Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts
12/30/2011
11/24/2011
ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்!!!
ஏழ்மையான குடும்பத்தில் அவன் பிறந்தான். சிறுவனாக இருந்தபோது தந்தையின் பணிகளுக்கு உதவிபுரிந்தான். ஒன்பது வயதில் ஒன்பது மைல் நடந்து ஆரம்பக் கல்வியைக் கற்றான். ஒரு நீக்ரோ பெண்ணை அடிமையாக விற்கப்படுவதைக் கண்டு அதிர்ந்தான். இம் மாதிரியான கொடுமைகளை தடுத்து நிறுத்த அரசியலில் ஈடுபடவேண்டும் என முடிவு செய்தான். அரசியலில் குதித்தான்.
11/15/2011
சொந்த அனுபவம்..(மகான்களின் வாழ்க்கையில்)
Tuesday, November 15, 2011
அனுபவம், சமூகம், செய்திகள், மகான்கள், ராஜாராம் மோகன்ராய், வரலாறு
19 comments
8/05/2011
ஆக்னிஸ்மேரியும் அம்லோர் அம்மாளும் - ஒரு இரத்த சரித்திரம் ( உண்மைச் சம்பவம்)
வார விடுமுறை என்பதே அவர்களுக்கு கிடையாது. மாதச் சம்பளம் 12 ரூபாய் மட்டுமே! பிட்டர் வேலை பார்க்கும் தொழிலாளிக்கு தினக்கூலி 12 அணாக்கள் (75 புதிய காசுகள்); கலாசி வேலை பார்க் கும் தொழிலாளிக்கு 9 அணா 4 பைசா (சுமார் 60 புதிய காசுகள்) தினக்கூலி; எழுத்தர் வேலை செய்பவர்களுக்கு மாதச் சம்பளம் 25 ரூபாய்; வருடத்திற்கு அவர்களுக்கு 1 1/2 ரூபாய் ஊதிய உயர்வு. ஸ்டேஷன் மாஸ்டருக்கு மாதச் சம்பளம் 30 ரூபாய்.
4/11/2011
கீழைக் காற்று மேற்கை வெல்லும்!!!
அப்போது அவன் பள்ளியில் படித்தக் கொண்டிருந்தான். ஒரு நாள் நண்பர்களுடன் பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த போது தானிய வியாபாரிகள் கும்பல் கும்பலாக வந்து கொண்டிருந்தனர். அதைக் கண்ட அவன் அவர்களிடம் “ ஏன் கும்பல் கும்பலாக வருகிறீர்கள் ? ” என்று கேட்டான்.
ஒரு வியாபாரி அவனிடம் “ இந்த ஆண்டு சங்ஷா நகரத்தில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினி கிடந்தனர்”. இது பற்றி நகர ஆளுநரிடம் முறையிட்டது. ஆனால் ஆளுனர் அவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார். இதனால் கோபம் கொண்ட மக்கள் கிளர்ச்சியில் இரங்கினர். அத்துடன் நகரிலிருந்து ஆளுநரையும் விரட்டி அடித்தனர்.
மக்களின் எழுச்சியைக் கண்டு ஜீவாங் என்ற உள்துறை அதிகாரி உதவி செய்வதாக உறுதி அளித்தான். இதை அறிந்த அந்நாட்டு மன்னன் ஜீவாங்கை உள்துறை அதிகாரி பொறுப்பில் இருந்த நீக்கினான். எதிர்த்த மக்களை சிறைச்சேதம் செய்து அவர்களின் தலைகளை குச்சிகளில் குத்திவைக்க ஏற்பாடு செய்தான். எனவே இனியும் இங்கு வாழ்வது ஆபத்தானது ஆகையால் அனைவரும் ஊரைவிட்டு வெளியேறுகிறோம் என்றான் அந்த தானிய வியபாரி.
இதைப்போல அந்த மன்னனின் கொடுமைகள் ஏராளம். மக்கள் படும் துயரம், மன்னர் செய்யும் கொடூரம் இரண்டையும் இணைத்துப் பார்த்த அவன் முற்போக்குச் சிந்தனையில் ஆழ்ந்தான். இந்த சிந்தனை இவனை கம்யூனிஸ்ட் ஆக்கியது.
கட்சியில் படை அமைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டான். அப்போது ஆளும் வர்கத்தினர் அவனை கைது செய்து சுட்டு கொல்ல முயன்றனர். அதிலிருந்து அவன் தப்பினான்.
காலப் போக்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சி அவன் தலைமையில் செயல்படத் துவங்கியது.லாங்க் மார்ச்சுக்கு தலைமை ஏற்றான். 1945 ஆகஸ்ட் 25 அன்று சீனம் அவன் ஆளுகைக்குள் வந்தது.
