பணம் அனுப்பாத
மாதத்தில்
என் மணிஆர்டரை
எதிர்ப் பார்த்த
பொழுதொன்றில்தான்
அப்பா இறந்துபோனார்...
புள்ளகுட்டி பெத்துட்டான்
இன்னும்
ஒத்த புதுத் துணிக்கு
வழியில்லை
அங்கலாய்க்கிறாள் அம்மா...
பூ .. கேட்காத மனைவிதான்
ஆயினும்,
அவள் விரும்பும்
புத்தகத்தினை
வாங்கிக் கொடுக்க
முடிந்ததே இல்லை
இதுவரை.....
அதுவேணும்,
இது வேணும் என
கேட்கிற விவரம்
வரவில்லை இன்னும்
குழந்தைகளுக்கு....
இருந்த போதிலும்,
குழந்தைகளின்
கேள்விகளுக்கு
பயந்து,
செலவழித்து விடாமல்
பத்திரமாய்
சேமித்து வைத்திருக்கிறேன்
இன்னமும் என்னை...!
இன்னும்
ஒத்த புதுத் துணிக்கு
வழியில்லை
அங்கலாய்க்கிறாள் அம்மா...
பூ .. கேட்காத மனைவிதான்
ஆயினும்,
அவள் விரும்பும்
புத்தகத்தினை
வாங்கிக் கொடுக்க
முடிந்ததே இல்லை
இதுவரை.....
அதுவேணும்,
இது வேணும் என
கேட்கிற விவரம்
வரவில்லை இன்னும்
குழந்தைகளுக்கு....
இருந்த போதிலும்,
குழந்தைகளின்
கேள்விகளுக்கு
பயந்து,
செலவழித்து விடாமல்
பத்திரமாய்
சேமித்து வைத்திருக்கிறேன்
இன்னமும் என்னை...!
//இருந்த போதிலும்,
ReplyDeleteகுழந்தைகளின்
கேள்விகளுக்கு
பயந்து,
செலவழித்து விடாமல்
பத்திரமாய்
சேமித்து வைத்திருக்கிறேன்
இன்னமும் என்னை...!//
சூப்பர் வரிகள் நண்பரே..
அருமை..
முதல் குடிமகன்
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDeleteவாழ்த்துக்கள் - ரொம்ப அருமை உம் கவியை சொன்னேன்
ReplyDeleteகுடும்பஸ்தனாக கவிதை எழுதியிருக்கீங்க சகோ. நிறையா ஆண்கள் இப்படித்தான் குடும்பத்தினருக்காக தன் தேவைகளாஇ ஒதுக்கி, மெழுகுவர்த்தியாய் மாறி குடும்பத்திற்கு வெளிச்சமா இருக்காங்க.
ReplyDeleteத ம 2
ReplyDeleteSuper..
ReplyDeleteநல்லா இருக்கு சார் கவிதை...
ReplyDeleteநிதர்சனம்..
ReplyDeleteநிறைய சம்பாதிக்கிற மாதிரி இருக்கு ஆனா பணம் தான் இருக்க மாட்டேங்குது
Nice
ReplyDeleteஇனிய மதிய வணக்கம் மச்சி,
ReplyDeleteஎம் மக்களில் பலர் அன்றாடம் எதிர் கொள்ளும் இயலாமையின் வெளிப்பாட்டினையும், தமமைச் சார்ந்துள்ளோரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியாது அல்லறும் மனிதனின் வலி நிறைந்த வாழ்வினையும் கவிதை யதார்த்தமாய்ச் சொல்லி நிற்கிறது.
யதார்த்தம் மிகுந்த வரிகள்..
ReplyDeleteமுதல் பத்தியும் மூன்றாவது பத்தியும் மீண்டும் படிக்க வைத்தன.
வாழ்த்துக்கள்.
ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை இயல்பாய்....
ReplyDeleteஆகா அற்புதம். யதார்த்தத்தை அழகுபடக் கூறியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஇயல்பான கரு
ReplyDeleteமச்சி, இன்றைய பலரின் நிலை கவிதை வடிவில்....
ReplyDeleteநம்ம தளத்தில்:
ஐயோ, அத பத்தி அது, இதுன்னு ஒளறிட்டேனா?
இழப்பதற்கு எதுவுமே இல்லை உயிரை தவிர. அநேக இந்தியர்களின் வாழ்க்கை இதுதான்.
ReplyDeleteஎளிமையான, எல்லோரும் தன்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிகிற கவிதை. நன்று. வாழ்த்துக்கள் கருன்.
ReplyDeleteகவிதை நல்லா இருக்கிறது கருன்.
ReplyDeleteசிந்திக்க வைக்கும் கவிதை நண்பா..
ReplyDeleteபூ .. கேட்காத மனைவிதான்
ReplyDeleteஆயினும்,
அவள் விரும்பும்
புத்தகத்தினை
வாங்கிக் கொடுக்க
முடிந்ததே இல்லை
இதுவரை.....//
நெஞ்சை தொட்ட வரிகள், சூப்பரா இருக்கு கவிதை வாத்தி நீ அசத்துய்யா...!!!
சராசரி மனிதனுடைய வாழ்க்கையை சொல்லும் கவிதை
ReplyDeleteயதார்த்த கவிதை நல்லா இருக்கு நண்பரே...
ReplyDeleteஅழகியதொரு அர்த்தம் நிறைந்த கவிதை
ReplyDeleteஅருமை சகோ
அழகான யதார்த்தமான கவிதை.
ReplyDeleteNice.
ReplyDeleteTM 11
நல்லா இருக்கு கவிதை
ReplyDelete