Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/31/2011

பெரும்பாலான ஆண்கள் இப்படித்தானோ?


ஒருவருடைய மனைவியை அவர் வளர்த்த காளை மாடு முட்டி கொன்றுவிட்டது. அந்த மனைவியின் இறுதி சடங்கின்போது அதை நடத்தி வைத்த புரோகிதர் விசித்திரமான ஒரு சம்பவத்தை கவனித்தார்.

துக்கம் கேட்ட பெண்கள் அந்த விவசாயியை நெருங்கி வந்து ஏதோ காதில் சொல்கிறபோது, ஒரு நிமிடம் கேட்டுவிட்டு "ஆமாம்" என்று தலை அசைத்தார். ஆனால் துக்கம் கேட்க வந்த ஆண்கள் நெருங்கிவந்து ஏதோ சொல்கிறபோது 
"இல்லை என்று தலை அசைத்தார்.

அது தொடர்ந்து கொண்டே இருந்தது. எனவே இறுதி சடங்கெல்லாம் முடிந்த பிறகு புரோகிதர் அந்த விவசாயிடம் வந்து, "பெண்கள் வந்தால், ஆமாம் என்று தலையாட்டினிர்கள். ஆண்கள் வந்தால், இல்லை என்று தலையாட்டினிர்களே, ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி, பெண்களெல்லாம் வந்து ஏன் மனைவியைப் பற்றி நல்லவிதமாக சொல்வார்கள். எவ்வளவு அழகாய் இருந்தார்கள், அவர்களுக்கு உதவி செய்யும் குணம் அதிகம். என்று, அதற்கு ஆமாம் என்று நானும் தலையசைப்பேன்.

சரி ஆண்கள் வந்து கேட்டால் "இல்லை" என்று தலையசைத்தீர்களே ஏன்? ஒ.. அதுவா, அவர்கள் அந்த 'காளை மாட்டை விற்பனைக்கு தர முடியுமா?" என்று கேட்டார்கள். நான் இல்லை என்று சொன்னேன் என்றார். 
  
ஹா.ஹா.. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

29 comments:

  1. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    //காலை மாடு//

    திருத்திக் கொள்ளவும். :)

    ReplyDelete
  2. பார்ரா..

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. புது வருட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மாப்ள எல்லோரும் ஒரு கொலைவெறியோடு தான் அலையுறாங்க போல... மாப்ள உனக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. பூத்துவரும் பொன்னெழிலாய்
    பூக்கட்டும் புத்தாண்டு!
    ஏழுவண்ண வானவில்லாய்
    வண்ண வண்ண இன்பங்கள்
    நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நல்ல ஜோக்/கதை.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. நல்ல கதை.. எங்கேருந்து புடிடிசிங்க ..

    ReplyDelete
  10. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா

    இன்று :

    பதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் தோழரே...:)

    கதை நகைச்சுவை இன்று எடுத்து கொள்ள இயலவில்லை..
    ஒரு ஆர்த்மார்த்தமான அழுத்தம் நிச்சயம் உள்ளது...

    ReplyDelete
  12. ஹாய்... நல்ல நகைக்சுவையோட புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லியிருக்கீங்க. உங்களுக்கும் என் ஹார்டடியஸ்ட் ஹாப்பி நியூ இயர் விஷ்ஷஸ்!

    ReplyDelete
  13. அடப்பாவி விவசாயி, அந்த மாட்டை வித்துருய்யா ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  14. புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்கா...

    ReplyDelete
  15. நல்ல ஜோக்ஸ்! நன்றி நண்பா!
    தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    அன்புடன் அழைக்கிறேன் :
    "மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"

    ReplyDelete
  16. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்சகோ..

    ஒரு இரண்டுநாள் மனைவியை அம்மாவீட்டுக்கு அனுப்பிட்டு இருந்துபாருங்க அப்போ தெரியும் கதை...

    ReplyDelete
  17. அந்த ஆண்களில் நம்ம பதிவர்கள் யாராவது நிக்குறாங்களான்னு பாருங்க சகோ. ஒரு பதிவை தேத்திடலாம்

    ReplyDelete
  18. ஹா ஹா ஹா..


    புத்தாண்டு வாழ்த்தக்கள் நண்பா..

    ReplyDelete
  19. @
    ஆஹா...
    எல்லா வீட்டுக்கும் காளைமாடு தேவைப்படுதா?
    புதுவருட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. ரொம்ப தெகிரியம்தான்.... புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  21. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்

    ReplyDelete
  22. இனிய ஆங்கில புத்தாண்டு
    நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. தோழரே .., எதார்த்தமான ஒரு நகைச்சுவை அண்ணா ..,

    ReplyDelete
  24. தோழரே .., எதார்த்தமான ஒரு நகைச்சுவை அண்ணா ..,

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"