Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/10/2011

இதில் புரட்சி ஏற்படுமா? பெற்றோர்களே சிந்திப்பீர்..


நாமெல்லாம் படிக்கும் பொது பள்ளியில் மணிக்கணக்காக படித்து  நாட்கணக்கில் 'நெட்டுரு' செய்தாலும் புரியாத பல விஷயங்கள் இப்போதுள்ள சிறுசுகளுக்கு சூப்பராக புரிந்து கொள்ள முடிகிறது அதற்கு முக்கிய காரணம் இணையம். 

ஆமாம் பல வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவிலும் , சில ஐரோப்பிய நாடுகளிலும் கொடிகட்டிப்பறந்த ‘ஸ்மார்ட் கிளாஸ்’ என்ற முறை, இப்போது இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலும் பல தனியார் பள்ளிகளில் இந்த ‘ஸ்மார்ட் கிளாஸ்’ முறைக்கு மாறிவிட்டன. சில அரசு பள்ளிகளிலும் இதை ஏற்றுக்கொண்டாலும், இன்னும் கரும்பலகை, சாக்பீஸ் முறையே பின்பற்றுகிறார்கள். ஆனால் வரும் காலங்களில் மொத்தமாக கரும்பலகை, சாக்பீஸுக்கு குட்பை  சொல்லப்போகிறோம் என்பது மட்டும் நிச்சயம்.

அதென்ன ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை என்றால் இந்த வகுப்பறையில் ஆசியர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு மாணவன் தனியே படிக்க முடியும்.  ஒரு சிக்கலான சயின்ஸ் பாடத்தை நடத்த வேண்டுமானால் மாணவனுக்கு புரியும் வரை பல முறை ஆசிரியர் கத்த வேண்டியதில்லை.

ஒரு கம்ப்யூட்டர் இன்டர்நெட் மூலம் அந்தப் பாடத்தைப் பற்றிய வீடியோவை போட்டுவிட்டு நிம்மதியாக உட்கார்ந்து விட்டால் போதும். அந்த வீடியோவே பல பரிமாணத்தில் அந்தப் பாடத்தை விளக்கிவிடும்.

எந்த ஒரு பாடமாக இருந்தாலும்,அதப படிப்பதைக் காட்டிலும் அதை வீடியோவாக விளக்கினால் புரியும் தானே. அதைத்தான் செய்கிறது இந்த ‘ஸ்மார்ட் கிளாஸ்’ முறை. 

பாடங்களை நெட்டுருப் போட்டு நூற்றுக்கு நூறு வாங்குவதில் எந்த பயனும் இல்லை. புரிந்து கொண்டு படித்தால் தான் அவன் அந்தப்பாடத்தில் பல சாதனைகள் புரியமுடியும்.அதை இந்த இணைய வழி ‘ஸ்மார்ட் கிளாஸ்’ முறை எளிமையாகச் சொல்லித்தருகிறது.

இந்த ஸ்மார்ட் கிளாஸ் முறையைப் பற்றி பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இதில் ஒரு புரட்சி ஏற்பட்டால் தவிர இதை தமிழகத்தில் பிரபலப் படுத்த முடியும்.

நாம் கரும்பலகை, சாக்பீசுக்கு டாட்டா சொல்லி வழி அனுப்பும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை.

18 comments:

  1. //எந்த ஒரு பாடமாக இருந்தாலும்,அதப படிப்பதைக் காட்டிலும் அதை வீடியோவாக விளக்கினால் புரியும் தானே// உண்மைதான் கருண். எந்த ஒரு பாடமானாலும் காட்சிப்படுத்திக் காட்டினால் நிச்சயம் மாணவர்களின் மனதில் பதிவோடு, அதை புரிந்துகொள்ளவும் வழி வகுக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வருவதற்கு சிறிது காலம் பிடிக்கும்தான்... ஆனால் இன்று சாதாரணமாக அனைத்து நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு நிறைய மடிக்கணினி மற்றும் மேசைக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஆசிரியர்கள் நினைத்தால் பாடங்களை கணினி சார்ந்த பாடங்களாக மாற்றி நடத்த இயலும்... அதற்குத் தேவை அவர்களுக்கு கொஞ்சம் பயிற்சியும், தயாரிப்பு நேரமும்தான்...
    - கூ.அன்பு (கணித ஆசிரியர்)

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல் .
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  4. காலத்துக்குத் தேவையான புரட்சி..

    ReplyDelete
  5. வாத்தியார்ங்கறதை நிரூபிச்சுட்டே மாப்ஸ்

    ReplyDelete
  6. மகிழ்ச்சியூட்டும் நல்ல தகவலகளைத்
    தந்த பதிவு அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 5

    ReplyDelete
  7. ஸ்கூல்ல வெறுப்பு அடிக்கும் பொழுது ஏதாவது படம் போடுங்கன்னு சொல்லிட போறானுங்க பசங்க...ஹா ஹா ஹா

    ReplyDelete
  8. //நாம் கரும்பலகை, சாக்பீசுக்கு டாட்டா சொல்லி வழி அனுப்பும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை.//

    உண்மைதான் நண்பரே..காலம் மாறும் போது கற்பிக்கும் முறைகளும் மாறுவது வரவேற்கத்தக்கதே..

    ReplyDelete
  9. பெற்றோர்களிடம் கொள்ளை அடிக்க புது வழி...

    ReplyDelete
  10. ///
    ஸ்மார்ட் கிளாஸ் முறையைப் பற்றி பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்
    /////////


    கண்டிப்பாக....

    ReplyDelete
  11. நடந்தா நல்லாதான் இருக்கும்.

    ReplyDelete
  12. குழந்தைகளுக்கு மகிழ்ச்சி கொண்டாடும் தகவலை சொல்லி அசத்தி இருக்கீங்க வாத்தி நன்றி தகவலுக்கு...!!!

    ReplyDelete
  13. நல்ல மாற்றங்கள் நிச்சயம் வரவேண்டும்.

    ReplyDelete
  14. என் பேரக்குழந்தைகளிடம் ஸ்லேட்டு,
    குச்சீன்னு சொன்னா என்னதுன்னு கேக்கரா. நாலும் நாலும் எவ்வளவுன்னு கேட்டா கால்குலேட்டரைத்தேடுரா. என்னன்னு சொல்ல?

    ReplyDelete
  15. ‘குவித்த புருவமும, கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்’ என்கிற தேவாரப்படல்கூட இளைய ராஜா இசையமைத்தபின்தான் குழந்தைகள் பாடின. வீடியோ மூலமாப் படிக்கிறது நல்ல விஷயம்னுதான் எனக்குத் தோணுது. நன்றி கருன்!

    ReplyDelete
  16. அருமை!
    பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"