ஒரு நாட்டின் மன்னர் ஒருவர், தன் அரச வாழ்வில் நிம்மதி அற்று இருந்தார். எதிலும் பிடிப்பு இல்லை, ஏதோ ஒரு ஏக்கம், சோகம் அவரை சூழ்ந்து இருந்தது.
நிம்மதி இல்லையே என்று இருந்தவர் ஒரு மகானிடம்(சூபி) சென்று தன் நிலையைக் கூறினார்.
'மன்னா! உனக்கென்று பல கடமைகள் இருக்கிறது, அவற்றையெல்லாம் செய்தாயா?' என அந்த மகான் கேட்டார்.
மகான்அவர்களே, இந்த நாட்டை நன்றாக செல்வா செழிப்புடன் வைத்துள்ளேன். அண்டை நாட்டுடன் நட்புறவு, மக்களுக்கு அடிப்படை வசதிகள் நன்றாக உள்ளன. மக்களுக்கு வரிச்சுமை கூட இல்லை, என்றார் மன்னர்.
"சரி! இப்போதைக்கு ஒன்று செய்வோம், உனது நாட்டை என்னிடம் கொடுத்துவிடு!"
எடுத்துக்கொள்ளுங்கள்!
'அதன் பிறகு நீ என்ன செய்வாய்?'
'நான் வேறு எங்காவது சென்று வேறு வேலை செய்து வாழ்ந்துகொல்கிறேன்!'
"மன்னா! எங்காவது போய் தெரியாத வேலை செய்து கஷ்டப்படுவதை விட, நீ என்னிடமே வேலை செய் . உனக்கு தெரிந்தது அரசாட்சி புரியும் வேலைதான், ஏன் பிரதிநிதியாக சென்று நீயே நாட்டை ஆளு, அதற்க்கு நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நான் எப்போதாவது வந்து கணக்கு,வழக்குகளை பார்க்கிறேன் என்றார் மகான்.
மன்னர் தன் அரண்மனைக்கு திரும்பிச் சென்றார்.
ஓர் ஆண்டு சென்றது.
அந்த மகான் , அந்த அரசனின் அரண்மனைக்குச் சென்று மன்னரை சந்தித்தார்.
இப்போது மன்னர் சந்தோஷத்துடன் காணப்பட்டார். நல்ல சுறுசுறுப்பு, மகானை வரவேற்று உபசரித்தார். எல்லாம் முடிந்ததும் ஒரு வருடத்திற்கான வரவு, செலவு கணக்குப் புத்தகத்தை மகானிடம் காண்பித்தார்.
உடனே மகான், கணக்கு இருக்கட்டும், நீ இப்பொழுது எப்படி இருக்கிறாய்? என கேட்டார்.
மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன்!
நிம்மதி இல்லை என்றாயே?
'அதுவும் கிடைத்துவிட்டது '
உன் இந்த ஓராண்டு பணியில் ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தாயா?
நிச்சயமாக! முன்பு ஒரே மன அழுத்தத்துடன் நிம்மதி அற்று இருந்தேன், ஆனால் இப்போது முழு நிம்மதியுடன் இருக்கிறேன்!.
"இந்த நிம்மது உனக்கு எப்படி கிடைத்தது?"
'அது எப்படி என்று தெரியவில்லை பெருமானே?'
மகான் புன்னகைத்தார்.
"மன்னா! முன்பு இது என்னுடைய ஆட்சி என்று எண்ணினாய், அதனால் எல்லா பொறுப்புகளும் உன்னைச் சூழ்ந்தன. அதனால் பல குழப்பங்கள் உனக்கு இருந்தது. எனவே உனக்கு நிம்மதி போய்விட்டது.
இப்போது இந்த ஆட்சி உன்னுடயதல்ல, நீ இதில் பிரதிநிதியாக பணியாற்றுகிறாய். இப்போது "நான்" உன்னைவிட்டு போய்விட்டது அதனால் நிம்மதியும் வந்தது .தொடர்ந்து இதே மனநிலையுடன் செயல்படு. நிம்மதி உன்னுள் நிரந்தரமாய் இருக்கும். இது உன் நாடு, இதை உன்னிடமே ஒப்படைக்கிறேன். சிறப்பாக ஆட்சி செய் என்றார் மகான்.
எனவே "நான்" என்ற அகந்தை ஒழிந்தால் மனதில் நிம்மதி நிரந்தரமாய் இருக்கும்.
படம் கூகிள் தேடல் மூலம் பெறப் பட்டது.
