வழக்கமாக
எழும் நேரத்திலேயே
இன்றும்
எழுந்து விட்டேன்...!
விழிக்கும் போதே கடவுளிடம்
பிராத்தனை செய்து கொண்டேன்
நேற்று நடந்த
நிகழ்வுகள்
மீண்டும் நிகழாதிருக்க...
இன்னும் கொஞ்சம்நேரம்
தூங்கி இருக்கலாம்
என கெஞ்சுகிறது அந்த கீழிமைகள்...
நேற்றைய தினங்களின்
பிடிக்காமல் போன
முன் அனுபவங்களால்
மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்
இன்றாவது ஒழுங்காக இரு என்று...
இருந்தும்.,
தேவதை ஒருத்தியின்
உதாசீனப் பார்வையிலும்,
கசக்கி, பிழிந்து
வெளியேத் தள்ளி
பின்பு வழக்கம் போல
புறப்பட்ட பேருந்து பயணத்திலும் ..
டேய்.. வீட்ல,
சொல்லிட்டு வந்துட்டியா
என சபித்துவிட்டுப் போன
ஆட்டோக்காரனிடமும்...
அலுவலகம் சென்று
மறதியால் செய்த
பிழைக்காக
மேலாளரிடமும்...
வெளிப்பட்டுக் கொண்டே
இருந்தன...
அந்த பிரியமற்ற தினத்தின்
கோரமான நிகழ்வுகள்...
இன்று படுப்பதற்கு முன்
மறுபடியும்,
வேண்டிக்கொண்டேன்..
இன்று போல நாளையும்
இருக்கக் கூடாதென்று....!
வணக்கம் மச்சி,
ReplyDeleteசௌக்கியமா?
நேற்று நடந்த வேண்டத்தகா நிகழ்வுகள் இன்றும் இடம் பெறக் கூடாது என அங்கலாய்க்கும் மனதின் உணர்வுகளை இக் கவிதை அழகுறச் சொல்லியிருக்கிறது.
இன்றைய பொழுது இனிதாக அமையட்டும் மச்சி!
ReplyDeleteஎல்லோரும் ஒரே மாதிரி தான் நினைக்கிறோம் ஆனா நடக்குறது நடந்துக்கிட்டு தான் இருக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டியும் !!..
ReplyDeleteஒரு நாள் தாமத பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇது தான் வாழ்க்கை
ReplyDeleteஅன்றாட மனிதனின் பிரச்சனைகள்...
ReplyDeleteவிடமும் தொடரும் போராட்டமும்...
அழகிய கவிதையில்....
நாளைக்கு இது மாதிரி வேணாங்க...
என்ன பண்றது தினமும் இது போல வேண்டிக்க வேண்டியதுதான்
ReplyDeleteஇன்று படுப்பதற்கு முன்
ReplyDeleteமறுபடியும்,
வேண்டிக்கொண்டேன்..
இன்று போல நாளையும்
இருக்கக் கூடாதென்று....!
>>>
எல்லாருமே இப்படித்தானா சகோ
மிக இயல்பான வார்த்தைகள். அனைவருக்கும் எழும் உணர்வுகளை வெளிப்படுத்தி மனதுக்கு நெருக்கமான கவிதை. நன்று.
ReplyDeleteநல்லாயிருக்கு நண்பா..
ReplyDeleteஅருமை...மச்சி...
ReplyDeleteமாப்ள அதேஅதே ஹாஹா! ஜுப்பரு!
ReplyDeleteமச்சி..... கவிதை நல்லா இருக்கு.... நாளை நல்ல நாளாக இருக்க வேண்டும்.
ReplyDeleteவாசிக்க:
ஈரோடு பதிவர் சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...
இதுதான் வாழ்க்கை!
ReplyDeleteத.ம.8
மேலும், கீழும் உள்ள வாழ்வில் மேலே போக வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
யதார்த்தத்தை சொல்லும் இயல்பான வார்த்தைகள் பாஸ் அருமை
ReplyDeletenallathe irukku? thiam thinam oru sothanai ! veduthal!! yethirpaarppu!!!
ReplyDeleteசரிங்க வாத்தி நானும் இப்படியே சொல்லிக்கிறேன் ஹி ஹி...
ReplyDeleteஎவ்வளவு கும்பிட்டாலும் நமக்கு ஆப்ப ஆண்டவன் கரெக்டா வச்சிருக்காரு..
ReplyDeleteஅதெப்படி.கும்பிட்டாலும் விட்டுருவோம்மா??
ReplyDeleteயதார்த்தமான கவிதைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு
ReplyDeleteநண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு