Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/08/2011

நிருபனும், ஓட்டவடை நாராயணனும் - போட்டிவந்தால்?













நிரூபனும், ஓட்டவடை நாராயணனும் ஒரு நாள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக்கொண்டார்கள்.

யாருக்கு பொது அறிவு அதிகம் என்று? யாராவது ஒரு பொது அறிவு கேள்வி கேட்க வேண்டும். யாருக்கு பதில் தெரிய வில்லையோ அவர்கள் பணம் கொடுக்க வேண்டும் என முடிவானது.

நீ ஒரு கேள்வி கேட்டு நான் தோற்றுவிட்டால் உனக்கு நூறு ரூபாய் தருகிறேன். நீ என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாவிட்டால் எனக்கு இரு நூறு ரூபாய் தரவேண்டும் சரியா? என்றார் நிரூபன்

கேள்வியைக் கேட்கச்சொன்னார் ஓட்டவடை நாராயணன்.

ஒரு மிருகத்திற்கு ஆறு கால், இரண்டு வால், ஒரு கொம்பு, அது என்ன மிருகம்? என்று கேட்டார் நிரூபன்.

நீண்ட நேரம் யோசித்த ஓட்டவடைக்கு தலை சுற்றியது. தெரியாததால் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

ஏற்கெனவே கூறியபடி நிரூபனுக்கு இருநூறு ரூபாய் கொடுத்தார் ஓட்டவடை.

அது சரி, அந்த மிருகத்தின் பெயர் என்ன சொல்லு? என்று கேட்டார்.

இந்தா நூறு ரூபா என்று நீட்டினார் நிரூபன்.

எனக்கும் அந்த மிருகத்தின் பெயர் தெரியாது என்றார் புத்திசாலித்தனமாக..

ங்கே...(ஓட்டவடை நாராயணன்)!!!.

டிஸ்கி: இது ஒரு கற்பனை. யாரும் அடிக்க வராதீர்கள். . ஒடுலே ஓடு...

24 comments:

  1. ஹா ஹா கற்பனை நல்லா இருக்கே.

    ReplyDelete
  2. ஓடறேன்லே ஓடறேன்!

    ReplyDelete
  3. மிஸ்டர்...

    நீ... ராஜபாட்டை ராஜாவுக்கு அண்ணா
    சொல்லவேயில்லை...

    ReplyDelete
  4. அடேங்கப்பா இப்படியெல்லாம் கூட பதிவுபோட்டிடலாமா?

    ReplyDelete
  5. மாப்ள, நீதான்யா ஐடியா மணி ஹி ஹி

    ReplyDelete
  6. ஆஹா வசமா நூறு ரூவாய் சம்பாதிச்சுட்டாரே நிரூபன் ஹி ஹி...!!

    ReplyDelete
  7. டிஸ்கி: இது ஒரு கற்பனை. யாரும் அடிக்க வராதீர்கள். . ஒடுலே ஓடு...//

    நீ எதுக்குலேய் ஒடுற, நாங்கதாம்லெய் ஓடணும் முதல்ல ஹி ஹி...

    ReplyDelete
  8. ஹா ஹா ஹா ஹா செம காமெடி, அட இப்படியும் 100 ரூபா சம்பாதிக்கலாமா?

    மச்சி கருன், ஓட்டவடையை விட நிரூபன் தான் புத்திசாலின்னு இந்தக் கதை மூலமா தெரிய வருது இல்லையா?

    இதைக் கேட்ட ஓ.வ.நா ஓஓஓஓன்னு ஒப்பாரி வைக்கிறாராம்!

    அதுசரி மச்சி, கதையில எதுக்குலே என்னோட படத்தைப் போட்டிருக்கே! அதுக்காக நூறு ரூபா குடுலே! ஹா ஹா ஹா !!!

    ReplyDelete
  9. ////நீ ஒரு கேள்வி கேட்டு நான் தோற்றுவிட்டால் உனக்கு நூறு ரூபாய் தருகிறேன். நீ என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாவிட்டால் எனக்கு இரு நூறு ரூபாய் தரவேண்டும் சரியா? என்றார் நிரூபன்////

    ஹா.ஹா.ஹா.ஹா..அப்ப இதில் நிருபன் பாஸ் புத்திசாலியா?இல்லை ஜடியாமணி ஏமாளியா?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  10. ஈசியா சம்பாதிக்க வழி...

    ReplyDelete
  11. Why திஸ் கொலவெறி நண்பா?

    ReplyDelete
  12. ஓ பணம் சம்பாதிக்கும் எளிய வழியா..?

    ஹா..ஹா..ஹா...

    ReplyDelete
  13. மச்சி, கலக்கிட்டாய் மச்சி! நைட் வந்து விரிவான கமெண்ட் போடுறேன.

    ReplyDelete
  14. சக பதிவர்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி ரசிக்கும்படியான ஒரு பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள் கருன்! நகைச்சுவை யார் மனதையும் புண்படுத்தாமல் அவர்களே படித்தாலும் சிரிக்கும்படி அமைய வேண்டும். அதை இந்தப் பதிவு செய்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி எனக்கு!

    ReplyDelete
  15. இப்படியும் ஒரு வழி இருக்கா...

    ReplyDelete
  16. அசத்தல் காமெடி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. இப்படியும் ஒரு வழி இருக்கா? பகிர்விற்கு நன்றி நண்பரே!
    இதையும் படிக்கலாமே:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    ReplyDelete
  18. அடப் பாவி, இப்படியெல்லாமா யோசிக்கிறீங்க.

    ரெண்டு பேருக்குமே மிருக்கத்தோட பெயர் & கேள்விக்கான விடை தெரியாதா?

    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    செம காமெடி மச்சி!

    இப்படி தாங்கள் இன்னும் சில பதிவர்களின் டவுசரை அவிழ்க்க/ கிழிக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"