கலைவாணர் ஒரு பெரிய கிரெட்டேரியன் நாய் ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்தார். அதற்க்கு'டிக்கி' என்று பெயர் வைத்தார். அது கலைவானரிடம் செல்லக் குழந்தைப் போலவே பழகியது.
ஒருமுறை கலைவாணரும், மதுரம் அம்மையாரும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். கலைவாணர் தான் விரும்பிய சீட்டைப் போட முயன்றார். மதுரம் அவர் கையிலிருந்த அத்தனை சீட்டையும் பறித்து, தான் விரும்பிய சீட்டைப் போட முயன்றார்.
தன் எஜமானன் கையிலிருந்த சீட்டுகள் பறிக்கப்படுவதை அறிந்த "டிக்கி" கோபத்துடன் மதுரம் அம்மையாரின் கன்னத்தை முட்டுவாயோடு சேர்த்துக் கவ்வியது. மதுரம் அலறினார்.
"மதுரம்..அசையாதே..சதை போயிடும்.." என்ற கலைவாணர் இரண்டு கைகளாலும் பிடித்து நாயின் வாயைப் பிளந்து மதுரத்தின் கன்னத்தை மீட்டார்.
கலைவாணர் கோவையில் கைதான பின்னர், தன் எஜமானரைப் பிரிந்த "டிக்கி' ஒழுங்காக சாப்பிட வில்லை. ரேடியோவில் தன் எஜமானரின் குரலைக் கேட்டால் சுறுசுறுப்படையும். எனவே அவரது பாடல்களைப் போட்டுக் காட்டி "டிக்கியை" சாப்பிட வைத்தார்கள்.
ஆனால் தன்னை ஏமாற்றி சாப்பிட வைக்கிறார்கள் என்பதையும் சில நாட்களில் "டிக்கி" உணர்ந்து கொண்டது. அதிலிருந்து அது சாப்பிட மறுத்தது. பட்டினி கிடந்தே சில நாட்களில் தன் உயிரையும் விட்டது.
கிச்சுகிச்சு: (மனோவிற்கு)
முகப்புத்தகத்தில் நெஞ்சைத் தொட்டது:
உள்ளாடையும் கிழிந்து
அந்தரங்கம் காட்டுகிறாள்
கோயில் பிச்சைக்காரி..
அவளையும் தாண்டிச்செல்கிறார்கள்
சாமிக்கு பட்டுச் சேலை சாத்த...
வணக்கம் நண்பரே..
ReplyDeleteடிக்கியின் விசுவாசம் உண்மையிலேயே புல்லரிக்க வைக்கிறது
மனதை நெகிழ வைக்கிறது... பிராணிகள் நன்றியுள்ளவையாகத்தான் இருக்கின்றன... ஆனால் மனிதர்கள்தான்....
ReplyDeleteஉங்கள் பதிவுகள் ஏராளமானவர்களை சென்றடைய www.hotlinksin.com ல் பதிவுகளைப் பகிருங்கள்
மனதைத் தொட்ட பதிவு சகோ
ReplyDeleteகவிதையின் உண்மை மனதை சுட்டது சகோ
கலைவாணர் ஒரு மாமனிதன்ய்யா...!!
ReplyDeleteஅவர் எங்கள் ஊர்காரர் என்பதை நினைத்து பெருமைபடுகிறேன்...!
ReplyDeleteகிச்சிகிச்சு மூட்ட ஏதாவது ஹன்சிகா மாதிரி ஆளை போடப்புடாதா பிச்சிபுடுவேன் பிச்சி...
ReplyDeleteஹே ஹே ரைட்டு
ReplyDeleteஅருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..
ReplyDeleteSuvaiyana Sampavam.
ReplyDeleteArumaiyana facebook post. Pakirvukku Nanri.
TM 5.
நாய்களிடம் காணப்படும் விசுவாசம் அபாரமானது.நம்மிடம்...?
ReplyDeleteசிறந்த சிந்தளையாளர்,
ReplyDeleteபகுத்தறிவுவாதி
நகைச்சுவை மன்னர்..
கலைவாணர் அவர்களின் வாழ்வின் ஒரு சம்பவத்தை
இங்கே பதிவாக்கியமை நன்று.
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்.
அன்பிற்கு உண்டோ திணை.....
வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் வாழ்க்கை சம்பவங்கள்
நமக்கு எவ்வளவு அழகாக உரைக்கிறது..
பகிர்வுக்கு நன்றிகள் பல நண்பரே.
சம்பவம்,சங்கதி,கவிதை மூன்றுமே மனிதம் சொல்கிறது !
ReplyDeleteஅருமையான அரிய தகவலை உள்ளடக்கிய பதிவு
ReplyDeleteபதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
இறுதியில் குறிப்பிட்டுள்ள்ள கவிதை
மிக மிக அருமை
த.ம 8
மனிதர்களைப்போல அல்ல விலங்குகள்... அவை உயர்ந்தவை.
ReplyDeleteவிசுவாசம்... .நாய்க்கு தெரியுது..........
ReplyDeleteகவிதை....நெத்தியடி
ReplyDeleteபடம்....WHY THIS கொலவெறி
ReplyDeleteநன்றியுள்ள ஜீவனின் விசுவாசம்...கடைசி மேட்டர் நச்!
ReplyDeleteநகைச்சுவை மன்னனைப் பற்றி நன்றாகச் சொன்னீர்கள்..
ReplyDeleteநாயின் பாசம் நெகிழ வைத்தது. கடைசியில் தந்திருக்கும் கவிதையும் பிரமாதம். ரசனையான பதிவு.
ReplyDeleteஅருமை அருமை.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி நண்பரே!
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"