Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/01/2011

தத்தக்கா, புத்தக்கா..


வலைப்பூ நண்பர்களுக்கு இனிய மாலை வணக்கங்கள்...

நம்முடைய கிராமங்களில் பல விளையாட்டுகளை சிறுவர்கள் விளையாடுகின்றனர். நாமெல்லாம் அந்த விளையாட்டுகளை மறந்தே இருப்போம். சிலர் கேள்விபட்டே இருக்க மாட்டார்கள். அதுமாதிரியான மறந்து போன எம் கிராமத்து விளையாட்டுகளை நினைவு படுத்துவதே இந்த தொடர் பதிவின் நோக்கம். 

அந்த வரிசையில் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிற விளையாட்டு சிறுவர்களுக்கானது. அந்த விளையாட்டுக்கு பெயர் "தத்தக்கா, புத்தக்கா.."

இந்த விளையாட்டை, இருவராகவும் அல்லது குழுவாகவும் சேர்ந்து இந்த விளையாட்டை விளையாடுவார்கள். இருவர் என்றால் எதிர் எதிராகவும், குழுவாக இருந்தால் வட்டமாகவும் உட்கார்ந்து கொண்டு விளையாடுவார்கள்.

விளையாட்டுக்கான பாடல்:

தத்தக்கா, புத்தக்கா...!
தவளம் சோறும்...!
இச்சி மரத்திலே ...!
எறும்படிக்கிற வீராயி...!
பன்னி வந்து நீராட...!
பறையன் வந்து தப்பு கட்ட..! 
ஒ..ன் அப்பன்..அப்பன்...
பெயர் என்னா...!
முருங்கப் பூ...!
முருங்கப் பூ தின்னவரே...!
முந்திரி சார் குடித்தவரே...!
பாழும் கையைப் படக்கென்று எடு!
எடுக்கமாட்டேன்,
எடுக்காட்டி தார்...தார்... வாழைக்காய்,
புத்தூர் வாழைக்காய்,
பூப்போல எடுத்துக்கோ...!

ஆடும் முறை:

எல்லோரும் வட்டமாக அமர்ந்துக்கொண்டு கைகளைத் தரையில் குப்புறப் பதித்து வைத்து இருப்பார்கள். இவர்களில் யாரவது ஒருவர் ஒரு கையை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு கையால் விளையாட்டின் பாடலை சொல்லி ஒவ்வொரு கையிலும் வைத்து வருவார்.

பாடலில் 'ஒ..ன் அப்பன்..அப்பன்... பெயர் என்னா...!' என கேட்கும் போது யார் கையில் வைத்து கேட்கிறாரோ.. அவர் முருங்கப்பூ என்று சொல்வார். பின்னர் முருங்கப் பூ தின்னவரே...!,முந்திரி சார் குடித்தவரே...!,பாழும் கையைப் படக்கென்று எடு! என்று சொல்வார். அதற்கு அவர் எடுக்கமாட்டேன் என்று சொல்வார்.எடுக்காட்டி தார்..தார்.. வாழைக்காய் தையமுட்டு வாழைக்காய், புத்தூர் வாழைக்காய் பூப் போல எடுத்துக்கோ என்று சொல்வார். 

அப்பன் பெயரை கேட்ட பிறகு, பூப போல எடுத்துக்கோ என்று சொல்லி முடிக்கும்வரை , ஒருவருக்கு மட்டும் இரண்டு கைகளிலும் மாற,மாறி வைத்துப் பாடி கையை எடுக்க வைப்பார்.

அவர் இரண்டு கையையும் எடுத்து நெற்றியில் ஒரு கையும், முதலில் ஒரு கையுமாக வைத்துக் கொள்வார். பின்னர் பாடலை முதலிலிருந்து பாடலைச் சொல்லி சுற்றி வருவார். எல்லோரையும் கையை எடுக்க வைத்த பிறகு ஒவ்வொருவரிடமும் நெற்றியில் இருப்பது என்னா? என்று கேட்பார். அவர் எடுக்க முடியாது என்பார். பின்னர் கேட்பவர் கையைப் பிடுங்கி விடுவார்.

இதுபோல முதுபுறம் இருக்கிறது என்னா? என்று கேட்பார். இதை அவர் இரும்பு என்று சொல்வார். எங்க கையை எடு என்பார்.பின்னர் கேட்பவர்பிடுங்கி விடுவார். இவ்வாறு எல்லாரிடமும் கேட்பார். கேட்டு பிடுங்கி விடுவார். இவ்வாறு தொடர்ந்து விளையாடுவார்கள்.

டிஸ்கி: இந்த விளையாட்டைப் பற்றி சுருக்கமாக விளக்கலாம் என்றால் முடியவில்லை. சற்று பெரிய பதிவாக மாறிவிட்டது. ஒரு கேள்விப்பட்ட விளையாட்டை பதிவாக தருவது முதல் முறை, முதல் முயற்சி. உங்கள் ஆதரவு தொடர்ந்தால் இன்னும் பல சுவாரஸ்யமான விளையாட்டுகள் பற்றி இந்தப் பகுதியில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேலே சொன்ன பாடல் என்னுடைய அலைபேசியில் ரெகார்ட் செய்தேன் ஆனால் அது கிளியராக பதிய வில்லை எனவே அந்த பாடலின் ஆடியோ சேர்க்க முடியவில்லை.