ஆம்!! கட்சியின் தொண்டன், செயல்வீரன், அமைப்பாளன், களப்பணியாளன், சிறந்த நிர்வாகி என பல பொறுப்புகளை திறம்படச் செய்த முடித்த அவன் மிகச்சிறந்த கவிஞனும்கூட..! அவன்(ர்) யார்? அடுத்த வரலாற்றுப் பதிவில் காண்போம்.
தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடவும்.
முந்தைய வரலாற்றுப் பதிவிற்கான விடை : விவேகானந்தர் .
மிகச் சரியான விடைச் சொன்ன
அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
3/22/2011
காணும் பெண்களெல்லாம்...
வெளி தேசத்தின் ஒரு நகரம்... மகளிர் மன்றக் கூட்டம்.... இந்தியப் பெண்கள் என்ற தலைப்பில் ஒருவர் பேச அழைக்கப் பட்டிருந்தார். அப்போது அவருக்கு முப்பது வயது. அந்த வெளிநாட்டுப் பெண்கள் இவர் என்ன பேசிவிடப் போகிறார் என்ற இளக்காரத்துடன் அமர்ந்திருந்தனர்.
அவன் பேசத் தொடங்கினான். இந்திய பண்பாடு, கலாசாரம், ஒழுக்கம், ஒருவனுக்கு ஒருத்தி என்றநிலை, பெண்மையை போற்றும் பண்பு என அவனுடைய முழக்கம் இந்திய மண்ணின் மகத்துவத்தை பேசி முடித்தது.
கூடியிருந்த அத்தனை பெண்களும் வியந்து கைதட்டினர். அந்தக் கூட்டத்தில் இருந்த பதினெட்டு வயதுப் பெண்ணொருத்தி அந்த முழக்கத்தைக் கேட்டு தன்னை இழந்தாள்!!!.
அதன்பின் அந்த தேசத்தில் அவன் எங்கு பேசினாலும் முன்வரிசையில் ஓடிச் சென்று அமர்ந்தாள். ஆம் ! அவனுடைய அறிவுக்குத் தலைவணங்கிய அவள், மெல்ல மெல்ல அவனுடைய அழகுக்கு அடிமையானாள். அவன் பல மாதங்கள் அந்த தேசத்தில் தங்கி பல இடங்களில் பேசினான். அவன் சென்ற அனைத்து கூட்டங்களுக்கும் அவளும் சென்றாள். முடிவில் அவனைச் சந்திக்க அவள் விரும்பினாள். அவளுடைய முயற்சிகள் எல்லாம் தோற்றன.
ஒருநாள் அவன் அந்தத் தேசத்திலிருந்து விடைபெறுவதாக பத்திரிக்கை வாயிலாக செய்தி அறிந்து அவளுடைய விருப்பத்தை சொல்லிவிட விமான நிலையம் விரைந்தாள்.
அங்கு அவனைச் சந்தித்து “நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்” என்றால் அவள்! அப்படியா? என்றான் அவன்! என் அழகும் உன் அறிவும் சேர்ந்து உலகமே வியக்கும் குழந்தை நமக்கு பிறக்கும் என்றாள் அவள்.
இதைக் கேட்டு சிரித்த அவன், நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் பிறக்கும் குழந்தை அறிவாளியா எனத் தெரிய குறைந்தது இருபது வருடமாவது ஆகலாம். ஒருவேளை நமக்குப் பிறந்த குழந்தை அறிவற்றதாக இருந்தால் என்ன செய்வது? அதனால் இப்போதே என்னை நீ மகனாக ஏற்றுக்கொள் தாயே! என்றான் அவன்.
அந்தப் பெண் பதில் கூற இயலாமல் தலைகுனிந்து நின்றாள்.
ஆம்!! கண்ட பெண்களையெல்லாம் தாயாகக் கண்டு மகிழ்ந்த அந்த மகான் யார்? அடுத்த வரலாற்றுப் பதிவில் காண்போம்.
தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடவும்.
முந்தைய வரலாற்றுப் பதிவிற்கான விடை : இடி அமீன் .
மிகச் சரியான விடைச் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
முந்தைய பதிவு: முடிவெடுக்கக் கற்கலாமா? -2
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
3/18/2011
3/17/2011
கிறிஸ்துவர்களைக் கொன்று குவித்த மாமிச மலை!?
அவனுக்கு எந்த வேலையும் தெரியாது. மகா சோம்பேறி. எவர் சிபாரிசிலோ அவன் ராணுவத்தில் சேர்ந்தான். அதுவும் ராணுவச் சமையல்காரருக்கு உதவியாளனாக!!
