Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/11/2011

கேரளாவில் தமிழ் பெண்கள் மானபங்கம்.. வெட்கம் கெட்ட மன்மோகன் அரசே..


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண் டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் தேனி, கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் இருந்து சென்று வருபவர்கள்.

அதிகாலையில் எஸ்டேட்காரர்கள் அனுப்பும் வாகனங்களில் புறப்படும் இவர்கள், மாலையில் அதே வாகனங்களில் வீடு திரும்பிவிடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த டிச. 5-ம் தேதி இப்படிச் சென்ற வர்களை ஆங்காங்கே வழிமறித்த கேரளத்தைச் சேர்ந்த 'போராட்டக்காரர்கள்’ தமிழர்களை மோசமாகத் தாக்கியதுடன், தமிழகப் பெண்கள் மீது பாலியல் வன்முறையையும் அவிழ்த்து விட்டுள்ளனர்.

''அவங்களும் வேன்ல, ஜீப்லதான் வந்தாங்க. அச்சங்கோடு, மந்திப்பாறை, சேத்துக்குழினு அங்கங்க வழிமறிச்சுட்டாங்க. ஏன்டா... உங்க சோத்துக்கு நாங்க தண்ணி விட்டா, எங்க உசுருக்கே நீங்க உலை வைப்பீங்களான்னு கேட்க ஆரம்பிச்சு, தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடான்னு எங்க மேலேயே...'' என்று சொல்ல ஆரம்பித்த அந்தக் கூலித் தொழிலாளியால் அதற்கு மேல் பேச முடிய வில்லை.

''எங்களை வரிசையா நிப்பாட்டி... ஒரு பள்ளிக்கூடத்துல அடைச்சு வெச் சுட்டாய்ங்க. அப்போ 500 பேருக்கு மேல நாங்க இருந்தோம்... பான்பராக், வெத்தலையை எங்க மூஞ்சி மேல துப்புனாங்க. 'இது, உங்க பொம்பள சி.எம். மேல துப்புறதா நினைச்சுத் துப்புறோம்’ன்னான் ஒருத்தன். வயசுப் பொண்ணுங்க சீலையைப் பிடிச்சு இழுத்து, இடுப்புல, மாருல... என்னால சொல்ல முடியலையே சாமீ'' என்று அலறினார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

தோட்ட வேலைக்குச் செல்வோரில் சிறுமிகளின் எண்ணிக்கை கணிசமானது. அவர்களைத் தனியாக நிறுத்தி, தாவணியை உருவிவிட்டு, மார்பின் மீது முகத்தைத் தேய்த்து செல்போனில் படம் எடுத்து இருக்கிறார்கள்.

''அண்ணா நாங்க அழுதாலும் அடிச்சாங்கண்ணா. அழறதை நிப்பாட்டிட்டு கேவினாலும் அடிச்சாங் கண்னா'' என்றாள் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவள்.

''சப்பாத்து, வண்டிப்பெரியார், கட்டப்பனை, நெடுங்கண்டம்னு எல்லாப் பகுதியிலும் பிரச்னை. பெரிய கொடுமை என்னன்னா, கேரள போலீஸ் காரர்கள் பக்கத்துல இருக்கும்போதேதான் இத்தனை கொடுமையும் நடந்துச்சு. அதைவிடப் பெரிய கொடுமை... நூறடித் தூரத்துல நின்னு தமிழ்நாட்டு போலீஸ் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்துச்சு. யாராலும் ஒண்ணும் செய்ய முடியலை'' என்றார் கம்பம் எல்லையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருக் கிறார்கள். அவர்களின் பெயரையும் நம்மிடம் சொன்னார்கள். அவர்களுடைய உயிர் பாதுகாப்பு கருதி பெயர்களை வெளியிட மாட்டோம் என்ற உறுதியுடன் இந்தச் சந்திப்பு நடந்தது. கம்பத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (37), கொடியம்மாள் (35) இருவரும் ''அய்யா... எங்க உசுரே போனாலும் பரவாயில்லை. இந்தக் கொடுமையை எழுதுங்க'' என்று துணிச்சலாக வாக்குமூலம் அளித்தார்கள். பேச்சியம்மாளை செருப்பால் அடித்திருக் கிறார்கள். கொடியம்மாளின் பின்புறத்தில் அச்சில் ஏற்ற முடியாத அசிங்கத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். இந்தக் கொடுமையின்போது பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர்களில் ஜீப் ஓட்டுநர் ஜெய சீலனும் ஒருவர். இவர் மீது சிறுநீர் கழித்து இருக்கிறார்கள்.

