Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/10/2011

ஈழப் போராட்டத்தின் இரண்டு முக்கிய உரைகள்


கறுப்புயூலையின் கனத்த நினைவுகளுடனான மாதம் எம்மை சற்றுமுன்புதான் கடந்து போயிருக்கிறது.கறுப்புயூலை என்பதுகாலகாலமாக தென்னிலைங்கையில் வேர்ஆழப்பதிந்துபோய் வாழ்ந்துகொண்டிருந்த தமிழர்கள்மீதும், தென்னிலைங்கையில் வே லை நிமித்தமும்,தொழில்ரீதியாகவும் தங்கியிருந்த தமிழர்கள்மீதும் நடாத்தப்பட்ட கொலைத்தாக்குதல் மட்டுமல்ல.அது ஒரு கலவரம் அல்ல.அது ஒருவகையில் இனச்சுத்திகரிப்பு.


இன்னுமொருவகையில்அந்த 83ம்ஆண்டு யூலையில் நிகழ்த்தப்பட்டது அரசாங்கத்தின்ஆதரவுடனான இனப்படுகொலையே. 83ம் ஆண்டு யூலை 24ம்திகதி ஆரம்பித்த இனப்படுகொலை தமிழர்களை அடையாளம் கண்டு அடித்தும்,எரித்தும்,வெட்டியும்,சுட்டும் கொலைசெய்து வெறியாட்டம்ஆடிக்கொண்டிருந்த வேளையிலும் தமிழர்கள் இதுவும் முந்தையகாலங்களில் நடாத்தப்பட்ட கலவரங்களைப்போன்ற ஒன்று என்றுதான் எண்ணியபடிக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள்.

83யூலை படுகொலைகள் ஆரம்பித்து ஐந்து நாட்களுக்கு எதுவும் பேசாமல் மௌனமாக எல்லாவற்றையும் அவதானித்துக்கொண்டும் இருந்த சிங்களதேச சனாதிபதி 83 யூலை 28ம்திகதி மாலையில் தனது நிஸ்டையை கலைத்துவிட்டு நாட்டுமக்களுக்கு (தமது நாட்டு) ஆற்றிய உரைதான் முழுத்தமிழினத்தின் கண்களைமுழுதாக திறக்கவைக்க பேச்சுஆகும்.

83யூலை படுகொலைகள் ஏற்கனவே தாம் எதிர்பார்த்திருந்த ஒன்று எனவும் சிங்களமக்களின் எழுச்சி இது என்றும் அவர் பேசியபேச்சின் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிராக தென்னிலைங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த இனக்கொலைகளை கண்டிக்கவோ அதனை செய்தவர்களை தண்டிக்கப்போவதாகவோ தெரிவிக்கவேயில்லை.

நடைபெற்றுக்கொண்டிருந்த படுகொலைகளும்,கொள்ளைகளும் நகர்ப்புற காடையர்களின் நடவடிக்கை என்பதிலும் பார்க்க அது சிங்கள வெகுஜனஎழுச்சி என்றுதான் சிங்களதேசதலைவர் ஜெயவர்த்தனா நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்து இருந்ததார். அத்துடன் நாடு பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக சிங்களமக்கள் மேலும் எழுச்சியடையவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இலங்கைத்தீவு என்ற ஒரு தேசத்துக்குள் ஒருமித்து வாழலாம் என்ற கனவில் இருந்த எஞ்சிய தமிழர்களின் ஐக்கிய தேசியக்கனவுக்குள் கொள்ளி சொருகியது அந்த உரை. 42நிமிடங்களில் ஜெயவர்த்தனாவின் அந்த உரை முடிந்துவிட்டது. ஆனால் அது ஏற்படுத்திய வடுவும், ஏமாற்றமும் இன்றுவரை அழியாமல் தொடர்கிறது. அவர் இதற்கு முன்னரும் 1957ல் 2500ஆண்டுகளாக நிலைத்துநிற்கும் சிங்களமொழியினதும், இனத்தினதும் இருப்புக்காக தான் தலைமையேற்க தயாராக இருப்பதாக ஐக்கியதேசியக்கட்சியின் தலைவராக அவர் இருந்தபோதே பேசியவர்தான். 


அதைவிட 1977ம்ஆண்டு தென்னிலங்கையில் தமிழர்களுக்கெதிரான கொலைவெறியாட்டத்தின்போது “போர் என்றால் போர்” என்ற பிரகடனத்தை தமிழர்களை நோக்கி ஏவியவர்தான். ஆனால் அவை ஏற்படுத்திய தாக்கங்களைவிட 1983ம்ஆண்டின் யூலை 28ம்திகதி சிங்களதேசத்தின் நிறைவேற்று அதிகாரங்கள் நிரம்பிய அதிஉத்தம ஜனாதிபதியாக அவர் ஆற்றிய உரை ஏறத்தாழ முழுத்தமிழினத்தின் கண்களையும் திறக்கவைத்தது ஆகும்.