இந்தப் பணியில் சேர்ந்த அவன் சிறிது காலத்தில் தலைமை சமையற்காரனாக உயர்ந்தான். அதுவும் அவனுடைய திறமையால் கிடைத்ததன்று. சூழ்ச்சியால்தான் எதையும் சாதிக்க முடியும் என்ற கொள்கை கொண்ட அவன், வாழ்வின் தொடக்கத்திலேயே சதியின் துணைகொண்டு சாதிக்கத் தொடங்கினான்.
ஒரு சமயம் அந்த நாட்டு ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பைபெற்ற அவன், ஒரு சிலமணி நேரத்திலேயே அந்த ஜனாதிபதியின் உள்ளத்தில் இடம்பெற்றான். அந்த ஏமாளி ஜனாதிபதி அவனுக்கு தளபதி பதவி கொடுத்தார். ஒரு நாள் ராணுவப் புரட்சி நடத்தி அந்த ஜனாதிபதியை விரட்டியடித்தவிட்டு அவன் ஜனாதிபதி பொறுப்பேற்றான்.
அவனுக்கு எழுதப் படிக்க தெரியாது. அதனால் படிப்பறிவு இல்லாதவர்களையே அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் நியமித்தான். “காமன் வெல்த் நாடுகளின் தலைவன்”, “இங்கிலாந்தை வென்ற வீரன்”, “ஸ்காட்லாந்தின் கடைசி மன்னன்” போன்ற பட்டங்களை தானே சூடிக்கொண்டான்.
தன் நாட்டில் கிறுஸ்தவர்கள் எவரும் வாழக்கூடாது என்று அவர்களைக் கொன்றுகுவித்தான். ஐந்து பெண்களை திருமணம் செய்துகொண்ட அவன் பல பெண்களிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.
இப்படி அரசியல், காமம் போன்றவற்றில் வெறியனாக இருந்த அவன் கடைசியில் தான்சேனியா நாட்டை தன் வயப்படுத்த நினைத்தான். அந்நாட்டு அதிபரிடம் ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு வருகிறாயா என சவால் விட்டான்.
அந்த கொடூர ஜனாதிபதி யார்? அடுத்த வரலாற்றுப் பதிவில் காண்போம்.
தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடவும்.
முந்தைய வரலாற்றுப் பதிவிற்கான விடை : அப்ரகாம் லிங்கன்.
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
3/11/2011
ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்!!!
ஏழ்மையான குடும்பத்தில் அவன் பிறந்தான். சிறுவனாக இருந்தபோது தந்தையின் பணிகளுக்கு உதவிபுரிந்தான். ஒன்பது வயதில் ஒன்பது மைல் நடந்து ஆரம்பக் கல்வியைக் கற்றான். ஒரு நீக்ரோ பெண்ணை அடிமையாக விற்கப்படுவதைக் கண்டு அதிர்ந்தான். இம் மாதிரியான கொடுமைகளை தடுத்து நிறுத்த அரசியலில் ஈடுபடவேண்டும் என முடிவு செய்தான். அரசியலில் குதித்தான்.
சட்டமன்ற தேர்தல், செனட் உறுப்பினர் தேர்தல் என போட்டியிட்டு வெற்றிபெற்ற அவன், அந்த நாட்டு ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றான்.
பணபலமில்லை, அரசியல் பின்புலம் இல்லை, கம்பீரத் தோற்றமும் இல்லை, கவர்ச்சியான செற்பொழிவாற்றும் திறமை இல்லை இவை எதுவும் இல்லாமல் அவனுடைய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவனுடைய உழைப்பும், மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணமும் கைகொடுத்தன.
ஜனாதிபதி ஆனதும் ஒரு பழைய காரை அவன் விலைக்கு வாங்கினான். அது கூட ஆடம்பரத்திற்காக அல்ல, பணிகளை விரைந்து முடிக்கலாமே என்ற ஆர்வத்தில்தான்!!! அரசு செலவில் ஓட்டுனர் வைத்துக் கொள்ள விதியிருந்தும், ஓட்டுனருக்கு கொடுக்கும் சம்பளப் பணத்தில் ஒரு ஏழைக்கு உதவலாமே என்ற எண்ணத்தில் ஓட்டுனர் வைத்துக் கொள்ளாமல் அவனே காரை ஓட்டிசென்றான்.
அன்று பாராளுமன்ற கூட்டம்... அதனால் அதிகாலையிலே எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு பாராளுமன்றத்தை நோக்கி காரை செலுத்தினான். போகும்வழியில் அவன் பார்வை ஓரிடத்தில் நிலைத்து நின்றது! ஆம்!! சாக்கடை தேங்கியிருந்த ஒரு பள்ளத்தில் ஓரு பன்றிக் குட்டி விழுந்து மேலே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
அந்தவழியில் சென்ற பலர் அதை வேடிக்கை பார்த்து சென்றனர். ஜனாதிபதியாகிய அவன் காரிலிருந்து இறங்கினான். அந்த பன்றியை காப்பாற்றினான். அதன் மீதிருந்த சாக்கடை துளிகள் அவன் ஆடையிலும் ஒட்டியது. அதைப்பற்றி கவலைப் படாமல் அவன் பாராளுமன்றம் நோக்கி பயனித்தான்.