இந்தக் கொடுமைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத கொடுமைகள் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் _ கேரள அரசின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் _ தமிழர்கள் வசிக்கும் கிராமங்களில் அரங்கேறி இருக்கின்றன (அந்த மக்களின் பாதுகாப்பு கருதி ஊர்ப் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன).

அச்சங்கடைப் பகுதியில் கார்கள், ஜீப்புகள் எரிக்கப்பட்டன. வழியில் தென்பட்ட தமிழர்கள் பலர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள செக் போஸ்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கம்பம் அருகே உள்ள என்.டி. பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் கார் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு இருக்கி றது. தமிழர்களின் டீக்கடைகளும் நாசமாக்கப் பட்டன.

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் 300-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன. வாகனங் கள் தலைகுப்புறக் கவிழ்க்கப்பட்டதாக, வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் கம்பத்தைச் சேர்ந்த ருக்மான் கூறினார். வண்டிப்பெரியாரில் ஐயப்பப் பக்தர்கள் வந்த வண்டியை மறித்து செருப்புமாலை போட்டிருக்கிறார்கள். கடைசி நிலவரப்படி தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் உத்தமபாளையம் அருகில் உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு ஐயப்பன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றி, ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும், தேசியக் கட்சிகளும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன வெட்கமே இல்லாமல்! 

- சண்.சரவணக்குமார்

தேவையான இந்தப் பதிவை ஷேர் செய்யத் தூண்டிய மனோ மக்காவிற்கு நன்றிகள்.. கேரளா எல்லையில் வேலைக்கு சென்ற நம் தமிழ் பெண்களை மானபங்கப் படுத்தி இருக்கிறார்கள் சில கேரளா நண்பர்கள்(?) அவர்களுக்கு கடுமையான கண்டனங்கள் வேடந்தாங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

23 comments:

  1. நாய்களை விட அருவருப்பானவர்கள்...!!

    ReplyDelete
  2. படிச்சவனுங்க புத்தி ஆகிர்ர்ர்ர் த்தூ.....

    ReplyDelete
  3. பாவப்பட்ட பெண்களிடம் வீரத்தை காட்டிய நாய்கள்...!!!

    ReplyDelete
  4. வேதனையாய் இருக்கிறது..

    ReplyDelete
  5. மலையாளி, கொலையாளியாக வேண்டாம் எங்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு

    ReplyDelete
  6. இந்த நாய்களை நடு ரோட்டில் வைத்து சுட்டாலும் தவறில்லை..

    உங்களோடு சேர்ந்து நானும் வன்மையாய் கண்டிக்கிறேன்

    ReplyDelete
  7. இனிமேல் தமிழகத்திலிருந்து காய்கறிகள் கேரளாவிற்க்கு கொண்டு செல்லல் முற்றிலும் தவிர்க்கப்படல் வேண்டும்

    அப்படி செய்தால் தான் அவர்கள் திருந்துவார்கள்

    ReplyDelete
  8. இரு மாநில அப்பாவி மக்களுக்கு தொல்லை தரும் மிருகங்களை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு மற்றும் காவல் துறையை கண்டிக்க வேண்டும்.

    ReplyDelete
  9. கூட்டி கொடுத்து பிழைப்பு நடத்தும் மலையாள நாய்களே கூர்த்தீட்டிய அம்புகள் இன்னும் பத்திரப்படுத்தி வைத்துள்ளோம் தமிழர்கள் ஆயுதம் ஏந்த நேரிட்டால் மலையாள வர்கம் கூண்டோடு அழியும் .........

    ReplyDelete
  10. அண்டை நாட்டோட சண்டையில இப்படிக் கேவலமா நடப்பாங்கன்னு கேள்விப்பட்ருக்கேன். பக்கத்து மாநிலத்துலயே இப்படிக் கேவலமா நடந்துக்கிட்டாங்கன்னா நாடு வெளங்கிடும். வரவர மானிடம் செத்து வருகிறது கவலை அளிக்கிறது. இந்த மிருகங்களுக்கு எல்லாம் அவைகளுக்குப் புரிகிற மொழியிலதான் பதில் சொல்லணும்!

    ReplyDelete
  11. padhivai kandu vedhanaiyaga ulladhu
    nanbargale ini endhdha oru malayalidamum naam thozhil reedhiyaana uravugalai thundiththukollungal kerala illaiendral veru maanilam iththanai kodooram nadandhdhum namma kooththadigal enge

    ReplyDelete
  12. பெரியாறு அனையை மீட்டால்தான் இதற்கெல்லாம் முடிவு கிடைக்கும்

    ReplyDelete
  13. யாரோ சிலர் செய்த தவறுக்கு மொத்த மலையாளிகளையும் குற்றம் சொல்ல விரும்பாமல் தவறு செய்த அந்த மிருகங்களுக்கு மட்டும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  14. தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த விதி !

