Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/03/2011

கனிமொழி ஜாமீன் மறுப்பு - நடந்தது என்ன?- விரிவான அலசல். 2G case Bail pleas of Kanimozhi dismissed


2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி கடந்த 5மாத காலமாக சிறையில் இருக்கிறார் கனிமொழி.

மேலும் இந்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆர். ராசா உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கனிமொழி உள்பட 7 பேர் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை டெல்லியில் தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த ஜாமீன் மனு கடைசியாக கடந்த மாதம் 24ம் தேதி டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் மற்றும் சினியுக் பிலிம்ஸ் அதிபர் கரீம் மொரானி ஆகிய 5 பேரின் ஜாமீன் மனுக்களை சிபிஐ எதிர்க்கவில்லை.


இதையடுத்து இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் என்றே அனைவரும் எதிர்ப்பார்த்தனர். ஆனாலும் இந்த வழக்கில் தீர்ப்பை நவம்பர் 3ம் தேதிக்கு (இன்று) நீதிபதி ஒத்தி வைத்துவிட்டார்.

இந் நிலையில் இன்று நடந்த விசாரணையில் கனிமொழி உள்பட 5 பேர் மனுக்களை எதிர்ப்பது இல்லை என்று எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று சிபிஐயிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.


ஜாமீன் மனுவை நிராகரித்ததற்கு நீதுபதி ஷைனி கூறிய காரணங்கள் :


கனிமொழி மக்களுக்கான பொது நிதியை தனது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தியுள்ளார் என்றும், இது மாபெரும்குற்றமாக கருதப்படுகிறது. மேலும் இது மிகவும் கடுமையானது. மேலும் பொது நிதியை தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தியுள்ளார்.

எந்தவித நிர்பந்தத்தின் அடிப்படையிலும் இந்த தீர்ப்பு அளிக்கப்படவில்லை.உண்மை மற்றும் வழக்கின் தன்மை ஆகியவற்றை கருத்தில்கொண்டு மட்டுமே இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது.

சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காதது சட்டத்தின் பார்வையில் எந்தவித விளைவையும் ஏற்படுத்தாது. கனிமொழி ஒரு பெண் என்பதால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று ஒரு கற்பனை ஜோடிக்கப்பட்டுள்ளது . இது ஏற்க கூடியது அல்ல. 

குற்றம்சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் முக்கியமானவை. சமுதாயத்தில் ஒரு உயர்ந்த பொறுப்பில் எம்.பி.,யாக இரு்ககிறார். இருந்தாலும் இவருக்கு ஜாமின் வழங்க முகாந்திரம் இல்லை என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.


திமுக எம்பியான கனிமொழி கடந்த 5 மாதங்களாக சிறையில் இருக்கிறார். அவரது ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே 3 முறை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில்  இன்றும் 4வது முறையாகநிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.

24 comments:

  1. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.

    ReplyDelete
  2. காங்கிரசின் அதிகார உள்நோக்கமின்றி வழக்குத் தொடரப் படும் என்றால், முதலில் ப.சிதம்பரம் உள்ளே போக வேண்டும். அப்புறம் இன்னும் நிறைய பட்டியல் நீளும்...
    அதை விட்டு விட்டு, கனி மொழிக்கு ஜாமீன் கிடைக்காததை மட்டும் வைத்து வழக்கு சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்ற மாயைதான் உருவாக்கப் படுகிறது.
    அந்த மாயயயில் சிக்கிவிடக் கூடாது என்பதே என் வேண்டுகோள்.

    ReplyDelete
  3. //
    உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.//

    100 % true

    ReplyDelete
  4. இன்னும் நிறைய சீன் இருக்கு பாஸ் !!

    ReplyDelete
  5. தகவல் அறிந்தேன் ,த.ம 2

    ReplyDelete
  6. அடுத்த அட்டாக் நவம்பர் 11..
    பொருத்திருந்து பார்ப்போம்....

    ReplyDelete
  7. ராவா குடிக்கிரவன் ஊறுகாயை நக்கியே ஆகணும்ங்குற எனது பொன்மொழியை ஏன் வாத்தி போடலை...?

    ReplyDelete
  8. இன்னைக்கு அம்மிணி வெளியே வந்துரும்னு கடுப்பா இருந்தேன் பாஸ், ஹி ஹி கோர்ட் சரியா பெப்பே காட்டி அனுப்பிருச்சி, மக்களுக்கு சந்தொஷம்ய்யா....

    ReplyDelete
  9. சரி சுருட்டுன பணமெல்லாம் எங்கே போச்சு..?

    ReplyDelete
  10. கருன்,

    உப்பு தின்றவர்கள் இன்னும் நிறைய பேர் எம்.பி-க்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்காங்களே!

    அவங்களை எப்ப தண்ணி குடிக்க வைப்பாங்க.

    ReplyDelete
  11. இவையளுக்கு இது காணாது இன்னமும் அனுபவிக்க வேணும்

    ReplyDelete
  12. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.//

    கண்டிப்பாக...இது திருடிய உப்பல்லவா...கூடுதலாய்...

    ReplyDelete
  13. உப்பை தினறவன் தண்ணி குடிக்கலேன்ன
    என்ன ஆகும்.

    ReplyDelete
  14. காத்தாடி பறக்குது, வாலும பறக்குது, ஆனா அந்த நூல் மட்டும் கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது பாஸ்

    ReplyDelete
  15. இது மாதிரி நீதிபதிகள் உண்மையிலேயே வலுவாக நீதியின் நிலையில் நின்றால், நிச்சயம் உள்ளாட்சி துறை அமைச்சர் சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங், நம் முதல்வர். ஜெயலலிதா... உட்பட மற்றும் பலர் உள்ளே போவது உறுதி. ஆனாலும் பாருங்க, இவுகளுக்கு மட்டும் சட்டம் என்னமாய் வளைந்து நெளிந்து நீர்த்து போகும் என்பதை!

    ReplyDelete
  16. காலம்போன காலத்தில் கலைஞருக்கு இவ்வளவு மனக்கஷ்டம் பாருங்க...

    ReplyDelete
  17. சத்ரியன் சொன்னதை வழிமொழிகிறேன்..

    ReplyDelete
  18. இவர்களுக்கு இது எல்லாம் தேவைதான்....

    ReplyDelete
  19. இவர்கள் உப்பைத்தின்றவர்கள் அல்ல

    ஊரைத்தின்று உடைப்பில் போட்டவர்கள்!

    ReplyDelete
  20. மாப்ள இந்த விஷயம் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தனிப்பார்வையில் தான் நடக்குது எனவே...அரசியல் நிர்பந்தங்கள் உள்ள நுழையறது கொஞ்சம் கஷ்டம் அதான் நடக்கல...இல்லன்னா சூனியக்காரர் இந்நேரம் தன் சாகசத்தை காட்டி இருப்பார்...வாழ்க ஜன நாயகம்!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"