ஒரு ராஜாவிற்கு நான்கு மனைவிகள். நால்வரின் அரசன் மிகவும் நேசித்தது நான்காமவளைத்தான். அவளுக்கு விலையுயர்ந்த ஆடை, நகைகள் வாங்கிக் கொடுத்து அலங்கரித்து கண்ணுக்கு கண்ணாக பார்த்துக் கொண்டான்.
அடுத்த படியாக அவன் நேசித்தது மூன்றாம் மனைவியை. அண்டை அயல் நாட்டிற்கெல்லாம் சுற்றுலா அழைத்துச் செல்வான். அவளை தம மனைவி என்று அனைவர் இடத்திலும் அறிமுகப் படுத்துவதில் பெருமை கொள்வான்.
இரண்டாவதுமனைவியிடம் தான் அவனுக்கு நம்பிக்கை அதிகம். அவள் மிக அன்பானவள். பொறுப்பும், பொறுமையும் அதிகம் அவளுக்கு.
முதல் மனைவி அரசினிடம் மிகுந்த விசுவாசம் கொண்டவள். அவனது சொத்து, ராஜ்ஜியம் அனைத்தையும் நிர்வகித்து வருபவள். ஆயினும் அவளிடம் சிறிதும் பாசமில்லை அரசனுக்கு. மிகவும் அலச்சியத்துடன் அவளை நடத்தினான்.
ஒருநாள் ராஜா நோய்வாய்ப் பட்டான். தனது முடிவு நெருங்கிவருவதை உணர்ந்த அவன் தன் மனைவிகள் யார் தன்னுடன் வருவார்கள் என சிந்தித்தான். யாராவது ஒருவர் நிச்சயம் தன்னுடன் வருவார்கள் என நம்பி முதலில் நாலாவது மனைவியை அழைத்துப் பேசினான்.
'உன்னைத்தான் நான் எல்லாரையும் விட உயர்வாக வைத்துக் கொண்டிருந்தேன். நான் இறந்தால் நீயும் என்னுடன் வருவாய் அல்லவா?"
"நான் வர முடியாது" என முகத்தில் அறைத்தாற்போல் அவள் கூறிய பதில் அவனை நோகடித்தது.
அடுத்து மூன்றாம் மனைவியைக் கேட்க, வாழ்க்கை மிகவும் அழகானது, அதை விட்டு விட்டு உன்னுடன் நான் வர முடியாது என்றால் அவள். இரண்டாமவள், "மன்னித்து விடுங்கள் மன்னா, என்னால் இம்முறை செய்ய முடிந்தது இடுகாடு வரை வந்து வழி அனுப்புவது மட்டுமே" என்று சொல்லி விட்டாள்.
அனால் முதல் மனைவியோ, "அரசே, நீங்கள் எங்கு சென்றாலும் உங்களைத் தொடர்ந்து வர நான் எப்போதும் தயார்" என்றாள். எலும்பும், தோலுமாக அவனது அலச்சியத்தால் சோர்ந்து போயிருந்தால் முதல் மனைவி. அவளது நிலையைப் பார்த்து வருந்திய மன்னன் தனது இத்தனை நாளைய செயலுக்கு வெட்கித் தலை குனிந்தான்.
நாம் அனைவருமே இப்படித்தான்.
நமக்கு வாழ்க்கையில் நான்கு மனைவிகள்.
நாலாவது மனைவிதான் நம் உடல். எவ்வளவுதான் போஷாக்காக வைத்துக் கொண்டாலும் நாம் இறக்கும் பொது மன்னுக்குத்தான் போகப் போகிறது.
மூன்றாவது மனைவிதான் நம் சொத்து சுகங்கள் நமக்குப் பிறகு பிறரிடம் போய்விடும்.
இரண்டாம் மனைவிதான் நம் சொந்த பந்தங்கள், அதிகபட்சம் இடுகாடு வரை வருபவர்கள்.
முதல் மனைவிதான் ஆன்மா. நம்மால் எவ்வளவு அலட்சியப் படுத்தப்பட்டாலும் கடைசி வரை உடன் வருபவை.
