ஒரு வகுப்பில் ஒரு மாணவன் ஒரு கவிதையை எழுதி ஆசிரியரிடம் காண்பித்தான். அவர் அக்கவிதையை படிக்காமல் அந்த காகிதத்தை பறித்து கசக்கி எறிந்துவிட்டு , டேய் போய் ஒழுங்கா படிக்கற வேலைப் பார் என குட்டு வைத்தார்.
அதன்பிறகு அந்த சிறுவன் கவிதை எழுதுவதில்லை. இது மாதிரி பல திறமைசாலிகள் முளையிலேயே கிள்ளி எறியப்படுகின்றனர். சரி அந்தப் பையன் எழுந்து நின்று ஏன் எழுத ஆரம்பிக்கவில்லை.
அவன் சந்தித்த முதல் புறக்கணிப்பு. முதல் புறக்கணிப்பைத் தாங்கி ஜெயிக்க அபாரமான தன்னம்பிக்கை வேண்டும். அது அவனிடம் இல்லை. ஒவ்வொரு மனிதனிக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது. ஆனால் முதல் புறக்கணிப்பில் அவன் செத்துப் போகிறான்.
உறவுகளே புறக்கணிப்பை புறக்கணியுங்கள். வெற்றி நம் பக்கம் .
இது புறக்கணிக்கக்கூடாத விஷயம்!
ReplyDeleteநல்ல கருத்து.
ReplyDeleteஆசிரியர்கள் முடிந்தவரை ஊக்கம் தர வேண்டும்.புறக்கணிப்பை புறக்கணிப்போம்!
ReplyDeleteஅண்ணே கருத்து நல்லா இருக்கண்ணே
ReplyDeleteஅருமையான கருத்து
ReplyDeleteபதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 3
ok fight for the right!
ReplyDeleteஅழகாய் சொன்னீர்கள் நண்பரே,
ReplyDeleteதளிர்விட்டு பூத்துவிடக் கிளம்பும்
மலரதனை மொட்டிலேயே தட்டிவிடக் கூடாது..
விட்டுப் பாருங்கள் ...
மலர்ந்து மனம் பரப்பும்..
திறமைகளை மேன்மைப் படுத்துங்கள்..
Correct
ReplyDeleteநல்லகருத்து சகோ!
ReplyDeleteபுறக்கணிப்பு என்பது அதுவும்
மாணவ பருவதில் மிகவும் கொடுமை
அனைத்து ஆசிரியர்களும்
அறிய வேண்டிய செய்தி!
புலவர் சா இராமாநுசம்
உறவுகளே புறக்கணிப்பை புறக்கணியுங்கள். வெற்றி நம் பக்கம்
ReplyDeleteஆமா மிகவும் உன்மைதான்.
தன்னம்பிக்கை மிக முக்கியமாகிறது, இந்திய சமுதாயத்தில் தன்னம்பிக்கை குறைவே...
ReplyDeleteஎல்லா வாத்தியாரும் உங்களைப் போல் இருக்கவேண்டும் ...
ReplyDeleteநிச்சயமாக புறக்கணிப்பது தவறான செயல்
ReplyDeleteபுறக்கணிப்பைதான் புறம் தள்ள வேண்டும்....
ReplyDeleteசிறிய ,சிந்தனயுள்ள, சிறப்பான பதிவு! ஒரு விதைக்குள் விருட்சமே இருக்கிறது,என்பதுமாதிரி!
ReplyDeleteஎனது வாழ்க்கையில் என்னை யாரும் ஊக்குவிக்கவில்லை நானாக கடுமையாக தன்னம்பிக்கையுடன் போராட வேண்டி வந்தது இந்த பதிவை படித்தவுடன் என் வாழ்க்கை தான் எனக்கு நினைவு வந்தது
ReplyDeleteபதிவு அருமை நண்பரே
புறக்கணிப்பை புறந்தள்ளுவோம்../
ReplyDeleteபுதுமையான புத்துணர்ச்சி தரும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...
இப்படிதான் பல பேருடைய திறமைகள் வெளிவராமல் இருக்கிறது...!!!
ReplyDeleteஎனது தமிழய்யா சு.கிருட்டிணராசு அவர்களிடம் முதல் கவிதையை காட்டியபோது எழுத்துபிழையை திருத்தி செம்மைப்படுத்தி அறிவிப்புபலகையில் எழுதி என் பெயரை கீழே எழுதினார்...
ReplyDeleteவாழ்வியில் நுட்பத்தை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள் நண்பா.
ReplyDeleteஅருமை.
சிந்திப்போம்..