Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/24/2011

தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு



1851 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் நகரத்தில்  இருந்து “ நியூயார்க் டெய்லி டிரிபியூன்”  என்ற பத்திரிக்கை வெளிவந்தது.  இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான சார்லஸ் டயானா என்பவர் லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த ஒருவரை தொடர்பு கொண்டு  தங்கள் பத்திரிக்கையில் கட்டுதைகள் எழுதவேண்டும், லண்டன் நிருபராகப்  பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
சார்லஸ் டயானாவுடன் ஏற்கெனவே அவருக்குத் தொடர்பும் நட்பும் இருந்ததால் அவருடைய கோரிக்கையை லண்டன்வாசி ஏற்றுக்கொண்டார்.

ந்த லண்டன் வாசி  ஜெர்மனியில் பிறந்து ஆளும் வர்கத்தின் தொல்லைகளால் பல நாடுகளுக்குச் சென்று இறுதியில் லண்டனில் வாழ்ந்தவர். இந்தவேளையில்தான் சார்லஸ் டயானா நியூயார்க் டெய்லி டிரிபியூன் பத்திரிக்கையில்  அவரை ‌ எழுதத் தூண்டினார்.

ந்தக்கால கட்டத்தில் இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். தமிழக மக்களின் நிலையை, வெள்ளையர்களின் அடாவடித் தனங்களை  இந்தக்கால கட்டத்தில் வேறு எந்த வெளிநாட்டு அறிஞனும் எழுதியதாக  சான்று இல்லை. ஏன் இந்திய அறிஞர்கள்கூட தமிழக நிலைமையை பதிவு செய்திருக்கிறார்களா என ஆய்வு  செய்யவேண்டும்.



னால்  லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த மனிதர், 1857 ஆகஸ்ட் 28 தேதியிட்ட  நியூயார்க் டெய்லி டிரிபியூன் பத்திரிக்கையில்,                                “ இந்தியாவின் நிகழ்ந்த சித்திரவதைகளைப் பற்றிய விசாரனை” என்ற கட்டுரையில் ,

சென்ற ஆண்டில் மழையில்லாது  எங்களது நெற்பயிர் காலியானதால் வரி கட்டமுடியவில்லை. ஆனால் தாசில்தாரோ  கட்டாயமாக எங்களை வலி கட்டச் சொல்லி கொடுமைபடுத்தினார். 

பின்பு எங்களை சிலரது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டோம். அவர்கள் எங்களை வெயிலில் நிறுத்தினா். குனியவைத்து முதுகில் கருங்கற்களை தூக்கிவைத்தார்கள்.கொதிக்கும் மணலில் அவற்றைச் சுமந்து கொண்டு நின்றோம். ஒர் நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பாடு கொடுத்தார்கள். இத்தகைய கொடுமை மூன்று மாதகாலம் நீடித்தது. 

பிறகு எங்களது சொத்துகளை வரிபாக்கிக்காக பறித்தார்கள். எங்களது பெண்களும் கேவலமாக  நடத்தப்பட்டார்கள் - என்று தமிழர்களும், தமிழச்சிகளும் வெள்ளையர்களால் எப்படி எல்லாம் கொடுமைப் படுத்தப்பட்டார்கள், உரிமைகளை இழந்தார்கள் என்பதை  ஜெர்மனியில் வாழ்ந்து கொண்டு அமெரிக்கப் பத்திரிக்கையில் எழுதி  உலகறியச் செய்தான் அந்த அறிஞன்.

ம்! அவன் அறிஞர்கெல்லாம் அறிஞன், அதனால்தான் தேசம் கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து,  அவனால் மக்களுக்காகச் சிந்திக்கமுடிந்தது. சிந்தித்ததை உலக மக்களுக்கு ஒளிவு மறைவின்றிச் சொல்லமுடிந்தது. Repost.

அந்தப் பேரறிஞன் யார்?  அடுத்தப் பதிவில் காண்போம்.
தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடவும்.