////இப்போது இந்த ஆட்சி உன்னுடயதல்ல, நீ இதில் பிரதிநிதியாக பணியாற்றுகிறாய். இப்போது "நான்" உன்னைவிட்டு போய்விட்டது அதனால் நிம்மதியும் வந்தது .தொடர்ந்து இதே மனநிலையுடன் செயல்படு. நிம்மதி உன்னுள் நிரந்தரமாய் இருக்கும். இது உன் நாடு, இதை உன்னிடமே ஒப்படைக்கிறேன். சிறப்பாக ஆட்சி செய் என்றார் மகான்.
ReplyDelete////
அற்புதமான கருத்து...
அப்படி போடு அருவாளை
ReplyDeleteபொருந்தும் ஆனா பொருந்தாது
ReplyDeleteஉண்மை தான். நமது ஆட்சி என்று நம்புவதை விட மக்களின் பிரதிநிதியாக தமது ஆட்சி நடைபெறுகிறது என்று நினைத்தால் குழப்பங்கள் தீரும்.
ReplyDeleteநீதிக்கதை சூப்பர். எப்பவும் நம்முடையத விட, அடுத்தவங்க பொருளை பாதுகாப்பதில் நாம் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
ReplyDeleteநம்ம தளத்தில்:
மனைவியா டிவியும், தோழியா மொபைல் போனையும் வச்சு செம காமெடிங்க...
இன்றைய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல.....எல்லோருக்கும் இந்தக்கதை பொருந்தும்....அருமை
ReplyDeleteசூபிக்கதைகள் என்றுமே வாழ்க்கையின் தத்துவத்தை சொல்லுவது...
ReplyDeleteஅரசியல் குறித்து தற்போது ஏதும் சொல்லமுடியாது...
சிறப்பான ஆட்சியா அப்படின்னா என்னன்னு கேட்பார்கள்...
நல்ல கதை தாம்பா...
ReplyDeleteநல்ல கருத்துள்ள கதை. வாழ்த்துக்கள்
ReplyDeletearumai
ReplyDeleteஅருமையான கருத்தைச் சொல்லும்
ReplyDeleteஅருமையான பதிவு.
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5
படம் கூகிள் தேடல் மூலம் பெறப் பட்டது. என் வலைத்தளம் தமிழ்மணம் ரேங்க் மற்றும் மகுடத்தில் வர வேண்டாமென்று முடிவெடுத்துள்ளேன்.
ReplyDeleteஇந்த கதைக்கும் நம்ம அரசியல்வாதிக்கும் எப்பிடிய்யா பொருந்தும்...??? எங்கே கனிமொழியையும், ராசாவையும் குற்றத்தை ஒத்துக்க சொல்லுங்க பார்ப்போம்....????!!!!!
ReplyDeleteஎனவே "நான்" என்ற அகந்தை ஒழிந்தால் மனதில் நிம்மதி நிரந்தரமாய் இருக்கும்.//
ReplyDeleteஉண்மை! நான் மறந்தால் நன்மை தான்.
நீதி நல்லா இருக்கு.. ஆனா இன்னைக்கு இது பொருந்தாதே? மனோ அண்ணன் சொன்னதை நான் வழிமொழிகிறேன்
ReplyDeleteஎனவே "நான்" என்ற அகந்தை ஒழிந்தால் மனதில் நிம்மதி நிரந்தரமாய் இருக்கும்.
ReplyDeleteஇந்த நீதி அனைத்து செயல்களுக்கும்
பொருந்தும் .பகிர்வுக்கு நன்றி நண்பரே
த.ம 6
//இப்போது இந்த ஆட்சி உன்னுடயதல்ல, நீ இதில் பிரதிநிதியாக பணியாற்றுகிறாய். இப்போது "நான்" உன்னைவிட்டு போய்விட்டது அதனால் நிம்மதியும் வந்தது .தொடர்ந்து இதே மனநிலையுடன் செயல்படு. நிம்மதி உன்னுள் நிரந்தரமாய் இருக்கும்.//
ReplyDeleteநல்லதொரு பயன்மிக்க கருத்து. மன்னன் மட்டுமல்ல.. அனைவருக்கும் இந்த கருத்து பொருந்தும். நான் என்னும் அகந்தை விட்டுவிட்டால் வெற்றி நம்மை எளிதாக வந்தடையும்..!!
// "நான்" என்ற அகந்தை ஒழிந்தால் மனதில் நிம்மதி நிரந்தரமாய் இருக்கும்.//
ReplyDeleteஉண்மைதான் நண்பரே..
ஒவ்வொருவரும் வாழ்வில் உணர வேண்டிய வாசகம்
இன்றைய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல.....எல்லோருக்கும் இந்தக்கதை பொருந்தும்....அருமை
ReplyDeleteஎல்லோருக்கும் இந்தக்கதை பொருந்தும்...
ReplyDelete