முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவில் விலைவாசி இருக்கிறது. எப்போதும் நம் பிரதமரிடம் இதைப் பற்றி கேட்டால் பல வளர்ந்த நாடுகளை விட நம் நாட்டில்தான் விலைவாசி குறைவு என்பார். இல்லையென்றால் விலைவாசி உயர்கிறது என்றால் நாம் வளர்கிறோம் என்பார். ஒருமுறை இது தற்காலிகம் தான் பணவீக்கம் குறைந்தால் விலைவாசி குறைந்துவிடும் என்பார்.
ஆனால் இம்முறை பதில் வேறு மாதிரி வந்திருக்கிறது. பணவீக்கம் நிலையாக இல்லை, இப்போது இதை கட்டுப்படுத்துவதில் சில காலம் ஆகும் என்கிறார்.
மேலும் விலைவாசி உயர்வைப் பற்றி கூறும்போது அது சந்தை சக்திகளின் கையில் இப்போது மாட்டி இருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்.
இதோடு இல்லாமல் சில புள்ளி விவரங்களையும் அறிவித்திருக்கிறார். இப்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 முதல் 8 சதவீதம் வரையில் உயர்ந்திருக்கிறது என்றால், நம் தனி நபர் வருமானமும் 6 முதல் 6.5 சதவீதம் வரையில் உயர்ந்திருக்கும் என்கிறார்.
யாருடைய தனி நபர் வருமானத்தை அவர் குறிப்பிடுகிறார்? கார்ப்பரேட் முதலாளிகளின் தனி நபர் வருமானம் கண்டிப்பாக அதிகரித்திருக்கும். ஏழை, நடுத்தர மக்களின் தனி நபர் வருமானம் முன்பை விட குறைந்திருக்கும் என்பதே உண்மை.
மேலும் மானியங்கள் ஒதுக்கீடு தொடர்பான அரசு எடுத்த முடிவு பெட்ரோல் போன்ற எரிபொருள்களின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
எரிபொருட்கள் விலை ஏறினால் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் ஏறும் என்று மக்களும், எதிர்க் கட்சிகளும் போராட்டங்கள் செய்யும் பொது எங்கே போனது இந்த காங்கிரஸ் அரசு. கடந்த வருடம் ஜூன் மாதத்திலிருந்து இன்று வரையில் பதினோரு முறை பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டது பற்றிய எவ்வித உறுத்தலும், இந்த காங்கிரஸ் அரசுக்கு ஏன் இல்லாமல் போனது.
நம் பிரதமர் இப்போது அவர் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு உண்மைகள் சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம், இனி ஒன்றும் செய்ய முடியாது மக்கள் இதற்கெல்லாம் பழகிக் கொள்ளுங்கள் என்கிறாரா? என்ன?
மச்சி, இப்போ என்ன செய்யலாம்? மக்கள் தான் எப்பவோ பழகிட்டாங்களே....
ReplyDeleteநம்ம தளத்தில்:
பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி?
//எரிபொருட்கள் விலை ஏறினால் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் ஏறும் என்று மக்களும், எதிர்க் கட்சிகளும் போராட்டங்கள் செய்யும் பொது எங்கே போனது இந்த காங்கிரஸ் அரசு. கடந்த வருடம் ஜூன் மாதத்திலிருந்து இன்று வரையில் பதினோரு முறை பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டது //
ReplyDeleteவாகன ஓட்டிகளின் அவஸ்தை இவர்களுக்கு எங்கே புரிய போகிறது ?
மக்கள் வரிப்பணத்தினை வாரிச் சுருட்டுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.
இதுங்களிடம் போய் நியாயம் எதிர்பார்க்கலாமா.......
ReplyDeleteஹி ஹி ஹி
ReplyDeleteசரியா கேட்டீங்க போங்க ஆனா தப்பான ஆளுகிட்டே அதுவும் பதில் சொல்ல தெரியாத புள்ளபூச்சிக்கிட்ட ...
மெத்த படித்த பொருளாதார புலி, ஹி ஹி ஹி ஹி சுண்டெலி'யை விட கேவலம் ஆகிப்போனார் கண்றாவி பிரதமர்...!!!
ReplyDeleteசோனியா பூந்தியின் சிங்கிடியா இருந்தால் வேறென்ன செய்ய இயலும் சொல்லுங்க...இனி அமெரிக்ககாரி மருமகளா வரப்போறதா சொல்றாங்க உருப்ப்படும்மாய்யா நாடு மீ பாவம்னு சொல்றதை தவிர....!!!
ReplyDeleteஅவர் தான் காது சேர்த்து கட்டி இருக்காரே எங்க கேக்க போகுது...
ReplyDelete////நம் பிரதமர் இப்போது அவர் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு உண்மைகள் சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம், இனி ஒன்றும் செய்ய முடியாது மக்கள் இதற்கெல்லாம் பழகிக் கொள்ளுங்கள் என்கிறாரா? என்ன?
ReplyDelete////
ஹா.ஹா.ஹா.ஹா.இதான் உண்மைபோல
பாவங்க இப்படி கேள்விமேல கேள்வி கேட்டா எப்புடிங்க...
ReplyDelete//நம் பிரதமர் இப்போது அவர் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு உண்மைகள் சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம், இனி ஒன்றும் செய்ய முடியாது மக்கள் இதற்கெல்லாம் பழகிக் கொள்ளுங்கள் என்கிறாரா? என்ன?////
ReplyDeleteஇதைத் தவிர வேற எதுவும் அர்த்தம் இருக்கா என்ன?
///யாருடைய தனி நபர் வருமானத்தை அவர் குறிப்பிடுகிறார்? கார்ப்பரேட் முதலாளிகளின் தனி நபர் வருமானம் கண்டிப்பாக அதிகரித்திருக்கும். ஏழை, நடுத்தர மக்களின் தனி நபர் வருமானம் முன்பை விட குறைந்திருக்கும் என்பதே உண்மை.///
ReplyDeleteசமூக அக்கறையுள்ள பதிவு? நல்லதொரு சூடான கேள்வி..!!!
பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteஎனது வலையில்
வெற்றியின் அடிப்படையில் உடல்நலம்
உங்கள் internet speed உடனடியாக தெரிந்துகொள்ள
நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
//விலைவாசி உயர்வைப் பற்றி கூறும்போது அது சந்தை சக்திகளின் கையில் இப்போது மாட்டி இருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்.
ReplyDelete//
அதாவது சோனியா கையில்
எதுவும் என் கையில் இல்லை என சொல்ல ஒரு பிரதமர்
ReplyDeleteஅவரும் என்ன செய்வார் பாவம். அவருக்கு என்ன சொல்லப்பட்டதோ அதைத்தானே செய்யமுடியும்? முடிந்தவரை உண்மையை ஒத்துக்கொள்கிறாரே அதற்கே பாராட்ட வேண்டும்...
ReplyDeleteஇனி ஒன்றும் செய்ய முடியாது மக்கள் இதற்கெல்லாம் பழகிக் கொள்ளுங்கள் என்கிறாரா? என்ன?/
ReplyDeleteவேறென்ன செய்வார்?? சொல்வார்!
அவர் அப்படித்தான்.
ReplyDeleteNamma arasiyalvaathigalukku
ReplyDeletePANA VEEKKAM alla
MANA VEEKKAM than irukku Sago.
TM 8.