மழையையும்,
வெயிலையும்,
ஒன்றாகவே பாவிக்கும்
என்வீடு...!
ஏசி பல நூறு
வைத்தாற்போல
இருக்கிறது,
என் வீட்டு முற்றம்...!
இரவு எப்போதும்
அணைவதில்லை,
என் வீட்டில்
விளக்குகள்...!
பல நூறு
ஐந்தறிவு ஜீவிகளுக்கு
ஓய்வறையாகும்
என் வீடு
பல சமையங்களில்...!
இருப்பினும்
வீட்டு விலாசம் கேட்ட
என் பள்ளிக்
காலத் தோழனுக்கு
எப்படிச் சொல்லித் தொலைப்பது
அந்த மரத்தின் விலாசத்தை...!
ஈரோடு வாடி, உன்னை கொலை பண்ணிடறேன் ஹி ஹி
ReplyDeleteகவிதை கண் 1000
ReplyDeleteபடமும் பதிவின்எடுப்பும் தொடுப்பும் முடிவும்
ReplyDeleteமிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்
த.ம 2
விலாசம் :
ReplyDeleteமரத்தமிழன்
s/o மரத்தடிசித்தர்
மரங்காநல்லூர் !
மாப்ள மரத்துக்கு ஏன் விலாசம் சொல்ற உன் வீட்டுக்கு விலாசம் சொல்ல வேண்டியது தானே... ஒருவேளை இது காக்கா பாடுற கவிதையா?
ReplyDeleteபடத்துக்குப் பொருத்தமான அழகிய கவிதை. (கவிஞரான ரமணி சாரே மனம் கவர்ந்த பதிவுன்னு சொல்லிட்டப்புறம் நான் என்ன சொல்றது) வாழ்த்துக்கள் கருன்!
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு கருன்..
ReplyDeleteகவிதை அழகாக இருக்கு ஆனால் நீங்க என்ன சொல்லவாறீங்க என்றுதான் புரியலை அவ்வ்வ்வ்வ்வ்வ்?
ReplyDeleteஇன்று உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றேன் நேரம் கிடைத்தால் தொடரவும்
அட நல்லா இருக்குய்யா..ஜூப்பரு!
ReplyDeleteவீட்டு விலாசம் கேட்ட
ReplyDeleteஎன் பள்ளிக்
காலத் தோழனுக்கு
எப்படிச் சொல்லித் தொலைப்பது
அந்த மரத்தின் விலாசத்தை...!
ஏழ்மையை சொல்லும் அழகிய கவிதை
ReplyDeleteசூப்பர்..கவிதை...
ReplyDeleteஇன்று என் பதிவு:--எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..-முடிந்தால் முயற்சியுங்கள்...
//இருப்பினும்
ReplyDeleteவீட்டு விலாசம் கேட்ட
என் பள்ளிக்
காலத் தோழனுக்கு
எப்படிச் சொல்லித் தொலைப்பது
அந்த மரத்தின் விலாசத்தை...!//
அருமையான கவிதை. அருமையான சிந்தனை.
வாழ்த்துக்கள் சகோ.
தமிழ்மணம் வாக்கு 8.
அருமை கருன்
ReplyDeleteஅழகான அர்த்தமுள்ள வரிகள் அண்ணே
ReplyDeleteமரம்தான் அவனுடைய வீடு,வறுமையிலும் கல்வி கற்கின்றான் என பல நிகழ்வுகளை குறிக்கின்றது கவிதை அருமை
ReplyDeleteகவிதை சூப்பர்... கரு உதைக்கிறது... மரத்துக்கு கீழே வசிப்பவனின் பெயரை சொல்லி விசாரித்தாலே போதும் ஊரே சொல்லி விடும்... என் தமிழ் ஆசிரியர் ஒருவர் இருந்தார்... இரவு ஏதாவது மூடிய கடை தான் அவர் வீடு.. பெருச்சாளிகளுடன் தான் வாழ்க்கை... கோயில் குளம் தான் குளியலறை... ஆனால் அவரை பற்றி கேட்டால் பலரும் அவர் இருக்கும் இடத்தை சரியாக சொல்வார்கள்...
ReplyDeleteஎன் வீட்டை பார்...என்னை பிடிக்கும்..(பிடிக்கிறதோ இல்லையோ மதிப்பு வரும்..)
ReplyDeleteஏழ்மையின் பதிவிற்கு செல்வந்த வரிகள்...அருமை நண்பரே..
மெல்லிய வரிகள்தான் ...
ReplyDeleteஅதன் தாக்கம் வலிமை..
சமூக கவிதைக்கு வாழ்த்துக்கள்
எலேய் ஈரோடு வாரீயா? சொல்லவே இல்ல?
ReplyDeleteஅட.. இந்தக் கவிதையே உங்கள் விலாசம் சொல்கிறதே..
ReplyDeleteநல்ல கவிதை வாழ்த்துக்கள்.
ReplyDelete