Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/07/2011

'பிளாக்' (BLOG) கிற்கு அடிமையானவர்கள் - ஓர் அதிர்ச்சி தகவல்


இன்று உலகம் முழுதும் கணினி பயன்படுத்துவோர் 'பிளாக்' எனப்படும் வலைத்தளத்தை பார்க்காதவர்களும், பயன்படுத்தாதவர்களும் மிகக் குறைவே. மிகப் பெரிய சமூக வலைத் தளமான 'பேஸ்புக்' கை அடுத்து பலரும் பிலாகைப் பயன் படுத்துகின்றனர்.


இந்த 'பிளாக்' மூலம் பலரும் பல சமூக பிரச்சனைகளையும், தம் சொந்த அனுபவங்களையும், நகைச்சுவை, சினிமா பற்றியும் பகிர்ந்து வருகின்றனர்.


இந்த பிளாக் மூலம் பலருக்கு புதிய நண்பர்களும் கிடைக்கின்றனர் . பல தெரியாத தகவல்களையும் தெரிந்து கொள்ள இந்த பிளாக் உதவுகிறது.


இந்த பிளாக் மூலம் பல நன்மைகள் இருந்தாலும் சிலர் இதற்க்கு அடிமையாகி விடுகின்றனர்.


மது போன்ற பழக்க வழக்கங்களால் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த போதை தரக்கூடிய சமாச்சாரங்களை பயன் படுத்தவில்லை எனில் உடல் நடுங்க ஆரம்பிக்கும், மனம் எப்பாடுபட்டாவது அதை பயன்படுத்த வேண்டும் என துடிக்கும். இதையே அப்பழக்கத்திர்க்கு அடிமையாதல் என்கிறோம்.


அதுபோல சிலருக்கு பிளாகில் இல்லையெனில் மனம் அதைப் பற்றியே சிந்திக்கும். வேறு வேலைகள் செய்ய மனம் போகாது.  சில பல காரணங்களால் வீட்டில் இணையம் வேலை செய்யவில்லை எனில் பிரவுசிங் சென்டர் சென்றாவது பிளாகில் நேரத்தை செலவிட மனது துடிக்கும்.


இதையே பிலாகிர்க்கு அடிமையாதல் என்கிறோம். உறவுகளே பிளாக் போன்றவைகள் டைம் பாஸ் க்காக மட்டும் பயன்படுத்துங்கள். அதுவே உங்கள் வாழ்கையாகாது.


பிளாக் மூலம் நல்ல நட்புகளை வளர்ப்போம் .   

32 comments:

  1. ஒரு அடிமை சிக்கிட்டான்யா

    ReplyDelete
  2. நல்ல வேளை...அதோட குடுமி நம்ம கையில....மாறாம பாத்துக்கலாம்....கவலைய விடுங்க....

    ReplyDelete
  3. நாம் முதலில் கனினிக்கு அடிமையாகிறோம் பிறகு facebook blog cames ஏதாவது ஒன்றுக்கு அடிமையாகிறோம்
    எனக்கு சில சமயம் ஏண்டா பிளாக்கை ஓப்பன் பண்ணிணோம் என்று எரிச்சலா இருக்கு செய்யர வேலை கனினில
    முதல்ல எப்படா சடவுன் பண்ணிட்டு வீட்டுக்குபோலாம்ன்னு இருக்கும் இப்ப தலைகீழ்

    ReplyDelete
  4. @ புரட்சிக்காரன் அவர்களே என்மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறைக்கு நன்றி..

    நீங்களே கவுன்சிலரின் பதிவையும், என்னுடையப் பதிவையும் படித்துப் பாருங்கள், ஒரே பிரச்சனைப்பற்றி எழுதி இருப்பதால் உங்களுக்கு அதுமாதிரி தோன்றி இருக்கலாம்.

    எனினும் தங்கள் சுட்டிக் காட்டியதர்க்கு நன்றிகள்..

    மீண்டும் ஒரு முறை என்னை சொந்தமாக பதிவுகள் எழுத தூண்டி என்னை ஊக்கப்படுத்துவதற்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. உண்மைதான் சகோ!
    நானே ஒருவார் மருத்துவ மனையில்
    இருந்தபோது உணர்ந்தேன்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. உண்மைதான்.... நிறைய பேர் இதில் அடிமையாகிவிட்டனர்....

    அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சுதானே....

    ReplyDelete
  7. இதையே பிலாகிர்க்கு அடிமையாதல் என்கிறோம். உறவுகளே பிளாக் போன்றவைகள் டைம் பாஸ் க்காக மட்டும் பயன்படுத்துங்கள். அதுவே உங்கள் வாழ்கையாகாது.


    பிளாக் மூலம் நல்ல நட்புகளை வளர்ப்போம்

    ReplyDelete
  8. //அதுபோல சிலருக்கு பிளாகில் இல்லையெனில் மனம் அதைப் பற்றியே சிந்திக்கும். வேறு வேலைகள் செய்ய மனம் போகாது. சில பல காரன்களால் வீட்டில் இணையம் வேலை செய்யவில்லை எனில் பிரவுசிங் சென்டர் சென்றாவது பிளாகில் நேரத்தை செலவிட மனது துடிக்கும்.//

    நிதர்சன உண்மை நண்பரே..

    ReplyDelete
  9. நம் கையில் இருக்கும்வரை நமக்கு நல்லது.

    ReplyDelete
  10. நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். Time pass இற்காக என்பதுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாமே

    ReplyDelete
  11. அத நீங்க சொல்றது தான் தலைவரே ஹைலைட்...

    ReplyDelete
  12. //அதுபோல சிலருக்கு பிளாகில் இல்லையெனில் மனம் அதைப் பற்றியே சிந்திக்கும். வேறு வேலைகள் செய்ய மனம் போகாது. சில பல காரன்களால் வீட்டில் இணையம் வேலை செய்யவில்லை எனில் பிரவுசிங் சென்டர் சென்றாவது பிளாகில் நேரத்தை செலவிட மனது துடிக்கும்.//
    >>>>>>>>>>>>>>>.
    உண்மையை அப்படியே புட்டு புட்டு வைத்துவிட்டீர் சகோ!. ப்ளாக் பொழுது போக்கிற்காக மட்டுமேயன்றி அதிலேயே பொழுதை கழிக்க கூடாது என்பதை தெளிவாக சொல்லி விட்டீர்.

    ReplyDelete
  13. உண்மைதான்.... நிறைய பேர் இதில் அடிமையாகிவிட்டனர்....
    எதிலுமே அளவுடன் செயல்பட்டால் பிரச்சினை இல்லை.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. உண்மைதான் பாஸ்...பலர் இதற்கு அடிமையாகிவிட்டனர்.அளவோடு செயற்படவேண்டும்

    ReplyDelete
  16. @புரட்சிக்காரன் உங்கள் காரசாரமான பதிவைப் படித்தேன்,உங்கள் விமர்சனங்களை நான் ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்கிறேன்..

    நன்றி...

    ReplyDelete
  17. என்னைகேட்டால், தமிழ் சீரியல் போல சீரியசாக பயன்படுத்தாதீர்கள்! நல்ல ஆலோசனை! ஹும்,யாரு கேட்கிறா?

    ReplyDelete
  18. ஹா ஹா ஹா ஹா இந்த பதிவுக்கு முதல் கமென்ட் போட்டுருக்கானே அந்த மூதேவி, பிளாக் சைக்கோவா மாறி பல காலமாச்சு ஹி ஹி....!!!

    ReplyDelete
  19. அடப்பாவிகளா இதுக்கும் மைனஸ் ஓட்டா அவ்வ்வ்வ்வ்வ்.....!!!

    ReplyDelete
  20. ஹா ஹா ஹா ஹா சிபி'யின் டவுசர் கிழிஞ்சது போங்க...

    ReplyDelete
  21. முக நூல் பிரச்சினை வேறு, வலை பூ பிரச்சினை வேறு... இதில் ஆக்கப் பூர்வமாய் சிந்திக்கலாம், எழுத்துக்கள் அழியாமல் எழுதும் கல்வெட்டு இது.. முகநூல் ஆற்று நீரில் எழுதும் செயல்... இருந்தாலும் பிரபல பதிவர் என்ற பெருமையை நோக்கி ஓடுபவர்கள் கவனிக்க வேண்டியது இந்த பதிவு

    ReplyDelete
  22. உண்மைதான் நண்பரே,

    நிறைய பேர் இதில் அடிமையாகிவிட்டனர்....
    அளவுடன் செயல்பட்டால் பிரச்சினை இல்லை.

