Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/13/2011

நமக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்...!


எல்லா அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் மிகவும் கடுமையாக  ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் பிரச்சனை நடக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒரு கலக்கு, கலக்கிவிட்டது.


இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் சரி,  கடந்த இரு கூட்டத் தொடர்களின்போதும் சரி சாதாரண மனிதர்களை வாட்டி வதைத்திடும் விலைவாசிப் பிரச்சனையை எதிர்க்கட்சிகள் முன்னுக்கு கொண்டு வந்தன. 

சென்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போதும் சாமானிய மக்களின் வாழ்க்கை முறையை மிகக் கடுமையாகப் பாதித்துக் கொண்டிருக்கும்  விலைவாசி உயர்வு குறித்து விவாதங்கள் எதுவும் நடத்திட அரசாங்கம் தயாராக இல்லாமல், நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தே காலத்தை முடித்தது.

இப்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இக்குளிர்காலக் கூட்டத் தொடரின்போதும் இந்த விலைவாசி உயர்வு தொடர்பாக அதே போக்கையே இந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு செய்துவருகிறது. இந்த அரசு மூன்று முக்கியப் பிரச்சனைகளை சரிவர கவனிக்கவில்லை.

முதலாவதாக விவசாயப் பொருள்கள் மீதான ஊக வர்த்தகத்தை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். இந்த ஊக வர்த்தகம்தான் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் பெருமளவு உயர்ந்திட காரணம் ஆகும் . எனவே இந்த ஊக வர்தகத்தினை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். 

இரண்டாவதாக அண்மையில் உயர்த்தப் பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் குறைப்பது மிகவும் அவசியம். இந்தப் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து போக்குவரத்துக் கட்டணங்களும் பெருமளவு  உயர்ந்து அது பண வீக்கத்திற்கும் வழி வகுக்கிறது.

மூன்றாவதாக பொது விநியோக முறை மூலமாக ரேசன் கடைகளில் வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள மக்களுக்கு அரசின் மத்திய உணவுக் கிடங்குகளில் வீணாகிக் கொண்டிருக்கும் உணவு தானியங்களை விநியோகம் செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். 

இதையெல்லாம் கவனிக்காமல் நமது நிதியமைச்சர் பணவீக்கம் நமது இந்தியாவில் சரியாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறார். நிச்சயமாக ஒன்று இந்த காங்கிரஸ் அரசு மக்களின் வாழ்க்கை நிலையைப் பார்க்காது கண்ணை மூடிக்கொண்டு குருடாக இருக்க வேண்டும் அல்லது விலை வாசியை உயர்த்தி அதை நியாயப்படுத்துவதற்காக பேட்டிகள் அளித்துக் கொண்டிருக்க வேண்டும்.

நமக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும், இவர்களை ஆட்சியில் அமர வைத்ததற்கு இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ?

21 comments:

  1. இதுக்கு மேல பொதுஜனத்தால எவ்வளவு தாங்க முடியும்... நெனச்சாலே பரிதாபமாயிருக்குங்க...

    ReplyDelete
  2. காங்கிரசை கண்டிப்பதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்....

    :-)

    ReplyDelete
  3. செவிகேட்காத ஆண்மை இல்லாத பிரதமரை வைத்துகொண்டு என்ன செய்ய முடியும், நாடு எரியும்போது பிடில் வாசித்தவன் ஊரில் இருந்து வந்தவளுக்கு, மக்கள் கஷ்டம் எப்பிடி புரியும் ஆகிர்ர்ர்ர்ர் த்தூ....!!

    ReplyDelete
  4. யாருக்கு ஓட்டு போட்டாலும் இதே நிலைமை தான் இருக்கு...

    ReplyDelete
  5. தக்காளி ஆடுங்க 2014 வராமலா போகும்

    ReplyDelete
  6. கஷ்டம் தான் என்ன செய்ய எல்லாத்துக்கும் பழகிட்டோமே!!??

    ReplyDelete
  7. மனசாட்சி said...
    தக்காளி ஆடுங்க 2014 வராமலா போகும்
    >>
    மீண்டுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  8. தேர்தல் அரசிலை நம்பி நாம் வாழும் வரை சுரண்டல் நடந்து கொண்டே தான் இருக்கும்

    ReplyDelete
  9. நமக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்...!
    >>
    என்னது உங்களுக்கு இன்னமும் வேண்டுமா? எங்களால முடியாது சகோ

    ReplyDelete
  10. India will develop only if congress close

    ReplyDelete
  11. இவங்களாவது நல்லது செய்ய மாட்டங்களானு என்று நினைத்து ஒட்டு போட்ட மக்களுக்கு இவர்கள் நல்ல பாடம் கற்பிக்கிறார்கள்...

    ReplyDelete
  12. இதுக்கு மேல மக்களுக்கு எவ்வளவு தான் சுமை தாங்க முடியும்..

    ReplyDelete
  13. நமக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும், இவர்களை ஆட்சியில் அமர வைத்ததற்கு

    ReplyDelete
  14. //சென்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போதும் சாமானிய மக்களின் வாழ்க்கை முறையை மிகக் கடுமையாகப் பாதித்துக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு குறித்து விவாதங்கள் எதுவும் நடத்திட அரசாங்கம் தயாராக இல்லாமல், நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தே காலத்தை முடித்தது.//

    ஆமாம் அதுக்கு முன்னாடி 2ஜி ஊழலாள்ள கூட்டமெ நடக்கல

    வாக்களித்த ஜனங்களை நாம்ம் போட வைக்கபோறதுதான் நடக்கபோகுது போல

    ReplyDelete
  15. ஹா..ஹா.. இதுப்பற்றி யானொன்றும் அறியேன் பராபரமே..!!

    ReplyDelete
  16. சரியா சொன்னீங்க .
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. பொது மக்களுக்கு எவ்வளவு தூரத்துக்குத்தான் சகிப்புத்தன்மை இருக்கும்??

    ReplyDelete
  18. கடந்த சட்டமன்ற தேர்தலில் எப்படி தி.மு.க மண்ணை கவ்வியதோ, அதே போல காங்கிரஸ் கட்சியும் மண்ணைக் கவ்வும். இது உறுதி.

    ReplyDelete
  19. Nalla Samooga Sinthanai. Vizhippunarvu pathivu.


    TM 11.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"