இன்று கிராமங்களில் விளையாடும் ஒரு விளையாட்டைப் பற்றி பார்ப்போம். போன பதிவில் தத்தக்கா, புத்தகா என்ற விளையாட்டைப் பற்றி பார்த்தோம் பார்க்காதவர்கள் இதை கிளிக் செய்து பார்க்கவும். அந்த வரிசையில் இன்று குடுப்பி என்ற விளையாட்டை தெரிந்து கொள்வோம். குடுப்பி என்பது இன்றும் கிராமங்களில் விளையாடும் ஒரு விளையாட்டாகும்.
இவ்விளையாட்டை இரண்டு நபர்கள் சேர்ந்து விளையாடுவார்கள் இதற்கு விளையாட்டு கருவியாக எண்கள் ஊரில் புளியன் கொட்டைகளை மட்டுமே பயன் படுத்துகிறார்கள். இரண்டு நபர்கள் எதிராக அமர்ந்து கொண்டு ஐந்து காய்களுக்குக் குறையாமல் கட்டி ஆட்டத்தை தொடங்குவார்கள்.
ஒருவர் எத்தனை காய்களைக் கட்டுகின்றார்களோ அதே எண்ணிக்கையை எதிர் ஆட்டக்காரர் கட்டவேண்டும். இல்லையெனில் விரும்பிய எண்ணிக்கையுள்ள காய்களை வைத்துக்கொண்டு ஆட்டத்தை தொடங்குவார்கள்.
ஆடும் முறை:
இருவர் எதிர் எதிராக அமர்ந்து கொண்டு இருவரும் ஆட்டத்திற்கு கட்டுகின்ற காய்களைச் சேர்த்து கையில் வைத்துக்கொண்டு தரையில் போடுவார்கள். தரையில் விழுகின்ற காய்களுக்கு இடையே ஒரு சுண்டு விரல் நுழையும் படி இடைவெளி இருக்கவேண்டும். இல்லை என்றால் அவ்வாறு இருக்கின்ற காய்களை ஒடுக்கு வைக்க வேண்டும்.
மற்ற காய்களை ஒன்றோடு ஒன்று சுண்டிவிட்டு அடிக்கவேண்டும். அடிபடாதவைகளை விட்டு விடுவார்கள். எல்லாக்காய்களையும் சுண்டிவிட்டு அடித்த பிறகு ஒதுக்கப்பட்ட காய்களை அதுத்து எதிர் ஆட்டக்காரர் கையில் எடுத்து தரையில் போட்டு முன்புபோல் சுண்டிவிட்டு அடிப்பார்.
இவ்வாறாக இருவரும் மாறி,மாறி விளையாடுவார்கள். இதில் வெற்றி தோல்வி கிடையாது. டைம் பாஸ் ஆக மட்டுமே இவ்விளையாட்டைப் பயன் படுத்துகிறார்கள். கடைசியாக அந்த காய்கள் இருக்கிற வரை விளையாடுவார்கள்.
அருமை...அருமை...
ReplyDeleteNEW GAME
ReplyDeleteஅருமையான ஒரு கிராமத்து விளையாட்டை
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல நண்பரே...
தெரியாத விளையாட்டு மாப்ள...தெரியவைத்ததுக்கு நன்றிகள்!
ReplyDeleteகேள்விப்பட்டிராத புதிய கிராமத்து விளையாட்டு! பிரமாதம்! அறியத் தந்ததற்கு நன்றி!
ReplyDeleteஏதாவது அட்ரஸ் மாறி வந்துட்டோமா? எதுக்கும் URL செக் பண்ணி பார்த்துக்கலாம். ஆமா நம்ம கருணோட கடை தான் இது என்ன புதிய தொடரா மச்சி... நானும் கிராமத்தில் இருந்தேன் இந்த விளையாட்டை பற்றி கேள்வி பட்டதே இல்ல...
ReplyDeleteமச்சி தொடருக்கு டைட்டில் அழிந்து வரும் விளையாட்டுக்கள் - குடுப்பி இப்படி வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்.
குடுப்பி- A KARUN;S GAME.
ReplyDeleteகுடுப்பிடா......
ஹாஹாஹா
தெரியாத கிராமத்து விளையாட்டு தெரிந்து கொண்டேன். பெயர்தான் வேடிக்கையா இருக்கு.
ReplyDeleteகுடுப்பி பேரே வித்தியாசமா இருக்கு....
ReplyDeleteஅடுத்து கண்ணாமூச்சி ஆட்டம் எப்போ போட போற?
வாசிக்க:
இப்படியா துப்பட்டா போடறது? சின்ன பீப்பா, பெரிய பீப்பா அரட்டை
புது விளையாட்டா இருக்கே வாத்தி, ஓகே வாங்க நாம ரெண்டு பெரும் ஒத்தைக்கு ஒத்தை விளையாடலாம்..