அந்த ஜனாதிபதி யார்? அடுத்தப் பதிவில் காண்போம்.
தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடவும்.
முன்தின பதிவிற்கான விடை : அந்த பேரறிஞன் கார்ல் மாக்ஸ்.
முந்தைய பதிவுகள்: 1. தேர்வு எழுதப்போகும் மாணவர்களே ஒரு நிமிடம்.
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
3/10/2011
தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு
1851 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் நகரத்தில் இருந்து “ நியூயார்க் டெய்லி டிரிபியூன்” என்ற பத்திரிக்கை வெளிவந்தது. இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான சார்லஸ் டயானா என்பவர் லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த ஒருவரை தொடர்பு கொண்டு தங்கள் பத்திரிக்கையில் கட்டுதைகள் எழுதவேண்டும், லண்டன் நிருபராகப் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
சார்லஸ் டயானாவுடன் ஏற்கெனவே அவருக்குத் தொடர்பும் நட்பும் இருந்ததால் அவருடைய கோரிக்கையை லண்டன்வாசி ஏற்றுக்கொண்டார்.
அந்த லண்டன் வாசி ஜெர்மனியில் பிறந்து ஆளும் வர்கத்தின் தொல்லைகளால் பல நாடுகளுக்குச் சென்று இறுதியில் லண்டனில் வாழ்ந்தவர். இந்தவேளையில்தான் சார்லஸ் டயானா நியூயார்க் டெய்லி டிரிபியூன் பத்திரிக்கையில் அவரை எழுதத் தூண்டினார்.
இந்தக்கால கட்டத்தில் இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். தமிழக மக்களின் நிலையை, வெள்ளையர்களின் அடாவடித் தனங்களை இந்தக்கால கட்டத்தில் வேறு எந்த வெளிநாட்டு அறிஞனும் எழுதியதாக சான்று இல்லை. ஏன் இந்திய அறிஞர்கள்கூட தமிழக நிலைமையை பதிவு செய்திருக்கிறார்களா என ஆய்வு செய்யவேண்டும்.
ஆனால் லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த மனிதர், 1857 ஆகஸ்ட் 28 தேதியிட்ட நியூயார்க் டெய்லி டிரிபியூன் பத்திரிக்கையில், “ இந்தியாவின் நிகழ்ந்த சித்திரவதைகளைப் பற்றிய விசாரனை” என்ற கட்டுரையில் ,
சென்ற ஆண்டில் மழையில்லாது எங்களது நெற்பயிர் காலியானதால் வரி கட்டமுடியவில்லை. ஆனால் தாசில்தாரோ கட்டாயமாக எங்களை வலி கட்டச் சொல்லி கொடுமைபடுத்தினார்.
பின்பு எங்களை சிலரது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டோம். அவர்கள் எங்களை வெயிலில் நிறுத்தினா். குனியவைத்து முதுகில் கருங்கற்களை தூக்கிவைத்தார்கள்.கொதிக்கும் மணலில் அவற்றைச் சுமந்து கொண்டு நின்றோம். ஒர் நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பாடு கொடுத்தார்கள். இத்தகைய கொடுமை மூன்று மாதகாலம் நீடித்தது.
பிறகு எங்களது சொத்துகளை வரிபாக்கிக்காக பறித்தார்கள். எங்களது பெண்களும் கேவலமாக நடத்தப்பட்டார்கள் - என்று தமிழர்களும், தமிழச்சிகளும் வெள்ளையர்களால் எப்படி எல்லாம் கொடுமைப் படுத்தப்பட்டார்கள், உரிமைகளை இழந்தார்கள் என்பதை ஜெர்மனியில் வாழ்ந்து கொண்டு அமெரிக்கப் பத்திரிக்கையில் எழுதி உலகறியச் செய்தான் அந்த அறிஞன்.
ஆம்! அவன் அறிஞர்கெல்லாம் அறிஞன், அதனால்தான் தேசம் கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து, அவனால் மக்களுக்காகச் சிந்திக்கமுடிந்தது. சிந்தித்ததை உலக மக்களுக்கு ஒளிவு மறைவின்றிச் சொல்லமுடிந்தது.
அந்தப் பேரறிஞன் யார்? அடுத்தப் பதிவில் காண்போம்.
தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடவும்.
முந்தைய பதிவுகள்: 1. தேர்வு எழுதப்போகும் மாணவர்களே ஒரு நிமிடம்.
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
Subscribe to:
Posts (Atom)


















