Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/12/2011

கொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா? கலைஞருக்கு தொண்டன் வினா?


அன்புள்ள தலைவா, வணக்கம். கழகத்தின் செயற்குழுவையும், பொதுக் குழுவையும் வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு வாழ்த்துக்கள். 

நமது எதிரிகள் நமது கழகத்தின் செயற்க்குழு, பொதுக் குழு கூட்டங்களில்
‘சகோதர யுத்தம்’ பிரமாதமாக நடக்கும் என்று காத்திருந்தார்கள். 

ஆனால், அந்த யுத்தத்திற்கான சங்கு முழங்கப்பட்டதும், உடனடியாகத் தலையிட்டு, ‘சாகும் வரை கலைஞர்தான் தலைவர்’ என்று பேராசிரியரை விட்டு அறிவிக்கச் செய்து, சகோதர யுத்தத்தை முளையிலேயே கிள்ளியெறிந்த சாணக்கியத்தனத்தை பாராட்டுகிறேன். யுத்தம் நடக்க வேண்டும் என்றாலும் அதற்கும் உன் மூளை பின்னணியில் இருந்தால்தான் முடியும் என்பது தெரியாதவர்களெல்லாம் தலைவர்களாக முயற்சிக்கிறார்கள் என்றால், அவர்கள் இன்னமும் முதிர்ச்சி பெறவில்லை என்பதுதானே தலைவா உண்மை.

அன்புத் தலைவா, கழகத்தின் எத்தனையோ செயற் குழுக்களையும், பொதுக் குழுக்களையும் கண்ட தொண்டன் நான். ஒருபோதும் உள்ளே அனுமதிக்கப்பட்டதில்லை. ஆனால், நீ வெளியே வந்து பத்திரிகையாளர்களையெல்லாம் வாயால் பந்தாடுவதைப் பார்த்து புளங்காகிதம் அடைந்தவன். அப்படிப்பட்ட என்னால், கழகம் தோற்றத்திற்குப் பின்னால் ஏற்பட்ட நிதிச் சிக்கல் காரணமாக கோவை வர முடியாமல் போய்விட்டது. 

ஆனால் அந்தக் குறை சனிக்கிழமை நீங்கள் ஆற்றிய உரையைப் பத்திரிகைகளில் படித்துப் பார்த்ததும் போய்விட்டது. “நேர்மறையான விளைவுகளின் காரணமாக இன்று நாம் ஆளும் கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாகவாவது இருக்கக் கூடிய நிலைமையையும் பெறாமல், எதிர்க்கட்சிக் குழுக்களிலே ஒன்றாக இடம் பெற்றிருக்கின்ற நிலையில்...” என்று நீங்கள் பேசியதை படித்தபோது இரு கண்களில் இருந்து நீர் காவிரி ஆறாகப் பெருக்கெடுத்தது. எவ்வளவு பெரிய தோல்வி அது?


இந்த நிலை (அதாவது படுதோல்வி) நமக்கு நாமே தேடிக்கொண்ட முடிவு இது என்று சொன்னால், அது கேள்விக்கு இடமில்லாத ஒரு உண்மை என்பதை நீங்களும் உணர்வீர்கள். நான் உணர்ந்த காரணத்தால் இதைச் சொல்கிறேன்”என்று தாங்கள் கூறியிருப்பதைப் படிக்கும் போதுதான் தலைவா சற்று குழப்பம் ஏற்பட்டது. 

நமக்கு நாமே தேடிக்கொண்டது என்று கூறுகிறீர்களே தலைவா? அப்படியானால் அதில் என்னைப் போன்ற தொண்டர்களுக்கும் பங்குண்டு என்று கூறுகிறீர்களா? அப்படியானால் நடந்த, நடத்தப்பட்ட குற்றச்செயல்கள் அனைத்திலும் தொண்டனுக்கும் பங்குண்டு என்கிறீர்களா? இது நியாயமா தலைவா? இந்தியாவில் எந்த ஊடகமும் இப்படி எங்களையும் சேர்த்து பேசவில்லை, ஆனால் நீங்கள் எங்களுக்கும் பங்கு தருகிறீர்களே? ரொம்ப தாராள மனசு தலைவா உனக்கு.

“அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, நாம் பதவிகளுக்காக - பவிசுகளுக்காக - ஆடம்பரங்களுக்காக - அரசியலுக்காக பதிவிகளைப் பெற்று அந்த அரசியலைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல; நம்முடைய இனத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் - திராவிட முன்னேற்றக் கழகம்” என்று புரிந்துதான் பேசினீர்களா, இல்லை புரியாமல்தான் உளறினீர்களா தலைவரே? இப்படி நீங்கள் கூறியதை என்னாலேயே ஏற்க முடியவில்லையே, பிரபல தமிழ் பத்திரிகைகளில் படிக்கும் மக்கள் எவராவது ஒப்புக்கொள்வார்களா?



பதவிக்காக இல்லை, இனத்திற்காக என்கிறீர்களே, இதைத்தானே கூறி, சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் எல்லாவனும் நம்மை கிழி கிழி என்று கிழித்தார்கள்? 2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், டெல்லிக்குப் போனீர்கள், என்ன செய்தீர்கள்? ராசாவுக்காக, கனிமொழிக்காக, அழகிரிக்காக, தயாநிதி மாறனுக்காக என்று உங்கள் குடும்பத்து உருப்படிகள் ஒவ்வொன்றுக்கும் காபினெட் பதவி கேட்டு சோனியாவுடன் பேசினீர்கள், சிங்குடன் பேசினீர்கள், அவர்களுடைய தூதர்கள் உங்களை வந்து சந்தித்த போது அவர்களிடமும் பதவிப் பங்கு பற்றியே பேசினீர்கள். 

ஆனால் அப்போதுதான், இலங்கையிலே தமிழினம் அழிக்கப்பட்டது, அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன்? அப்படி ஒன்று நடந்துக்கொண்டிருப்பதாகவே நீங்கள் காட்டிக்கொள்ளவில்லையே. அங்கே ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று இப்போது ஆணித்தரமாக ஆதாரங்கள் வருகிறது. ஐ.நா. சபைக்காரனும் அறிக்கை கொடுத்துவிட்டான். நீங்களோ இனத்தைக் காக்க ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்று கூறுகிறீர்கள்? எந்த இனத்தைக் கூறுகிறீர்கள் தலைவா? சிங்கள இனத்தையா, தமிழினத்தையா? கேப்பைக் கூழுல நெய் வடியற கதைய சொல்றீங்களே, நியாயமா? செத்தவங்க ஆத்மா நம்மை மன்னிக்குமா?

“நமக்குக் கிடைத்திருக்கிற தோல்வி, நம்முடைய கொள்கைக்கு, இலட்சியத்திற்கு, எதிர்காலத்திற்கு, சந்ததியினருக்கு, வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கிற தோல்வி என்பதை மறந்துவிடக் கூடாது” என்று கூறுகிறீர்களே? இதில் எதிர்காலம், சந்ததி, வருங்கால தலைமுறை... அதெல்லாம் புரிகிறது, கொள்கை, இலட்சியம் என்று கூறுகிறீர்களே? அது என்ன தலைவா? புதுசா கண்டு பிடித்திருக்கிறீர்களா?

ஐந்தாண்டுக் காலம் பதவியில் இருந்தீர்கள், அதில் நீங்கள் சொல்லும் எந்தக் கொள்கை நிறைவேறியது? எந்த இலட்சியத்தை எட்டினோம்? தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்குப் போய் ஆண்டோம், உண்மை. ஆட்சியில் இருந்து ஆற்றியத் தொண்டுக்கு இப்போது ஒரு மூணு, நாலு பேர் திகார் சிறையில் இருக்கிறோம். இதுல என்ன இலட்சியம் இருக்குத் தலைவா? பகுத்தறிவுக்கு எதிரா காது குத்துகிறீங்களே, பெரியாருக்கு அடுக்குமா?