சிங்களதேசத்தின் அரச இயந்திரத்தின் எந்த ஒரு சிறு அமைப்புகூட தமிழர்களை காப்பாற்ற ஒருபோதும் முன்வராது என்றும் தமிழர்களுக்கான பாதுகாப்பும், நிரந்த அமைதியும் தமிழர்களின் பாரம்பரிய நிலத்திலேயே கிடைக்கும் என்ற பாடத்தை யூலை28ம்திகதி ஜெயவர்தனாவின் உரை ஆழமாகப் புகட்டியது.

ஒருதேசத்து ஜனாதிபதியே அந்த தேசத்தின் மக்களாக கருதப்பட்ட ஒரு பகுதிமக்கள்மீதான கொலை வெறித்தாக்குதலுக்கு இன்னொரு பகுதி மக்களை தூண்டிவிட்ட உரைபற்றி அந்த நேரத்தில் வெளியான சர்வதேச ஊடகமான ‘எக்னமிஸ்ட’ல் வெளிவந்த கட்டுரை மிகத்தெளிவாகவே அந்த உரையின் கொலைவெறியை சுட்டிக்காட்டியது.

“யூலை 28 ஜனாதிபதி ஜெயவர்த்தனா தொலைக்காட்சியில் உரையாற்றினார்.அவரது பேச்சில் இரக்கத்துக்குரியதான அறிகுறியோ அல்லது பழிவாங்கலை நிறுத்துவதற்கான மனோநிலையோ இருந்திருக்கவில்லை. அடுத்தநாள் கொழும்பு போர்க்களமானது. 100க்கும் மேற்பட்டோர் அந்த வெள்ளிக்கிழமையில் மாத்திரம் கொல்லப்பட்டனர். 30ஆயிரம் தமிழர்கள் அகதிமுகாமிற்கு சென்றனர்.( எக்னாமிஸ்ற்,6 ஓகஸ்ட் 1983)

“on july 28,president Jeyawardene spoke on TV ………Not a syllable of sympathy

For the tamil people or any explicit rejection of the sprit of vengeance….Next day .colombo was a battlefield.More than 100 people are estimated to have been killed On that Friday alone,and 30,000 tamils fled to refugee camps”..
(Economist,6 August 1983)

கண்களை முற்றாக திறக்க வைத்த இன்னொரு உரை.!

சிங்களபேரினவாத அரசுகளால் காலகாலமாக அடக்குமறைக்குள்ளும், உரிமைபறிக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவந்த தமிழ்மக்களுக்கு ஏதோ இந்திய தேசத்தின்மீதான நம்பிக்கைகள் ஆழமாக வேரோடி இருந்தன.துட்டகைமுனு காலத்திற்கு முன்பிருந்தே இந்தியாமீது அவர்களுக்கு இருந்த வெறுப்புகளும்,காழ்ப்பும் இயல்பாகவே தமிழர்களுக்கு

இந்தியாவை நேசிக்க வைத்தது. தங்கள்மீது நடாத்தப்படும் எந்தவொரு பாரிய சிங்கள கொலைவெறியாட்டத்தையும் இந்தியா ஒருபோதும் சகித்துக்கொண்டு இருக்காது என்றே ஈழத்தமிழர்கள் நம்பிவந்தனர்.

அத்தகைய இந்தியா 1987ம்ஆண்டில் சிங்களதேசத்துடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டது. எப்படியான சந்தர்ப்பத்தில் அந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது என்று பாருங்கள். ஒப்பிரேசன் லிபரேசன் படைநடவடிக்கை மூலம் வடமராச்சியின் நடுப்பகுதிவரை உள்நுழைந்து நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள்மீது மில்லர் தற்கொடைதாக்குதல் நடாத்தி நெல்லியடியில் சிதறடித்து,எஞ்சிய சிங்களப்படை அனைத்தினதும் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டபோதுதான் ஒப்பந்தம் உருவானது. 


(ஒப்பந்தத்தின் பின்னர் சிங்களபாராளுமன்றத்தில் உரையாற்றிய சிங்களதேசதலைவர் ஜெயவர்த்தனா சொன்னதைப்போல” பிரபாகரன் ஜெயவர்த்தனபுர பாராளுமன்றத்து நடுமண்டபத்துக்கும் வந்திருப்பார். இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படாவிட்டால்” என்று).