    ReplyDelete
  15. தோழர் ஜீவாவின் கருத்தை நானும் முன் வைக்கிறேன்!

    ReplyDelete
  16. இதுதான் ஒருமைப் பாடா?

    வெட்கக் கேடு!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. tamilana yarnu avanungaluku puriya vaika vendiya neramithu, kerala naynga tamilnatla velai seithunga avanunga adichu oda vidanum, apathan avanungaluku arivu varum.

    ReplyDelete
  18. Inime adikkanum. Vera valiye illai.

    ReplyDelete
  19. தமிழின் நீச்ச மொழியை உச்சரித்துக் கொண்டிருக்கும் மலையாளிகள் தனக்கென்று மொழிகூட இல்லாத புல்லுருவிகள். எம் குலப்பெண்களை
    மான பங்கப்படுத்துவதா? முடிந்தால் உம வீட்டில் இருக்கும் பெண்களிடம் இந்த சேட்டையைச் செய் சேட்டனே. ..
    தமிழனாம் எமக்கு வாழ் வைத்துத்தான் பழக்கம், யாரையும் கெடுத்துப் பழக்கமில்லை. அரசாங்க விவகாரம் விசாரணையில் உள்ள நிலையில் இது போன்ற சகவாசங்களில் ஈடுபடுதல் உங்களுக்கே கேடு விளைவிக்கும்.

    ReplyDelete
  20. நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.

    http://www.change.org/petitions/central-government-of-india

    நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.


    பதிவர் நண்பர்களே இந்த செய்தியை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நம் சமூகத்தை காக்க உதவுங்கள்.

    ReplyDelete
  21. சசி சார் சொன்னதை போல் நானும் செய்து விட்டேன். நீங்களும் பல நண்பர்களுக்கு இதை எடுத்து செல்லுங்கள்.

    ReplyDelete
  22. கடந்த வாரம் கூடலூரில் ஒரு இளைஞர் சுயமாக தீக்குளித்தார். ஆனால் தமிழக ஐயப்பசாமி மீது தீ வைத்து விட்டார்கள் என்ற புரலி தமிழகம் முழுவதம் பரவியது. தமிழக போலீசாரின் கடுமையான எச்சரிக்கையை தொடர்ந்து அந்த விடயத்தை ஊடகங்கள் கைவிட்டன. அடுத்து எந்த பிரச்சனையை கையில் எடுத்தால் தமிழக மக்கள் கொந்தளிப்பார்கள் என்பது ஊடகங்களுக்கு தெரியாமல் இல்லை. அதை செய்து சாதித்துவிட்டார்கள்.

    ஒரு வருடத்திற்கு முன்பு வேலூரை சேர்ந்த ஒரு இளைஞன் திருச்சூர் ரயிலில் ஒரு கல்லூரி பெண்னை கழ்பழித்து கொலை செய்த செய்தியை படித்திருப்பீர்கள். அப்போது கேரள மக்கள் யாரும் அதை தமிழர்கள் செய்ததாக பார்க்கவில்லை. கேரளாவில் உள்ள தமிழர்களையும் தாக்கவில்லை. தனிப்பட்ட ஒரு கொடூரன் செய்ததாக தான் பார்த்தார்கள். 6 மாதங்களில் வழக்கு முடிக்கப்பட்டு அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல குமுளியில் தமிழ் பெண்களை மானபாங்கப்படுத்தியதாக சொல்லும் கயவர்களை அடையாளம் காட்டி நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்கலாம். ஆனால் தமிழர்&மலையாளிகள் கலவரத்தைதூண்டி வேடிக்கை பார்க்கின்றன ஊடகங்கள்.

    தமிழக போராட்டக்குழுவும், கேரள போராட்டக்குழுவும் ஒரு தீர்வை முன்வைக்கிறார்கள். அதை வெளியிட்டு பிரச்சனை தீர்க்க ஊடகங்கள் முன்வரவில்லை. இதை கேட்க முதுகெலும்பு இல்லாதவர்கள் தான் இன்று மலையாளி தமிழர் பிரச்சனைக்காக வக்காலத்து வாங்குகின்றனர்.

    சிலரின் சுயநலத்திற்காக பல அப்பாவிகளின் வாழ்க்கையில் விளையாடும் ஊடகங்கள் நாசமாக போகட்டும் என்று சபிப்பதை தவிர வேறு என்ன சொல்ல?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"