நமது கொள்கை பெரியார் சொன்ன பகுத்தறிவு, சமூக கொள்கை, அப்புறம் அண்ணா சொன்ன தன்னாட்சி... அதாவது கூட்டாட்சிக் கொள்கை. நீங்க கூட அண்ணா மறைந்த பிறகு தி.மு.க.வின் ஐம்பெரும் கொள்கை என்று ஒரு மாநாட்டில் பேசினீர்களே, நினைவிருக்கிறதா? 1. அண்ணா வழியில் அயராது உழைப்போம், 2. ஆதிக்கமற்ற சமூதாயம் அமைப்போம், 3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், 4. வன்முறை தவிர்த்து வறுமையை ஒழிப்போம், 5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி என்று முழங்கினீர்களே, அதில் எதை இந்த 5 ஆண்டுக் காலத்தில் சாதித்தோம், சொல்லுங்க தலைவா

அண்ணா வழி, ஊழலற்ற, தூய்மையான நிர்வாகத்தை தந்த வழி. அவர் டெலிபோனை மட்டும் வைத்துவிட்டு, மற்ற பொருட்களையெல்லாம் கொண்டு போங்கள் என்று முதல்வர் ஆனவுடன் அரசு அதிகாரிகளுக்குக் கூறினார். அவர் மகன் பரிமளம் ஒரு பதவிக்கும் வரவில்லை. அவர் மனைவி ராணி அம்மாள் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து செத்துப்போனார். இப்படியா தலைவா நீங்கள் இருந்தீர்கள், இருக்கிறீர்கள்? உங்கள் குடும்பம் இல்லாத இடம் கட்சியிலும் இல்லை, ஆட்சியிலும் இல்லை. ஆக்டோபஸ் என்கிறார்களே, அப்படியல்லவா இருக்கிறது நிலைமை? இதில் அண்ணா வழியெங்கே, ஆட்டுக் குட்டி வழியெங்கே?

ஆதிக்கமற்ற சமூதாயம் அமைத்தீர்களா? குடும்ப ஆதிக்கத்தை அல்லவா கொடி கட்டிப் பறக்கச் செய்தீர்கள்? அதைக் கேள்வி கேட்டால், என் குடும்பம் மட்டுமே நல்லா இருக்கக் கூடாதா? என்று அங்கலாய்த்தீர்கள். சென்னையிலும், மதுரையிலும், டெல்லியிலும் உங்கள் குடும்ப ஆதிக்கம், மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் ஆதிக்கம், இப்போ தலைமறைவு, தேவைதானா?

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். நீங்களா? மனசாட்சியோடு சொல்லுங்கள் தலைவா? இந்தி தெரிந்த ஒரே காரணத்திற்காக காங்கிரஸ் தலைவி சோனியாவிடம் காம்ரமைஸ் பேச நீங்கள் தயாநிதி மாறனை அனுப்பவில்லை? இதுவா இந்தி எதிர்ப்பு? இங்கிலீஸ்ல பேசினால் சோனியா அம்மா கேட்க மாட்டாங்களா? எதுக்கு இந்தி? ஆதிக்கத்திற்கு தேவைப்படுது, அப்படித்தானே?

வன்முறை தவிர்த்து வறுமை ஒழிப்போம், சொன்னீங்க. இலவசம் கொடுத்து வறுமை ஒழிப்போன்னு மாத்துங்க. சாராயம் வித்து வர்ற 15,000 கோடி ரூபாய்ல, எல்லாத்தையும் கொடுத்துவிட்டு, வறுமை இருக்கும் வரை இலவசமும் இருக்கும் என்று சொன்னீர்களா? அண்ணா இருந்தால் விடுவாரா உங்களை?

