மனதில் உள்ள
மொத்தத்தையும்
சொல்ல முடிவதில்லை
பிரிவுகள் நிறைந்த
எந்த பயணத்திலும்..
விடைப் பெற்றுக்கொண்ட
சிறிது கணம் கடந்தே
ஞாபகத்திற்கு வரும்
மறந்து போனவைகளின்
கடைசி ரேகை...
நீண்ட பயனத்துக்காய்
குமுதமும், விகடனும்,
மினரல் வாட்டரும்
வாங்கி வந்த
உன் கைகளைப் பற்றிக்கொண்டு
வெகுநேரம் பேசியப் பின்பு
இம்முறையும் நிகழ்ந்தது
ஞாபகம் வராதவைகளின் ஞாபகம்...
யாருக்கு தெரியும்
நான்கு பேர் சுமந்து செல்கையில்
புதைந்து கிடக்கலாம்
நெஞ்சு குழிக்குள்
வெகுநாளாய் சொல்ல நினைத்த
ஏதாவதொன்று...
யாருக்கு தெரியும்
ReplyDeleteநான்கு பேர் சுமந்து செல்கையில்
புதைந்து கிடக்கலாம்
நெஞ்சு குழிக்குள்
வெகுநாளாய் சொல்ல நினைத்த
ஏதாவதொன்று...//
அருமை நண்பா
தமிழ் மணம் முதல் வாக்கு
மற்றவையும்
நல்லாயிருக்கு...
ReplyDeleteபயணம் போகும் போகும் போது, வழியனுப்பிய்வர்களும் நம் நினைவுகளுடன் கொஞ்ச தூரம் வருவது இனிமையே...
அம்புட்டு நாளா சொல்லாம இருப்ப?
ReplyDeleteகாற்றுள்ள போதே தூற்று தல!
அட நல்லா இருக்கு!
ReplyDelete//புதைந்து கிடக்கலாம்
ReplyDeleteநெஞ்சு குழிக்குள்
வெகுநாளாய் சொல்ல நினைத்த
ஏதாவதொன்று...//
நிச்சயமாக!
அருமை.
இது தாண்டா கவிதை....
ReplyDelete////யாருக்கு தெரியும்
ReplyDeleteநான்கு பேர் சுமந்து செல்கையில்
புதைந்து கிடக்கலாம்
நெஞ்சு குழிக்குள்
வெகுநாளாய் சொல்ல நினைத்த
ஏதாவதொன்று...////
நான் படித்த உங்கள் சிறந்த கவிதைகளில் டாப்-5 வகைப்படுத்த சொன்னால் நிச்சயம் இதுக்குத்தான் முதலிடம் கொடுப்பேன் அருமை
சொல்ல முடியாத விஷயஙகள் இப்படித்தான் மனசுக்குள்ளே புகைந்துக்கொண்டே இருக்கும்...
ReplyDeleteஅதனால் சொல்லி விடுங்கள...
சொல்லத்தான் நினைக்கிறேன்....
ReplyDeleteசொல்லிடுங்க சீக்கிரம்.
அப்புறம் இதயம் முரளி கணக்கா இப்படி பீல் பண்ண வேண்டியதுதான்.ஹிஹி.
நல்ல கவிதை.
Super kavithai
ReplyDeleteகலக்கல்...!!!
ReplyDeleteஅசத்தல் பிடிச்சிருக்கு
ReplyDeleteமிகவும் ரசித்தேன். பிடிச்சிருக்கு. நல்ல கவிதைக்கு நன்றி!
ReplyDeleteபுதைந்து கிடக்கும் ஆசைகளை
ReplyDeleteபிரிவின் தருவாயில்
அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே
அருமை...
வாத்தி .. சம்திங் ராங் ....
ReplyDeleteஇன்று
ReplyDeleteவிஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.
அருமை
ReplyDeleteயாருக்கு தெரியும்
ReplyDeleteநான்கு பேர் சுமந்து செல்கையில்
புதைந்து கிடக்கலாம்
நெஞ்சு குழிக்குள்
வெகுநாளாய் சொல்ல நினைத்த
ஏதாவதொன்று...
உண்மைதான்..
கடைசி வரி கச்சிதம் ... அருமை..
ReplyDeleteமச்சி, கோவிச்சுக்க வேணாம்,
ReplyDeleteநெசமாவே நீயா எழுதினாய்?
அம்புட்டு சூப்பரா இருக்கு! கவிதையில நீங்க தேறிட்டீங்க! வாழ்த்துக்கள்.
Arumaiyana Kavithai. Vaalthukkal.
ReplyDeleteTM 11.