முதுமலைக்
காட்டில்
துதிக்கையை
தூக்கிக்காட்டி
குட்டியிடத்தில் சொன்னது
யானை ஒன்று,
அதோ பார் பேருந்தில்
மனிதர்கள் என்று...
**********************************************************************************
உட்கார இடம்
கிடைத்தபோது
வந்துவிட்டது,
நான்
இறங்கவேண்டிய
இடம்...
**********************************************************************************
எங்கள் ஊரில்
கீழத் தெரு, மேலத் தெரு,
கிடையாது....
டீக்கடைகளில்
இரட்டை
கிளாஸ் இல்லை...
தேரோடும் வீதியில்
செருப்பணிந்து செல்லலாம்...
பொதுக் கிணற்றில்
நீரெடுக்கலாம்...
எங்களூரில்
வேறு யாருமே இல்லை
எங்க சாதி, சனத்தை தவிர...!
**********************************************************************************
சும்மா:
மூன்று கவிதையும் நச்
ReplyDeleteஅருமை.....
ReplyDeleteசிலர் இப்படித்தான் சாதி ஒழிந்துவிட்டது என சொல்கிறார்கள்!
ReplyDeleteமூன்றுமே வித்தியாசமான பார்வையில் அருமையாய்.பகிர்விற்கு நன்றி
ReplyDeleteஇந்த முரண்பர்டுகளில் இருந்துதான் நகர்கிறது வாழ்க்கை...
ReplyDeleteமுரண்கள் தேவைதான் அது அடுத்தவரின் சுதந்திரத்திதை பறிப்பதாக இருந்தால் அதை ஒருபோதும் அனுமதிக்ககூடாது...
கலக்கிட்டீங்க!
ReplyDeleteநெத்தி பொட்டில் ஆணி எறங்குன பீலிங் கவிதை படித்த பின்
ReplyDeleteantha moondraavathu kavithai arumai
ReplyDeleteஒவ்வொன்றும் அருமை கருன்..!!
ReplyDelete// உட்கார இடம்
ReplyDeleteகிடைத்தபோது
வந்துவிட்டது,
நான்
இறங்கவேண்டிய
இடம்...//
சகோ
இது பலமுறை கண்ட கொண்ட அநுபவம்
த ம ஓ 7
புலவர் சா இராமாநுசம்
1. இதபார்ரா
ReplyDelete2.அடடா. வடை போச்சே...
3.சரிதான் உங்க ஊர்
எதுங்க நாங்க வந்துடறோம் அமைதி நமக்கு புடிக்காதுங்க..ஹிஹி
TM-1
முரண்பாடுகளின் மொத்த உருவமே முரண்பட்ட வாழ்க்கைதானே!
ReplyDeleteஉங்க ஊரில் உங்க சனத்தில் இருப்பவன்
ReplyDeleteஇல்லாதவன் என்ற பாகுபாடு இருக்குமே?
அதைச்சொல்லாமல் விட்டீரே?
நல்லதொரு பதிவு நண்பா..
ReplyDeleteNice. Jaathi kuritha kavithai nallarukku.
ReplyDeleteTM 10.
////நான்
ReplyDeleteஇறங்கவேண்டிய
இடம்////
இது வாழக்கைக்கும் மிகவும் பொருந்தும் கவி அல்லவா சகோதரா...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution
இது சும்மா இல்லை சூப்பர் !
ReplyDelete