற படம் 4 தீபாவளிகளையும் தாண்டி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.
இதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற தியாகராஜ பாகவதர், உடல் நலக்குறைவால், 1959ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இறந்தார். திருச்சியின் மற்றொரு மைந்தனாக திரையுலகில் வலம் வந்த எம்.ஆர். ராதா ஏற்பாட்டில், தியாகராஜ பாகவதர் உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு, மக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஊர்வலத்துடன் அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டு திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை ரோடு அருகேயுள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தியாகராஜபாகவதரின், 53வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. தியாகராஜ பாகவதரின் சின்னம்மா சம்பூரணத்தம்மாளின் மகள் ஆனந்தலட்சுமி, அவரது கணவர் தெட்சிணாமூர்த்தி, இவர்களது மகன் தனபால் ஆகியோர் பாகவதர் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த நேற்று வந்தனர்.
கடந்த 1948ம் ஆண்டு தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான ராஜமுத்தி சினிமாவில் இடம் பெற்ற, 'மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ' என்ற பாடலை உரக்கப் பாடி அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் நினைவுநாளை அனுசரிக்கக்கூட திரையுலகிலிருந்து, திரை உலகத்தினர் மற்றும் ரசிகர்கள் யாரும் வராதது, அவரது குடும்பத்தாருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. - (எம்.கே. தியாகராஜ பாகவதர் பற்றிய வலாற்று உதவி விக்கிபிடியா)
மிகப் பெரிய நடிகர் !
ReplyDelete“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
ReplyDeleteஇதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.
ஆமாம் அவ்வளவு பெரிய நடிகரை எல்லோரும் மறந்தது வேதனையே
ReplyDeleteஉண்மை....
ReplyDeleteப்ளாஸ்பேக்...
ReplyDeleteஎன்றும் நினைத்துப்பார்க்க வேண்டியவைகள்...
ஒரு படம் நடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் என சொல்லிக்கொள்பவர்கள் கவனிக்க!
ReplyDeleteபழசையெல்லாம் நினச்சு பாக்க ஆள் இல்லை.
ReplyDeleteஇதென்ன விஜய் க்கும் அஜீத்துக்கும் உள்குத்து பதிவா?
ReplyDeleteபுதுமை விரும்பிகளாகிகொண்டே போகும் இவ்வுலகம் பழசையெல்லாம்
ReplyDeleteநினைத்துப்பார்க்க இப்பெல்லாம் விரும்புவது இல்லை சகோ .இருந்தாலும் இந்த நிகழ்வு வேதனைக்குரியதே .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
வருத்தமான செய்தி தான் என்ன செய்யறது மறதி எல்லோருக்கும் பொது தானே?
ReplyDeleteமாப்ள எப்படியோ தேடி பிடிச்சாச்சா? என் கண்ணுக்கு இந்த மேட்டர் சிக்கலையே? அவ்வ்வ்
ReplyDeletemmmm...
ReplyDelete53 பேரு இந்தப் பதிவைப் படித்தாலே வெற்றி தான்...
ReplyDeleteஇந்தப் பதிவை போடும் நீங்கள் இருக்கும் வரை MKDயும் நினைவில் இருப்பார்...
சினிமாகாரர்கள் சுயநலவாதிகள், ஆகவேதான் ஒருத்தரும் வரவில்லை,வரவும் மாட்டார்கள் வேற என்னத்தை சொல்ல கொய்யால...!!!!
ReplyDeleteநடிகர் சங்கமாவது ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கலாம்...!!!
ReplyDeleteமனோ அண்ணன் சொன்னது போல நடிகர் சங்க ஓரு அறிக்கையாவது விட்டிருக்கலாம்
ReplyDeleteபெற்ற தாயையும் தகப்பனையும் நினைப்பதந்கே நேரம் இலலை என்று சொல்லுகிற காலத்தில் பழைய சூப்பர் ஸ்டாரா நினைவுக்கு வரம்
ReplyDeleteமறைக்கப்பட்ட தமிழன் மறைக்கப்பட்ட தமிழன் என கூவுறாங்க...
ReplyDeleteசினிமா நண்பர்கள் ஊருக்குத்தான் உபதேசம் செய்வார்கள்....
பழி இன்றைய கோடம்பாக்க கோமாளிகள் மேல் தான்..
ReplyDeleteஇதுதான் தமிழ் திரைப்பட உலகம்
ReplyDeleteமூன்றாம் கோணம்
ReplyDeleteபெருமையுடம்
வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30
இடம்:
ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்
போஸ்டல் நகர்,
க்ரோம்பேட்,
சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )
11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து
எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்