எங்களுக்கு அருகில் இருக்கும் பிரமாண்ட நிலப்பரப்பு கொண்ட தேசம், எங்களுடன்தொப்புள்கொடி உறவுகளையும், கலாச்சார தொடுப்புகளையும் கொண்டிருந்த தேசம் எமது எதிரியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் எங்களை காப்பாற்றுவதற்காகவே என்று எமது மக்கள் ஆழமாக நம்பினார்கள்.கனரக ஆயுதங்களுடனும், டாங்கிகளுடனும் எமது செம்மண்தோட்டங்களை உழுதுகொண்டுவந்த பாரததேசபடையை எமது மக்கள் காக்கும்தேவர்களாகவே நினைத்து வரவேற்பு அளித்தனர் மாலை அணிவித்தனர்.

பதினைந்து வருடத்து விடுதலைப் போராட்டம் மோசமான முறையில் கருவறுக்கப்படும் அபாயம் புரியாமலேயே மக்கள் பாரதபடையை நோக்கினர்.இலங்கைத்தீவு என்ற ஒற்றைஆட்சிக்குள் தமிழரின் உரிமைகளை பேரம்பேசவே இந்தியபடைகள் வந்து இறங்கி இருக்கின்றன என்று முழுதாக புரியாமல் எமது மக்கள் இருந்தவேளையிலேயே அந்த வரலாற்றுப்புகழ்மிக்க உரை மக்களுக்கு முன்பாக வருகின்றது.

சுதுமலை அம்மன் கோவில்முன்னால் உள்ள பரந்தவெளி. 1987 ஓகஸ்ட் 4ம்திகதி. இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்ட மாபெரும் நிகழ்வுஅது. இந்திய-சிறீலங்கா ஒப்பந்தம் பற்றிய தங்களது நிலைப்பாட்டை தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவிக்கும் நிகழ்வு அது. தங்கள் தேசியத் தலைவர் அங்கு தோன்றுவார் என்பதை அறிந்த மக்கள் அவரின் கருத்தைகேட்பதற்காக திரண்டுநின்றனர்.

பிராந்திய தளபதிகள் பக்கத்தில் சு10ழ்ந்துநிற்க எமது தேசியதலைவர் ஆற்றிய உரையானது மிகவும் அவதானத்துடனும், எளிமையான வார்த்தைகளாலும் உருவாக்கப்பட்டிருந்தது.அந்த உரையானது அதுவரை இந்திய ஒப்பந்தத்தை ஏதோ தமிழர்களை காப்பாற்றப்போகும் ஒரே மார்க்கம் என்று நம்பிக்கொணடிருந்தவர்களின் கண்களை திறக்கவைத்து

பாரதப்படைகள் வந்து இறங்கிநிற்பது சிங்களதேசத்தை காப்பாற்றவே என்ற எண்ணத்தை முதன்முதலில் புரியவைத்தது. எனது அன்புக்குரிய தமிழீழ மக்களே என்று ஆரம்பித்த அந்த உரை மிகத்தெளிவாகவே மக்களுக்குள் உள்நுழைந்து எமது விடுதலையை வேறுஎவரும் எடுத்துத்தரவே போவது இல்லை என்ற உண்மையை உறைக்கச்சொன்னது.

அந்த உரைமுழுவதும் எமது மக்களின் பாதுகாப்பு, அதற்கான உத்தரவாதம, நிரந்ததீர்வு என்பது பற்றியே திரும்பத்திரும்ப வலியுறுத்தியது. இந்த ஒப்பந்தம் தமிழ்மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் விதமாகவோ தமிழ்மக்களின் போராட்டசக்தியின் ஒப்புதலுடனோ செய்யப்படவே இல்லை என்பதை மிகத்தெளிவாக தலைவர் கூறியது ஒப்பந்தத்தின் உண்மைமுகத்தை தோல் உரித்துக்காட்டியது.

உரையின் இறுதியில் அவர்தெளிவான தனது குரலில் எந்தவித தடுமாற்றமும் இன்றி அறிவித்தார். “இந்த ஒப்பந்தம் தமிழ்மக்களுக்கான நிரந்தர தீர்வு எதையும் தந்துவிடபோவதில்லை. சிங்களபேரியவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழும்காலம் வெகுதொலைவில் இல்லை” என்றார் தேசியததலைவர்.