தத்துவம்
ReplyDeleteஎவ்வளவு தெளிவான கருத்து நான்கு மனைவிகள்
ReplyDeleteஅதென்னய்யா நமக்கு.....?????
ReplyDeleteநல்ல கதை சார்...
ReplyDeleteஒரு ராஜாவிற்கு நான்கு மனைவிகள்.///
ReplyDeleteபதிவர் ராஜாவுக்கா?
நால்வரின் அரசன் மிகவும் நேசித்தது நான்காமவளைத்தான். //
ReplyDeleteஅப்போ மொத மூணும் டீலா?
தலைப்பை பார்த்து உன்னை பத்தி தப்பா நினைச்சுட்டேன். சாரிப்பா
ReplyDeleteஒருநாள் ராஜா நோய்வாய்ப் பட்டான். ///
ReplyDeleteநாலுன்னா வராதா பின்ன?
ஹா ஹா ஹா...
ReplyDeleteமுதல் மனைவிதான் ஆன்மா. நம்மால் எவ்வளவு அலட்சியப் படுத்தப்பட்டாலும் கடைசி வரை உடன் வருபவை.///
ReplyDeleteமச்சி, நல்ல கதை.....
அருமை
ReplyDeleteமாப்ள கத கதையாம் காரணமாம்..நல்லா இருக்கு!
ReplyDeleteதலைவா கலக்கிடீங்க
ReplyDeleteஅருமையான வாழ்க்கை தத்துவத்தை அழகாக ஒரு சின்ன கத்தில் சொல்லிடீங்க
நன்றி பாராட்டுக்கள்
மனைவிகளை வைத்து மனிதத்தை விளக்கிச் சொன்ன விதம் அருமை..வாழ்த்துகள்..
ReplyDeleteஅன்போடு அழைக்கிறேன்..
நாட்கள் போதவில்லை
அட அருமையா இருக்கே ம்ம்ம்ம் சூப்பரா இருக்குய்யா..!!!
ReplyDeleteநானும் என்னமோ கில்மான்னுல்லா ஓடி வந்தேன் ஹி ஹி....
ReplyDeleteவாழ்க்கையோட அடிய கமல் மாதிரி நோண்டாமல் சீக்கிரம் முடித்துவிட்டீர்... ரொம்ப தத்துவார்த்தமா போகிற மாதிரி இருக்குதே....
ReplyDeleteஇன்று என் பதிவு;;; கிரிக்கெட் மொக்கைஸ்..::.. 2
அருமை...
ReplyDeleteஅதென்ன நமக்கு நாலு மனைவிகள்ன்னு டைட்ட்ல். நான் என்னமோ ஏதோன்னு நினைச்சு ஓடியாந்தேனே. இப்போ வடை போச்ச்சே மாப்ள
ReplyDeleteஎப்படித்தான் உங்களுக்கு இப்படி தோணுதோ??
ReplyDeleteஅருமையான பதிவு சகோ
தத்துவக் கதை அருமை. மிக ரசித்தேன்.
ReplyDeleteஓ
ReplyDeleteநான்கு மனைவிகளுக்கான விளக்கம்
ReplyDeleteஅழகாக இருந்தது நண்பரே.
மிகவும் விரும்பிப் படித்தேன். சொன்ன விதம் நல்லா இருக்கு.
ReplyDeleteநானும் தலைப்பைபார்த்து யோசனையுடன் தான் வந்தேன் ஆனா நல்ல ஒருதத்துவ கதை சொல்லிட்டீங்க. நல்லா இருக்கு.
ReplyDeleteஉண்மையான கருத்து.. புல்லரிக்க வைத்துவிட்டீர்கள்..
ReplyDeleteதலைப்பு சேறு....கதை தாமரை....மல்லிகையும் நல்லாயிருக்கும் கருன் சார்(!?)
ReplyDeleteஅருமையான நெஞ்சில் எப்போதும்
ReplyDeleteநினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கதை
சொல்லிச் சென்ற விதமும் அருமை
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 10