    ReplyDelete
  23. இன்னொரு அடிமை வந்திருக்கேன் ஹோசூர்.........

    ReplyDelete
  24. நல்ல பகிர்வு. ரொம்பவும் ப்ளாகை துரத்தக்கூடாது.

    ReplyDelete
  25. கணிணிக்கும் இணையத்திற்கும் அடிமையாகி சில வருடங்கள் ஓடி விட்டது..

    இப்போது தான் பதிவுலகத்தின் போதை என்னை ஆட்கொண்டது போல் இருந்தது.. அதற்குள் தெளிய வைத்தமைக்கு நன்றி!!

    ReplyDelete
  26. இதற்கு பிளாக்கோபோபியா எண்டு பெயர் . வேகமா இன்டர்நெட்டில் தேடாதீங்க .... இந்த பெயர் கொடுத்ததே நான்தான் . ஹி ...ஹி

    ReplyDelete
  27. எனக்கும் கொஞ்ச காலமாகவே தோணியது...

    அளவோடு ஆக்கப்பூர்வமாயும் உபயோகிக்கலாமே...

    ReplyDelete
  28. நானு அப்படியெல்லாம் அடிமை இல்லீங்கோ!

    ReplyDelete
  29. அருமையான பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

    புதிய புரட்சிக்காரனுக்கு மதிப்பளித்து பதில் செய்த பாங்கின் மூலம் உங்கள்ஆற்றல் புரிகிறது..

    சமூக வலைத்தளங்களுக்கும், வலைப் பதிவிற்கும் வேறுபாடுகள் இருக்கின்றது நண்பரே.. இங்கே ( வலைப் பதிவில் ) ஆர்வம் செலுத்தும் அனைவரையுமே அடிமைகளாக சித்தரிப்பது தவறாகவே தோன்றுகிறது. தங்களது நேரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஒரு விளிப்புணர்வு பெற்ற சமூகத்தையே நாம் உருவாக்குகின்றோம்.

    சமூக தளங்களில் நல்ல நண்பர்களை பெறுகின்றோம் என்பதினை காட்டிலும் அதை தவறாக உபயோகப் படுத்தும் கூட்டமே அதிகம்.

    இங்கே ஆர்வத்தால் கட்டிப்போட்டிருக்கும் எவரும், தங்கள் ஆதங்கத்தை எப்படியும் தங்கள் பதிவுகளில் காட்டியிருப்பார்கள். நிச்சயமாக சொல்ல முடியும் வலைப்பதிவு செய்யும் 100 ல் 95 பேர் நிச்சயமாக சமூகத்தின்பால் கோபம் அல்லது அக்கரை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் சமூக வலைத் தள உறுப்பினர்களில் பெறும்பாலோனோர் தங்களின் பொழுதுபோக்கு அல்லது காதல், காமம் போன்ற கோட்பாடுகளில் அதிகம் கவனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள்.. ஸ்பெக்டரம் பற்றியும் அன்னா ஹசாரே பத்தியும் ஏன் இணையத்தின் பயன்பாடு பற்றியும் கூட நமக்கெல்லாம் எந்த செய்தித்தாள்கள் அல்லது ஊடகங்கள் தெரிவித்தன..? வலையில் தேடிப்பாருங்கள் வலைப் பதிவுகளின் சாதனைகள் தெரியும்


    சமூக வலைத்தளங்களை நாம் குற்றம் சொல்லவில்லை.

    எதையுமே ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் ஆபத்து இல்லை.

    கத்தியானது அதை கையாளுபரை கொண்டே வாழ்கிறது என்பதை மறுக்க முடியாது அல்லவா..?

    ஒரு ஆரோக்கியமான சமூகம் விளித்தெள இன்றைய கணினி யுகத்தில் வரப்பிரசாதமே வலைப்பூ.

    சிலர் வலைப்பூக்களையும் மற்ற சமூக வலைத்தளங்களைப் போல் உபயோகம் செய்வதையே கண்டிக்கின்றோம்.

    இருப்பினும், தங்களின் வேலை நேரம் போக மீதி நேரங்களில் வலைப்பதியுங்கள் நண்பர்களே

    தமிழ் பதிவர்களும் தொழில்முறை பதிவர்களாக உருவாகும் காலம் நெருங்கி வருகின்றது என்பது நினைவிளிருக்கட்டும்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"