28 comments:

  1. முதல்ல விளையாட்டு நாம விளையாடலாமா?

    ReplyDelete
  2. லேடீஸ் சேர்த்து விளையாடலாமா ???
    ஹி...ஹி...

    ReplyDelete
  3. மச்சி, அடுத்து கண்ணாமூச்சி விளையாட்டு சொல்லிக் கொடு....

    ReplyDelete
  4. மேலே சொன்ன பாடல் என்னுடைய அலைபேசியில் ரெகார்ட் செய்தேன்//

    நல்ல முயற்சி. தொடரவும்

    ReplyDelete
  5. ///உங்கள் ஆதரவு தொடர்ந்தால் இன்னும் பல சுவாரஸ்யமான விளையாட்டுகள் பற்றி இந்தப் பகுதியில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.///

    மறந்து வரும் கிராமத்து விளையாட்டுகளை மீட்டெடுக்கும் அறிய முயற்சி..

    தொடருங்கள் நண்பரே..

    தொடர்கிறோம்..

    மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்

    சம்பத்குமார்

    ReplyDelete
  6. என் தாத்தா தமிழ்நாட்டுக்காரர்.இந்தப் பாட்டை அவர் என்னைத் துக்கி வைத்தபடி பாடிய ஒரு சின்ன ஞாபகம்.இப்போ அவர் இல்லை !

    ReplyDelete
  7. மறந்து வரும் கிராமத்து விளையாட்டுகளை
    நினைவுக்குகொண்டுவரும் அரிய முயற்சிக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  8. மறந்த விளையாட்டினை ஞாபகபடுயதற்க்கு நன்றிங்க... பொண்ணுக்கு சொல்லி கொடுக்கனும்...

    ReplyDelete
  9. பல நினைவுகளை மீட்ட வைத்துவிட்டது பாஸ் உங்க பதிவு...

    ReplyDelete
  10. சிறு வயது ஞாபகம் வந்தது..

    ReplyDelete
  11. இப்படி ஒரு விளையாட்டு இருக்கறதே எனக்குத் தெரியாது. உங்க மூலமாத் தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி!

    ReplyDelete
  12. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.......

    மறந்து போன விளையாட்டுக்களை ஞாபகப்படுத்தும் உங்கள் முயற்சி சிறப்பானது வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  13. நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
    இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.
    தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

    தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

    கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

    போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

    ReplyDelete
  14. விளக்கம் நீளம் இல்லை
    மிகச் சரியாக அழகாக
    தெரியாதவர்கள் மிகச் சரியாக புரிந்துகொள்ளும்படி
    படங்களுடன் சொல்லி இருப்பது அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 4

    ReplyDelete
  15. தோழர்,
    நல்ல முயற்சி
    தொடருங்கள்..
    தொடர் பதிவாக போட்டு வரலாற்றில் இடம் பெறச் செய்யுங்கள்

    ReplyDelete
  16. தத்தக்கா பித்தக்கா விளையாட்டு பற்றிய பகிர்வுக்கு பாராட்டுக்கள்.. தொடருங்கள்..முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  17. தமிழர்களின் பல விளையாட்டுக்கள் அழிந்துவருகின்றன....அதை எடுத்துக்காட்டும் முயற்சி நன்றிகள்...

    ReplyDelete
  18. பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. தேவையான நினைவுபடுத்தல்..

    இரசித்தேன் நண்பா..

    ReplyDelete
  20. விளையாடியிருக்கீங்க!

    ReplyDelete
  21. இந்த விளையாட்டுல சாதியெல்லாம் வருது.ஓ.....மேட்டுக்குடி பிள்ளைகள்
    விளையாடுற விளையாட்டா?

    ReplyDelete
  22. இதை படிக்கும் போது என் நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன கருண்

    ReplyDelete
  23. மறந்து வரும் கிராமத்து விளையாட்டுகளை
    நினைவுக்குகொண்டுவரும் அரிய முயற்சிக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete
  24. நல்ல விளயாட்டு.விளையாட்டுகள் வெறு விளையாட்டுகளாக மட்டும் இல்லை.அப்போது,உடலினை உறுதி செய்யும்,வலிமை செய்யும் நல்ல உடற்பயிற்சியாகவும் இருந்திருக்கிறது.

    ReplyDelete
  25. எத்தனை விளையாட்டுகள்! இது எனக்குப் புதிது.
    சங்கிலி புங்கிலி விளையாட்டைப் பற்றியும் சொல்லுங்களேன். பேத்தி,பேரன்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்.

    ReplyDelete
  26. கிராமப்புற விளையாட்டு!
    பழைய நினைவுகள் மனதில்
    வந்துத் தோன்றின!வட்டமாக அமர்ந்து விளையாடிய தினைவு வந்தது!
    மேலும் தொடரலாம்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. நான் இதுவரைக்கும் கேள்விப்படாத விளையாட்டு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"