Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/21/2011

சினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா?



நமக்கு தெரியாமலே
நாம் கொத்தடிமைகள்
உலகமயமாதல்...!

**********************************************************************************


இனம் வளர்க்கும்
தற்கொலை படைகள்
இலைகள்...!

**********************************************************************************


பாலின் மேலாடை
பார்த்துக் கொண்டே இருந்தாள்
கிழிந்த சேலையோடு
அம்மா...!

**********************************************************************************


அடுத்த வீட்டு அண்ணன்
மாலை போட்டு இருக்கிறார்...
பத்து வயதுக்கு மேலேயும்
அறுபது வயதுக்கு கீழேயும்
சாமிக்கு பிடிக்காதுன்னு
சொல்றா அக்கா
ஏம்மா?

**********************************************************************************

 
எந்த வகையிலாவது
எவரையாவது
சமாதானப்படுத்திக் கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது
தினம் தினம்
யாரும் கிடைக்காவிட்டால் என்னை...!

**********************************************************************************Repost

22 comments:

  1. அடுத்த வீட்டு அண்ணன்
    மாலை போட்டு இருக்கிறார்...
    பத்து வயதுக்கு மேலேயும்
    அறுபது வயதுக்கு கீழேயும்
    சாமிக்கு பிடிக்காதுன்னு
    சொல்றா அக்கா
    ஏம்மா?
    >>
    நல்ல கேள்விதான் யார் பதில் சொல்வது?

    ReplyDelete
  2. அன்புச் சகோதரனே வணக்கம்!

    தங்களின் சின்னஞ் சிறு கவிதைகள் பென்னம் பெரிய அர்த்தங்களையும், சிந்தனைகளையும் உண்டாக்குகின்றன! அத்தனையும் அருமை!

    உங்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    அன்புடன் ஈழவயல்

    ReplyDelete
  3. கிழிந்த சேலையோடு அம்மா, கண்ணீர் வந்துவிட்டது கண்ணில், ஆனால் இப்போ பாலும் கூட வாங்கமுடியாத விலையேற்றம் வந்து விட்டதே வாத்தி...!!!

    ReplyDelete
  4. அருமையான வரிகள்....

    ReplyDelete
  5. அருமை! சிந்தனைகள்! சிந்திக்க வைக்கும் கவிதைகள்!

    ReplyDelete
  6. நமக்கு தெரியாமலே
    நாம் கொத்தடிமைகள்
    உலகமயமாதல்...!

    அருமையான ஆக்கம்..

    ReplyDelete
  7. அனைத்தும் அருமை

    ReplyDelete
  8. ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் .. தொடரவும்

    ReplyDelete
  9. சபாஷ்...கலக்கல் கவிதைகள்

    ReplyDelete
  10. கலக்கல் கவிதைகள் பாஸ்

    ReplyDelete
  11. கடைசி கவிதை அருமை

    ReplyDelete
  12. //நமக்கு தெரியாமலே
    நாம் கொத்தடிமைகள்
    உலகமயமாதல்...!//

    உண்மை தான்!!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"