21 comments:

  1. அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அட அப்படியா

    யாரப்பா அந்த மேதை?

    ReplyDelete
  3. எனக்கும் தெரியல வைட்டிங்...

    ReplyDelete
  4. அருமையான
    அறிந்துகொள்ள்வேண்டிய பகிர்வு..

    ReplyDelete
  5. தெரிந்து கொள்ள தொடர்கிறேன்!

    ReplyDelete
  6. யாரந்த சிறந்த மனிதன்...?

    ReplyDelete
  7. எனக்குத்தெரியும் யார் அந்த அறிஞன் என்று.. சொன்னால் மேலிருப்பவர்கள் இன்றே தெரிந்துகொள்வார்கள்.

    அது மட்டுமல்ல நாளைபதிவின் எதிர்பார்ப்பும். சுவராஷ்யமும் குறைந்துவிடும் என்பதால் நாளைய பதிவில் நீங்களே சொல்லிவிடுங்கள் கருண்..!!!

    ReplyDelete
  8. இன்னிக்கு நான் மௌனவிரதம்....நாளைக்கு சொல்லுகிறேன்......அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  9. அறியாததை அறியத் தந்தமைக்கு
    மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  10. இல்ல... எனக்கு இது புது விஷயமாத் தான் இருக்கு கருன் சார்.. நாளைய பதிவுக்கு ஆவலோட வெய்ட்டிங்...

    ReplyDelete
  11. இந்தாலு என்ன RePost- டா போட்டு கொள்றானே...

    ReplyDelete
  12. Arumaiyana pathivu.
    Antha manithar " Karl Marx" thane Sago?. Konjam doubt avum irukku. Am I correct?

    TM 8.

    ReplyDelete
  13. தேடல் நல்லதுதான் ஆனால் பாருங்களேன் அருன் தமிழன் எப்பவுமே பாவப்பட்டவனாகவே இருந்திருக்கிறான் !

    ReplyDelete
  14. நல்ல தகவல் ஆனால் யாருன்னு தெரில ..

    ReplyDelete
  15. நாளைய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கவச்சுட்டீங்க.

    ReplyDelete
  16. எனக்கும் தெரியும்.ஆனா சொல்லமாட்டம்ல..!
    ஹிஹி.
    (பானைல இருந்தாதான அகப்பைல வரும்.இந்த டீலிங்க் நமக்குள்ளயே இருக்கட்டும்.)

    ReplyDelete
  17. //வேறு எந்த வெளிநாட்டு அறிஞனும் எழுதியதாக சான்று இல்லை. //
    இருக்கின்றன. மருது சகோதரர்களைப் பற்றி 1813ல் கோர்லே என்ற ஆங்கிலேயர் எழுதிய புத்தகமும், கீழேயுள்ள சுட்டியில் இருக்கும் பிற புத்தகங்களும்...
    http://books.google.com/books/about/Mahrad%C5%AB_an_Indian_story_with_some_obser.html?id=Z3QIAAAAQAAJ

    ReplyDelete
  18. யாரந்த 'அறிஞர்கெல்லாம் அறிஞன்'? சீக்கிரம் சொல்லுங்க பாஸ்.

    ReplyDelete
  19. வணக்கம் நண்பா,
    இந்தப் பதிவு இவ் வருட ஆரம்பத்தில் நான் உங்கள் தளத்தில் படித்துள்ளேன்.

    நானும் விடை சொல்ல ட்ரை பண்ணினேன்.
    விடை கிடைக்கலை...

    இம் முறை என்ன விடை என்று அறிய வேண்டும்.

    ஆமா...சார்லஸ் டயனா...
    இவங்க நம்ம எலிஸபெத் வம்சம் இல்லை தானே?
    ஹே....ஹே...

    ReplyDelete
  20. அடடா..

    யாருங்க அவர்?
    சொல்லுங்க.. ஆவலுடன் காத்திருக்கேன்!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"