தமிழகத்தில் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ளது நமக்கு தெரியும்.
இந்த நிறுவனம் உருவானதர்க்குப் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் எத்துனைப் பேருக்குத் தெரியும்.
ஒரு நாள் நள்ளிரவு...
ஜவஹர்லால் நேருவின் கல்கத்தா இல்லம்.
எங்கேயோ ஒரு நிகழ்ச்சி சம்பந்தமாக வெளியேச் சென்ற நேருஜி பின்னிரவு வரை வீடு திரும்பவில்லை. நேருவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார் அந்தப் பேரும் தொழிலதிபர்.
அவர் வள்ளல் அழகப்பச் செட்டியார்.
மிகவும் தாமதமாக வீடு திரும்பிய நேருஜி தன் வீட்டு வரவேற்பறையில் காத்துக் கொண்டிருந்த அழகப்பரைக் கண்டதும் ஆச்சர்யமடைந்தார்.
"அழகப்பரே.. என்ன இந்த நள்ளிரவில்?"
மத்திய அரசாங்கம் ஒரு மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க யோசித்துக் கொண்டிருப்பதாக அறிந்தேன். எங்கள் காரைக்குடிப் பகுதி மிகவும் பிந்தங்கியப் பகுதி. நான் முந்நூறு ஏக்கர் நிலமும், பதினைந்து லட்ச ரூபாயும் நன்கொடையாகத் தருகிறேன். எங்கள் பகுதியில் அந்த ஆராய்ச்சி நிலையத்தை அமைத்துக் கொடுங்கள் என்றார். கையேடு செக்கும் கொண்டுபோயிருந்தார்.
தான் வாழும் ஊர் வளர்ச்சியடைந்து மக்கள் முன்னேற வேண்டும் என விரும்பிய அந்த நல்ல உள்ளம் எத்துனைப் பேருக்குத் தெரியும்?
:-)
ReplyDeleteஅருமையான தகவல்.
ReplyDeleteஅறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான தகவல் பாஸ்
ReplyDeleteதான் வாழும் ஊர் வளர்ச்சியடைந்து மக்கள் முன்னேற வேண்டும் என விரும்பிய அந்த நல்ல உள்ளம் எத்துனைப் பேருக்குத் தெரியும்?//
ReplyDeleteஇப்பேர்ப்பட்ட நல்ல உள்ளம இப்போது எவனுக்கும் கிடையாது, மாறாக திகார் ஜெயிலில் போயி ஹாயாக இருப்பதுதான் இப்போதைய டிரென்ட் கொய்யால...!!!
மனோ அண்ணே...
ReplyDeleteநீங்க கனிமொழியோட வைராக்கிய பேட்டிய விகடன்ல படிக்கலையா? இனிமே பாருங்க அவங்க தமிழ்நாட்ட எப்படி முன்னேத்த போறங்கன்னு...
நிச்சயம் ஓர் தெரிய வேண்டிய தகவல்..நன்றி கருண்..
ReplyDeleteஇப்படியும் இருந்து இருக்காங்க..மாப்ள தகவலுக்கு நன்றி!
ReplyDeleteஇன்று
ReplyDeleteராஜபாட்டை பட விவகாரம் :விக்ரம் மேல கேஸ் போட போறேன்
நல்ல தகவல்
ReplyDeleteஅருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteசிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
நல்லதொரு பதிவு
ReplyDeleteஅழகப்பா கலைக் கல்லூரியில் படித்தவன் நான் என்பதால் இந்த விஷயம் அறிவேன். எனினும் சுவைபடச் சொல்லியிருப்பதை ரசித்தேன். அழகப்பர் கிரேட்தான்!
ReplyDeleteநன்றி நண்பரே..ஊருக்காக உழைத்த உத்தமரை பற்றி தெரிந்து கொண்டேன்
ReplyDelete//தான் வாழும் ஊர் வளர்ச்சியடைந்து மக்கள் முன்னேற வேண்டும் என விரும்பிய அந்த நல்ல உள்ளம் எத்துனைப் பேருக்குத் தெரியும்?//
ReplyDeleteஇதோ இப்ப எனக்குத் தெரியும்!!
(நீங்க சொல்லித்தான்..ஹி..ஹி..)
பகிர்வுக்கு நன்றி நண்பா!
இன்னும் பலருக்குத் தெரியாத விஷயம் - முதன் முதலில் தனது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியோடு மதிய உணவையும் இலவசமாக அளித்தவர் வள்ளல் டாக்டர் அழகப்பச் செட்டியார்தான் என்பது. காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கும் முன்னரே அதை ஆரம்பித்து நடத்தியவர் அழகப்பர். அக்காலத்தில் அவரது இந்தத் திட்டத்தால் பயணடைந்த மாணவர்கள் எண்ணற்றோர். பேராசிரியர், முனைவர் அய்க்கண் அவர்கள் இவ்வாறு பலனடைந்தவர்களுள் ஒருவர். வள்ளல் அழகப்பர் பற்றிய தனது வாழ்க்கை வரலாற்று நூலில் அவர் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கல்விக்காக அழகப்பர் செய்த பணிகள் எத்தனையோ! “வள்ளல்” என்ற அடைமொழிக்கு நிஜமாகவே உரித்தானவர் அவர்.
ReplyDelete