Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/12/2011

முல்லைப் பெரியாறு. என்னதான் நடக்கிறது?


உலகம் செழிப்பதற்காக கடவுள் மழையைத் தருகிறார். அதைத் தடுத்து நிறுத்தி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லாமல் விவசாயத்திற்காகவும், மக்களின் குடிநீருக்கு உபயோகப்படும் வகையில் அணைகள் கட்டி அந்த நீரை சேமித்து  பயன்படுத்துகிறோம். 


கேரளா முழுவதும் பெரும்பாலும் மலைகளே. அந்த மக்களுக்கு விவசாயத்திற்கான போதிய நிலம் இல்லை.எனவே முல்லைப் பெரியாறு அணையின் நீர் தமிழகத்தால் பயன்படுத்தப் பட்டு, அதனால் விளையும் விலைப் பொருள்கள் பெரும்பாலும் கேரள மக்களுக்குத்தான் செல்கிறது.

இந்த அணையை ஒட்டி, பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் எங்கோ  நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரியாறு அணை பலவீனமடைந்து விட்டதாக சில சுயநல கட்சிகள் பயத்தை கிளப்பி வருகின்றன. 

அப்படியே இந்தப் பெரியாறு அணை அணை பலவீனப்பட்டாலும் இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் இடுக்கி அணை, செறுதோனி அணை, குலம்மாவு அணை போன்ற அணைகளைத் தாண்டிதான் செல்லவேண்டும். அதற்கு மேலும் தண்ணீர் வந்தால் அதை மாற்றுப் பாதையில் உள்ள ஷட்டர்கள் மூலம், அரபிக் கடலுக்கு அனுப்பி விடலாம்.

இரு மாநில அரசுகளும் இந்த அணையின் பாதுகாப்புக்கு, வேறென்ன வழிகள் இருக்கின்றன என்று தேட வேண்டுமே தவிர மக்களை மோத விட்டு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. 

இந்த அணைப் பற்றி மேலும் பல விவரங்களை அறிய...

இணையத்தில் உங்கள் ஆதரவை தெரிவிக்க:

நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.

http://www.change.org/petitions/central-government-of-india

நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.

பதிவர் நண்பர்களே இந்த செய்தியை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நம் சமூகத்தை காக்க உதவுங்கள்.(நன்றி சசி).

13 comments:

  1. தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இரு மாநில அரசுகளும் இந்த அணையின் பாதுகாப்புக்கு, வேறென்ன வழிகள் இருக்கின்றன என்று தேட வேண்டுமே தவிர மக்களை மோத விட்டு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. //

    இது கரிக்ட்டான வார்த்தைய்யா வாத்தி...!!

    ReplyDelete
  3. கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.
    >>
    ஆதரவு தர போய்கிட்டே இருக்கேன் சகோ. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி கருண்

    ReplyDelete
  5. முல்லை பெரியாறு பிரச்சனையை உங்கள் பதிவிலும் கொண்டு வந்ததற்கு நன்றி..

    ReplyDelete
  6. நல்ல தகவல், நா ஒரு பதிவு போடலாம்ன்னு இருக்கேன்

    ReplyDelete
  7. முல்லைபெரியாறு புதிய அணை வேண்டாம் கேரள அறிவிப்பு

    http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-post_2967.html?

    ReplyDelete
  8. இரு மாநில அரசுகளும் இந்த அணையின் பாதுகாப்புக்கு, வேறென்ன வழிகள் இருக்கின்றன என்று தேட வேண்டுமே தவிர மக்களை மோத விட்டு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. //

    ம்!

    ReplyDelete
  9. இதோ கையெழுத்தை பதிவாக்கி விடுகிறேன் நண்பரே.
    அடுத்த எனது பதிவில் இதற்கான இணைப்பை சேர்த்து விடுகிறேன்..

    ReplyDelete
  10. அனையே கட்டாமல் மொத்தமாக ஊற்று எடுக்கும் இடத்திலேயே சுரங்கம் அமைத்து தமிழகத்துக்கு திருப்பிடலாமா என்று கூட யோசித்து பார்த்து விட்டேன்.. எங்க போனாலும் முட்டுது... ஆனா இந்த பிரச்சினை ஆரம்பிச்சது லேருந்து மத்த பிரச்சினை எல்லாத்தையும் மறந்துட்டோம் என்று மட்டும் தெரிகிறது...

    //உலகம் செழிப்பதற்காக கடவுள் மழையைத் தருகிறார்.//

    பதிவுகளில் மூட நம்பிக்கைக்கு இடம் கொடுக்க வேண்டாமே தோழர்

    ReplyDelete
  11. Mullaperiyar Dam: Supreme Court dismisses Kerala's plea to lower water level to 120 feet


    Read more at: http://www.ndtv.com/?cp

    ReplyDelete
  12. Thagavalkalukku Nanri Sago.

    TM 10.
    Earkanave Naan antha online form la sign pannitten Sago.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"