ReplyDeleteகேள்விப்பட்டதேயில்லை!நன்று.
ReplyDeleteO.k. Infn. Noted.
ReplyDeleteTM 10.
புதிய எங்கள் பகுதியில் இல்லாத விளையாட்டாக உள்ளது
ReplyDeleteஆயினும் சுவாரஸ்யமான விளையாட்டாக உள்ளது
தொடர வாழ்த்துக்கள் த.ம 11
நானும் சிறு வயதில் விளையாடி இருகிறேன்... ஆனால் பெயர் எல்லாம் தெரியாது........ அப்பொழுதெல்லாம் எவளவு விளையாட்டுகள்... இப்பொழுதெல்லாம் குழுவாக யாரும் விளையாடுவதே இல்லை... இதனால் தான் ஒற்றுமை என்பதே தெரியவில்லையோ............. குழந்தைகளை யாரும் விளையாட விடுவதே இல்லை... வீட்டுக்குள்ளையே வைத்து இருப்பது என்பது status symbol ஆகிவிட்டது...........
ReplyDeleteவிளையாட்டு நன்றாகத்தான் இருக்கிறது. இன்றைய அவசர உலகத்தில் இதுபொன்ற எத்தனை நல்லவிடயங்களைத் தொலைத்துவிட்டோம்.
ReplyDeleteஇதனை படிக்கையில் இது போன்று விளையாடி மறந்துபோன விளையாடுகளை மீட்டெடுக்கிறேன் நினைவுகளால்..
ReplyDeleteநன்றி நண்பரே..தொடரட்டும்
இதுபோன்ற விளையாட்டுக்களை நாமும் குழந்தைகளும் மறந்துவிட்டோம். நல்ல ஞாபகமூட்டல்.
ReplyDeleteதோழர்
ReplyDeleteகலை கட்டுகிறது விளையாட்டு
தொடருங்கள்
அட! இது புதுசா இருக்கே..!
ReplyDelete(எனக்குப் புதுசா இருக்குன்னு சொல்ல வந்தேன்.)
குடுப்பி - பேரும் வித்தியாசம்..!! இன்னும் தெரியாத விளையாட்டுகளைக் கொண்டு வாங்க விளையாடிப் பார்க்கலாம்.!!
நல்ல அறிமுகம்.விளையாட்டை விளையாட்டாக எடுக்காமால் எலிமினேசனில்(?) கொண்டு விடும் மனோபான்மை நிறைந்து போனது இன்று/
ReplyDeleteநிறைய விளையாட்டு தெரிஞ்சு வச்சிருக்கிங்க....
ReplyDeleteகுடுப்பி விளையாடுற பைனுக பேண்ட் போட்டு இருக்காங்க.
ReplyDeleteதேவையான அறிமுகம் நண்பா.
ReplyDeleteநல்ல விளையாட்டு இது...
ReplyDeletehttp://sattaparvai.blogspot.com/2011/12/blog-post_09.html
நான் கேள்விப்படாத விளையாட்டு !
ReplyDeleteவணக்கம் மச்சி!
ReplyDeleteஇந்த விளையாட்டினை நம்ம ஊரில கொக்கான் வெட்டுதல் என்று சொல்லுவார்கள்.
புளியங் கொட்டைக்குப் பதிலாக நம்ம ஊரில குறுணிக் கற்களையும் (சிறு கற்கள்) பயன்படுத்துவார்கள்.
ஹேமா said...
ReplyDeleteநான் கேள்விப்படாத விளையாட்டு !
9 December 2011 11:34 PM//
ஹி...ஹி...
அக்கா கொக்கான் வெட்டுதல் கேள்விப்படலையா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மச்சி! உண்மையைச் சொல்லு! வர வர உன் எழுத்து நடையில் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது.
ReplyDeleteஇது உன்னோட அவங்க தானே எழுதியது!
விளையாட்டும்,பேரும் புதுசா இருக்கே.ஆனா கிட்டத்தட்ட இதுமாதிரி ஆனால் சின்ன ஜல்லி கற்களை வைத்து பெண்கள் விளையாடுவதை மதுரை கிராமத்தில் பாத்திருக்கிறேன்.சொக்கட்டாங்காய் விளையாட்டுனு சொல்வார்கள்னு நினைவு.
ReplyDeleteகுடுப்பி - நான் இதுவரைக்கும் கேள்விப்படாத விளையாட்டு.
ReplyDeleteஅழிந்துவரும் விளையாட்டை பற்றி சிறப்பாக பதிவு செய்து இருக்கிறீர்கள் இப்படி அழிவிலிக்கும் தமிழ கலைகளை காக்க வேண்டியது நமது கடமை பாராட்டுகள்
ReplyDelete