Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/10/2011

இப்படியெல்லாம் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்ல?



இன்னைக்கு காலையில மூணாவது பீரியட் எனக்கு ப்ரீ. அப்ப எங்க தலைமை ஆசிரியர் வந்து இன்னைக்கு ஒன்பதாம் வகுப்புக்கு சமூக அறிவியல் சார் வரல, அந்த வகுப்பு ஒரே சத்தமா இருக்கு நீங்க அந்த வகுப்புக்கு போய் கொஞ்சம் பாத்துக்கோங்க ன்னு சொன்னாரு. சரி நானும் அந்த வகுப்புக்கு போனேன். 

மாணவர்களைப் பார்த்து உங்களுக்கு ஏதாவது பொதுஅறிவு கேள்விகளில் ஏதாவது கேட்கணும்னா எங்கிட்ட கேளுங்க, எனக்கு தெரிஞ்சா பதில் சொல்றேன்னு சொன்னேன்.( மனசுல ஒரு பயம் இருந்தது ஏடாகூடமா எனக்கு தெரியாத கேள்விகள் கேட்டா என்ன பண்றது) சரி சமாளிப்போம், அவர்கள் கேட்ட கேள்விகள் :


உலகில் இரவே இல்லாத இடம் - எது?

ஹேமர்பாஸ்ட் எனப்படும் பனிப் பிரதேசம்.

உலகத்தின் ஸ்டேண்டர்ட் டைம் என்பது 'கிரீன்விச்' என்ற இடத்தை மையமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் ஸ்டேண்டர்ட் டைம் எந்த இடத்தை மையமாகக் கொண்டுள்ளது?

உஜ்ஜையினி நகரம், குஜராத் மாநிலம். உலக நேரமான 'கிரீன்விச்' நேரத்தை விட உஜ்ஜையினி நேரம் 5 மணி 30 நிமிடம் அதிகம்.

தாயின் வயிற்றில் கரு உருவானதும் முதலில் எந்த உறுப்பு உருவாகும்?

இருதயம்.

ஒரு டி.எம்.சி தண்ணீரின் அளவு என்ன?

2800 கோடி லிட்டர்.

தொடர்ந்து ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு இருக்கும் பகுதி எது?

அன்டார்டிகா.

மனிதனின் ஞாபக சக்தியை கவனிக்கும் மூளையின் பகுதி என்ன?

ஹிப்போ கேம்பஸ்( C.A.3.).

ஒரு துளி ரத்தம் என்பது எவ்வளவு மில்லி..?

0.05 மில்லி.

தாவரங்களில் மிக வேகமாக வளரும் தாவரம் எது?

மூங்கில், இது 24 மணி நேரத்திற்குள் இரண்டரை அடி வளரும்.


"ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை" - இதுமாதிரி பழமொழிக்கு ஏதாவது காரணம் இருக்கா சார்?

இருக்கே, இலுப்பை மரத்தில் பூக்கும் பூக்கள் சாப்பிட இனிப்பாக இருக்கும். ஒரு மரத்தில் சுமார் நூத்தி ஐம்பது கிலோ பூ பூக்கும். ஒரு பூவில் எழுவது சதவீதம் சர்க்கரைச் சத்து இருப்பதால், இந்தப் பூக்களை நிழலில் உலர வைத்து பொடி செய்து அதை தேயிலைத் தூளில் கலந்து டீ தயாரித்தால் அந்த டீக்கு சர்க்கரை தேவையில்லை.

20 comments:

  1. நல்லதுங்க .. நானும் அறிந்து கொண்டேன் ..

    ReplyDelete
  2. சமூக அறிவியல் சார் வரலியாங்க..
    இருக்கட்டும்...

    ReplyDelete
  3. பரவாயில்லையே வகுப்பு உறுப்படையாகத்தான் போயிருக்கு...

    இன்னும் நிறைய விஷயம் சொல்லுங்க...

    ReplyDelete
  4. இதுலே ஒன்னுக்கும் பதில் உங்களுக்கு தெரியலைங்கற கடைசி வரிய அடிக்க மறந்திட்டீங்க கருண்....அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  5. அருமையான தகவல்கள்..! அரிய தகவல்களும் கூட..! பகிர்வுக்கு நன்றி கருன்..!!

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு.$ பாராட்டுக்கள்..

    ReplyDelete
  7. வாத்தி வாத்தி நானும் உங்கள் மாணவன்தான் வாத்தி, நானும் கேள்வி கேக்கட்டுமா...???

    கில்மா என்றால் என்ன...? சிபி அதை மிகவும் விரும்புவது ஏன்...?

    பதில் சொல்லலைன்னா மவனே வாத்தின்னு பாக்கமாட்டேன் கல்லெடுத்து எரிஞ்சிபுடுவேன்....

    ReplyDelete
  8. சிறப்பான பகிர்வு... தகவல் சில புதியவை.... நன்றி

    ReplyDelete
  9. மாணவர்களின் தயவால் நாங்களும் சில விடைகள் அறிந்து கொண்டோம்.

    ReplyDelete
  10. நன்றி சார் எங்களுக்கும் சொல்லித் தந்தமைக்கு அருமையான
    தகவலை .வாழ்த்துக்கள் உங்கள் பகிர்வுக்கு .....

    ReplyDelete
  11. உங்கள் வலையில் கூகுளின் விளம்பரம் பற்றிய பதிவினை எதிர்பார்கின்றோம் நண்பரே..

    ReplyDelete
  12. நல்லதகவல் சகோ

    த.ம 6

    ReplyDelete
  13. வணக்கம் சார்..

    தெரியாத பல தகவல்களும் தெரிந்து கொண்டேன் நண்பரே..

    நன்றி பகிர்விற்க்கு..

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  14. "ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை"விளக்கம் உண்மையில் புதிய தகவல் எனக்கு.அனைத்துத் தகவல்களுக்கும் நன்றி கருன் !

    ReplyDelete
  15. பாஸ் சில தகவல்களை அறிந்து கொண்டேன் அதிலும் கடைசி பழமொழிக்கு உங்கள் விளக்கம் சிறப்பு

    ReplyDelete
  16. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. நல்ல தகவல்களைப் பகிர்ந்திருக்கீங்க வாத்தியாரே... அருமை.

    ReplyDelete
  18. //தாவரங்களில் மிக வேகமாக வளரும் தாவரம் எது?

    மூங்கில், இது 24 மணி நேரத்திற்குள் இரண்டரை அடி வளரும்.//

    ஒரு வகையில் சரி, ஒரு வகையில் தவறு... அதன் விதையில் இருந்து அது முளைப்பதற்கு ஆண்டுகள் பல ஆகும் என்று படித்ததாய் நினைவு..

    ReplyDelete
  19. நல்ல தகவல்கள் நன்றி

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"