அவனுக்கு எந்த வேலையும் தெரியாது. மகா சோம்பேறி. எவர் சிபாரிசிலோ அவன் ராணுவத்தில் சேர்ந்தான். அதுவும் ராணுவச் சமையல்காரருக்கு உதவியாளனாக!!
இந்தப் பணியில் சேர்ந்த அவன் சிறிது காலத்தில் தலைமை சமையற்காரனாக உயர்ந்தான். அதுவும் அவனுடைய திறமையால் கிடைத்ததன்று. சூழ்ச்சியால்தான் எதையும் சாதிக்க முடியும் என்ற கொள்கை கொண்ட அவன், வாழ்வின் தொடக்கத்திலேயே சதியின் துணைகொண்டு சாதிக்கத் தொடங்கினான்.
ஒரு சமயம் அந்த நாட்டு ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பைபெற்ற அவன், ஒரு சிலமணி நேரத்திலேயே அந்த ஜனாதிபதியின் உள்ளத்தில் இடம்பெற்றான். அந்த ஏமாளி ஜனாதிபதி அவனுக்கு தளபதி பதவி கொடுத்தார். ஒரு நாள் ராணுவப் புரட்சி நடத்தி அந்த ஜனாதிபதியை விரட்டியடித்தவிட்டு அவன் ஜனாதிபதி பொறுப்பேற்றான்.
அவனுக்கு எழுதப் படிக்க தெரியாது. அதனால் படிப்பறிவு இல்லாதவர்களையே அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் நியமித்தான். “காமன் வெல்த் நாடுகளின் தலைவன்”, “இங்கிலாந்தை வென்ற வீரன்”, “ஸ்காட்லாந்தின் கடைசி மன்னன்” போன்ற பட்டங்களை தானே சூடிக்கொண்டான்.
தன் நாட்டில் கிறுஸ்தவர்கள் எவரும் வாழக்கூடாது என்று அவர்களைக் கொன்றுகுவித்தான். ஐந்து பெண்களை திருமணம் செய்துகொண்ட அவன் பல பெண்களிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.
இப்படி அரசியல், காமம் போன்றவற்றில் வெறியனாக இருந்த அவன் கடைசியில் தான்சேனியா நாட்டை தன் வயப்படுத்த நினைத்தான். அந்நாட்டு அதிபரிடம் ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு வருகிறாயா என சவால் விட்டான்.
இந்நேரத்தில் தான்சேனியா அதிபர் , அவனால் விரட்டியடிக்கப் பட்டவர்களையும், சாகடிக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் ஒன்றிணைத்து தன்நாட்டுப் படைகளையும் துணைக்கனுப்பி அவன் நாட்டைத் தாக்கினார். எதிர்க்க முடியாத அவன் நாட்டைவிட்டே ஓடி உயிர் பிழைத்தான்.
Repost
அந்த கொடூர ஜனாதிபதி யார்? அடுத்த வரலாற்றுப் பதிவில் காண்போம்.
உலகில் தோன்றிய சர்வாதிகாரிகளில் இவன் மிகவும் கொடுறமானவன்.
ReplyDeleteஅடுத்த பகுதியில் அவன் யார் என்று நீங்கள் சொல்வதாக சஸ்பென்ஸாக வைத்திருப்பதால் நான் பெயரை சொல்லவில்லை ஆனாலும் படிக்கும் போதே பலர் தெரிந்து கொள்வார்கள்..
ரைட்டு
ReplyDeleteஇப்பிடி எத்தின கதை வச்சிருக்கிறீங்களோ... பெயரை தெரிந்துகொள்ள வெயிட்டிங்...
ReplyDeleteகிரிக்கெட் மொக்கைஸ்..::.. 3
அருமையான பதிவு!
ReplyDeleteஅவன் ஒரு நகைச்சுவை,&கொடூரமான வில்லன்.கடாஃபி நண்பர்.இறுதியில் இம்மாதிரி ஆட்களின் இறுதிப் புகலிடமான் அந்த மத, மன்னராட்சி நாட்டில்(அதேதான்!!!!!!!!!) அடைக்கலம் புகுந்து அங்கேயே உயிரை விட்டான்.
ஹா ஹா ஹா
machi....அவரு யாருன்னு சொல்ல அடுத்த பதிவா?
ReplyDeleteகாத்திருக்கிறேன்.
ReplyDeleteஇடி இடிப்பதால் நான் அவன் பெயரை சொல்லவில்லை நீங்களே சொல்லுங்கய்யா வாத்தி...!!!
ReplyDeleteஒரு கொடிய சர்வாதிகாரி பற்றிய
ReplyDeleteநல்ல கதை..
யாரென்று அறிய காத்திருக்கிறோம்
ReplyDeleteயாரென்று அறிய ஆவலாக உள்ளேன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகருன் சார் இணைத்துல எவ்வளவு சம்பாரிச்சிங்க ஒரு 100 டாலர் அனுப்புங்க....
ReplyDeleteஆமா உங்க பதிவு நாயகன் 500 பவுண்ட் எடையாமே?யம்மாடி.....
Adutha pathivu eppo varumnu wait panna vechittinga Sago. PUTHTHAANDU VAALTHUKKAL!
ReplyDeleteTM 7.
மனதில் இரு பெயர்கள் உண்டு. பெயரைத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது. அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.
ReplyDeleteஏற்கனவே ஒரு சஸ்பென்ஸ் (ஜெர்மன் மனசு) இருக்கு... இப்ப இன்னொன்றா??
ReplyDeleteதிரு கருண் அவர்களே,
ReplyDeleteநான் நீங்கள் குறிப்பிட்ட சர்வாதிகாரியின் நாட்டில் கடந்த
5 வருடமாக உள்ளேன். அந்த நாட்டிற்கும் என் குடும்பத்தார்க்கும்
15 வருடகால தொடர்பு உண்டு. அவர் பற்றிய தகவல்கள் (பிறர் குறிப்பிடுவதும்
நீங்கள் குறிப்பிட்டதும், உங்கள் பதிவின் தலைப்பு உட்பட) அனைத்துமே உண்மைக்கு
புறம்பானதே. அத்தகவல்கள் அனைத்தும் பிரிட்டிஷ் ராணுவத்தால் ஜோடிக்கப்பட்டவையே.
கிருஸ்த்தவ மதத்தினை சார்ந்த இந்நாட்டவரை கேட்கும் போது அவர் கிருஸ்தவ மதத்தினர்
உட்பட யாரையும் துன்புறுத்தவில்லை என்பதை அறிந்தேன். மற்ற சர்வாதிகாரிகளை
போன்று இவர் பெயரில் எந்த சொத்தும், ஏன் ஒரு சாலையின் பெயர் கூட இவர் பெயரில்
இல்லை. இன்னமும் உங்களுக்கு தகவல் வேண்டினால் என்னை மின்னஞ்சல் மூலமாக
தொடர்பு கொள்ளுங்கள்.