அவர் தொடர்ந்து “ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரமான ஒரே தீர்வாக சுதந்திரதமிழீழமே என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். சுதந்திரதமிழீழ தேசத்தை அடையும் போராட்டத்தில் நான் தொடர்ந்தும் ஈடுபடுவேன் என்று மிகத்தெளிவாக உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.” என்று ஆழமான உறுதியுடன் கூறிவிட்டு “போராட்டவடிவங்கள் மாறலாம்.ஆனால் போராட்ட இலட்சியம் ஒருபோதும் மாறாது” என்ற வரலாற்றுவீரியம் நிறைந்த வசனத்தையும் கூறினார்.

உரையின் மிகமிக இறுதி வசனமாக “நான் இந்த தேர்தல்களில் போட்டியிடப்போவதோ முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவோ போவதில்லை” என்று கூறியதன்மூலம் தமிழீழத்துக்கான தனது போராட்டம் ஒருபோதும் ஓயாது என்று சுட்டிக்காட்டினார்.

இந்த உரை நிகழ்த்தப்படாமல் விடப்பட்டிருந்தால் எமது மக்களுக்கு இந்தியாவின் கபடநோக்கம் தெரியவர நீண்டகாலம் ஆகிவிட்டிருக்கும்.அதற்கிடையில் தமிழர்களின் விடுதலை இலட்சியம் கருவறுக்கப்பட்டிருக்கும். இந்தஉரை மக்களை சிந்திக்க தூண்டியது.

ஏதோஒரு பிழையான நோக்கத்துடன்தான் பாரதபடைகள் வந்து இறங்கி நிற்கிறார்கள் என்ற முதற்பொறியை இது ஏற்படுத்தியது. தேசியத்தலைவரின் சுதுமலைப்பேச்சு என்பது பல விடயங்களில் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்திய உரை. ராஜிவ்காந்தியுடன் ராஜதந்திர நரியான ஜெயவர்த்தனா செய்துகொண்ட ஒப்பந்தம் சிங்கள நலனுக்கானதுதான். அது தமிழர்களுக்கு எதுவும் தரப்போவதில்லை என்று கண்களை திறந்த உரை அது.

மிகவும் தெளிவான குரலில் எந்தவித பிசிறும்,ஐயமும் இன்றி ஆற்றப்பட்ட உறுதிநிறைந்த அந்த உரையின்

“போராட்டவடிவங்கள் மாறலாம்.ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது” என்ற குரல் என்றும் என்றும் எமக்கான பாதையை அடையாளம் காட்டியபடிக்கே நீளும். நன்றி அலைகள்.

14 comments:

  1. “போராட்டவடிவங்கள் மாறலாம்.ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது” உண்மை.. ஈழம் மலரும்..

    ReplyDelete
  2. இப் பதிவின் பொருள் பற்றி
    நான் கவிதை ஒன்று
    எழுதியுள்ளேன்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி.வ்ரலாறு திரும்பும் ஈழத்தமிழனுக்கும்.

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  5. பல நினைவுகளை மீட்ட செய்து விட்டது உங்க பதிவு.
    சூப்பர் பதிவு பாஸ்

    ReplyDelete
  6. //“போராட்டவடிவங்கள் மாறலாம்.ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது”//

    நிஜம் பாஸ்

    ReplyDelete
  7. தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ...
    வடிவங்கள் மாறலாம் லட்சியம் மாறாது ..
    உண்மையிலும் உண்மை.. விடிவை நோக்கி முன்னேறுவோம் ..

    ReplyDelete
  8. //தங்கள் தேசியத் தலைவர் அங்கு தோன்றுவார் என்பதை அறிந்த மக்கள் அவரின் கருத்தைகேட்பதற்காக திரண்டுநின்றனர்.///

    இந்த உரைக்குப்பின் வரலாற்றை நோக்கினால் அவர் எந்தமக்களுக்கு போராடினாரோ.அந்த மக்கள் முன்தோன்றி அவர் உரையாற்றிய சந்தர்ப்பங்கள் எத்தனை?
    35 வருடங்களுக்கு மேலாக தமிழருக்காக போராடிய அவரை.நேரில் பார்த்த ஈழத்தமிழர்கள் எத்தனை பேர்?விரல் விட்டு எண்ணலாம்.
    அவர் விட்ட சிலதவறுகளில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  9. நல்லவர் லட்சியம் ஜெயிப்பது நிச்சயம்

    ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றி கருண்...நம் சகோதரர்களின் நிலை பற்றிய பிரயத்தனங்கள் எப்போதும்...எல்லார் மனதிலும்
    மறவாமல் இருக்க செய்வது நம் பதிவர் சமூகத்தின் கடமைகளில் ஒன்றாகும்...

    ReplyDelete
  11. ஏற்கனவே இந்த உரையினைக் கேட்டிருக்கிறேன்.
    பகிர்விற்கு நன்றி மச்சி.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"