Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/27/2011

'திமுகா'வின் அடுத்த மூவ் ! சரியா? தவறா?


தமிழ் நாட்டில் தற்போது உயர்த்தப்பட்ட பால் விலை, பேருந்து கட்டண உயர்வுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே எதிர்க்கட்சி சார்பில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் உண்ணாவிரத போராட்டம் நடத்திவிட்டார். மற்றொரு எதிர்க்கட்சி எந்த விதமான போராட்டம் நடத்தும் என பெரும்பாலோனோர் எதிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


திமுக கட்சியின் பொதுச் செயலார் அன்பழகன் அவர்கள் வெளியிட்ட ஒரு அறிக்கையில் டிசம்பர் ஒன்றாம் தேதி அந்தந்த மாவட்ட தலை நகரங்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்றார்.

மேலும் தெருமுனை பிரச்சாரங்கள் டிசம்பர் ஐந்து முதல் பன்னிரண்டு வரை, ஒரு வார காலம் நடைபெறும் என்றார்.

வரலாறு காணாத இந்த விலை ஏற்றத்தை கண்டித்து முக்கிய கட்சியான திமுக வெறும் பொதுக் கூட்டங்களையும், தெரு முனை பிரச்சாரங்களையும் நடத்துவது கண் துடைப்பாகவே இருக்கிறது. 

முதல்வர் ஆட்சிக்கு வந்த ரெண்டாவது மாதத்திலேயே மினி பட்ஜெட் மாதிரி சுமார் நாலாயிரம் கோடி வரை வரிச்சுமையை மக்கள் மீது திணித்தார். இப்போது இரவோடு இரவாக இந்த விலை ஏற்றம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினர்களையும் பாதிக்கும் இப்படிப்பட்ட ஒரு விலை உயர்வைக் கண்டித்து திமுக வெறும் பொதுக் கூட்டங்களையும், தெரு முனைப் பிரச்சாரங்களையும் நடத்துவது ஏற்புடையது அல்ல.

இன்னும் பலமான எதிர்ப்பு அவர்களிடத்தில் இருந்து வரவேண்டும். செய்வார்களா?

18 comments:

  1. பலமான எதிர்ப்பு அவர்களிடத்தில் இருந்து வரவேண்டும். செய்வார்களா?

    எஸ் செய்வார்களா

    ReplyDelete
  2. தெரு முனை பிரச்சாரம் பழைய மாடலாச்சே..

    இன்னும் இதை ஞாபகம் வச்சிருக்காங்க...

    ஒரு வலுவான போராட்டம் திமுகாவிடம் இருந்து வரவேண்டும்...

    செய்வார்களா...

    ReplyDelete
  3. //இன்னும் பலமான எதிர்ப்பு அவர்களிடத்தில் இருந்து வரவேண்டும். செய்வார்களா?//

    இன்னும் அவங்கள நம்புவதை விடல போலிருக்கே

    ReplyDelete
  4. இவர்கள் விளையாடும் விளையாட்டுக்கு மக்கள் பலி கடாக்கள் வேறே என்னத்தை சொல்ல...!!!

    ReplyDelete
  5. அதெப்படி? மாத்தி ஓட்டு போட்டாங்கல அனுபவிக்கடடும்.எங்களுக்கு ஓட்டு போட்டவங்களக்கு தலைமை கூடி..ஆலோ...சீத்து மூடுவோம்ல.

    ReplyDelete
  6. கனிமொழி ஜாமீன் தலையை தின்னுகிட்டு இருக்கு, அவங்க போராட்டத்திற்கு எங்கே யோசிக்கிறது. உடுங்க பாஸ் அடுத்த முறை வேறே யாருக்காவது ஓட்டு போடுவோம்.

    ReplyDelete
  7. மாப்ள இந்த மானங்கெட்ட பொழப்புக்கே...இன்னும் பல திமுக ஜால்ரா பதிவருங்க தளபதி பொங்கிட்டாறு...தலைவரு பத்தாவது சம்சாரத்த பாக்க போவாமே இந்த வயசுல(!) மறியல் பண்ணாருன்னு சொல்லிட்டு திரியிறாங்க..ஏன்யா நீ வேற ஹிஹி!

    ReplyDelete
  8. தாங்கள் சொல்வது உண்மையே
    மக்கள் அபுபடித்தான்
    எதிர்பார்கிறார்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. செய்திட்டாலும்!!!!!!! ஆமா திமுகா இன்னுமா இருக்கு.....!!!!

    ReplyDelete
  10. VAT(VALUE ADDED TAX) WAS RAISED FROM 4% TO 5% WITHOUT ANY PRIOR INTIMATION MADE PEOPLE WERE FOOLED FEW MONTHS BACK.BUT NOBODY WAS IN AWARENESS OF THAT EVEN BY EDUCATED.

    ReplyDelete
  11. இப்போதைக்கு கனி ஜாமீன்தான் முக்கியவிஷயம். மத்ததெல்லாம் ஜாமீனுக்கு அப்புறம்தான்!

    என் வலையில்;

    யானை ஆடி நின்றிருந்த காலியான கொட்டில்...!

    ReplyDelete
  12. பலமான எதிர்ப்பு அவர்களிடத்தில் இருந்து வரவேண்டும். செய்வார்களா?
    >>>
    வராது. எதிர்ப்புகள் பலமானால் கேஸ்கள் பலமாகும்னு அவங்களுக்கு தெரியும்

    ReplyDelete
  13. எல்லாத்துக்கும் பழகிகிட்டா சரியாயிடும் ., வேற வழி

    ReplyDelete
  14. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. தி.மு.கவுக்கு, மக்களைப் பற்றி நினைக்க நேரம் இருக்கா..என்ன?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"