மாநிலத்தில் சுயாட்சி? எப்போது.... எதிர்க்கட்சியா இருக்கும்போது. ஆளும் கட்சியா ஆன பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சி, அதிலே உங்க குடும்பத்து பிள்ளைகளுக்குப் பங்கு! இதைதானே கூட்டாட்சின்னு கொஞ்ச நாளைக்கு முன்ன கூட காது குத்த பார்த்தீங்க? நீங்க யாருன்னு முழுமையா மக்கள் புரிஞ்சிக்கிட்டதுதான் தலைவா நமது தோல்வி. இதுக்கு மேல நம்மை நம்பறதுக்கு எந்த மக்களும் இல்லை, என்னைப் போன்ற தொண்டர்களும் இல்ல. ஏதோ அண்ணா உருவாக்கிய கட்சி, அந்தக் கொடி போட்ட கரை வேட்டி, தி.மு.க.வில இருக்கிறோம். அதுக்காக எங்களையும் - தமிழ்நாட்டு மக்களா நெனச்சி ஏமாத்தாதீங்க... தலைவா.



ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்துனுமா? ஆட்சியில இருக்கும்போது அவங்களைப் பற்றி நெனப்பு வரல. இப்போ வருதா? அவங்களையுமா இன்னமும் ஏமாத்தப் போறீங்க... போதும் தலைவா... கட்டிய கணவன், பெற்ற பிள்ளை, பாதுகாத்த போராளிகள், வாழ்ந்த நிலம், இருந்த கூரை என்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான் ஈழத்தில் தமிழன். அவன் விதி...விட்டுவிடுங்கள். அவனுள் உள்ள வீரம் அவனைக் காப்பாற்றும்.

அண்ணா வழி எது என்று பார்த்து, இதுக்கு மேலாவது திருந்தி நடப்போம். அடுத்த பொதுக் குழுக் கூட்டத்தில் நேரில் பார்க்கிறேன். உண்மையான தி.மு.க. தொண்டன்.

21 comments:

  1. virivaana alasal...


    nanbargale ithai kandippaaga padiththuvittu comment podavum..

    ReplyDelete
  2. Super...all dmk suppoters surely
    agree this,,,,,,,,

    comment by mobileSuper...all dmk suppoters surely
    agree this,,,,,,,,

    comment by mobile

    ReplyDelete
  3. பொறுங்க போறுங்க அனுபவிக்கட்டும்.


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று

    ReplyDelete
  4. மக்களோ தொண்டனோ தவறு செய்வதில்லை,ஆட்சியாளர்கள்தான் தவறு செய்கிறார்கள்.கருணாநிதி தவறு செய்வதற்காக ஜெயலலிதா காத்திருந்தார்,இன்று ஆள்கிறார்.இனி இன்றைய முதல்வர் தவறு செய்வதற்காக,முன்னால் முதல்வர் காத்திருக்கிறார் மீண்டும் முதல்வர் ஆவதற்காக.
    தவறு செய்பவர்களை மக்கள் தண்டிக்கத்தான் செய்கிறார்கள்,ஆனால் அந்த தண்டனை,ஏற்கனவே குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாகி விடுகிறது என்பதுதான் வேதனை.

    ReplyDelete
  5. கொல்லுங்கலெய் கொல்லுங்கலெய் ஹி ஹி....

    ReplyDelete
  6. கொள்கை, லட்சியம் எல்லாம் தொண்டனுக்கு தெரிஞ்சிருந்தா - தி.மு.க என்னிக்கோ கலகலத்து போயிருக்காது.

    ReplyDelete
  7. இந்த திருடன் செத்தால்தான் பாதி தமிழ்நாடும் முழுதமிழ் மொழியும் உருப்படும்....

    ReplyDelete
  8. Really super . . . All statements are very truerue

    ReplyDelete
  9. இந்த முகமூடிக் கொள்ளைக்காரர் தொல்ல தாங்க
    முடியவில்லை .நன்றி சகோ பகிர்வுக்கு .....

    ReplyDelete
  10. நல்ல விரிவான அலசல்

    ReplyDelete
  11. சாட்டை அடி...........திருந்தட்டும் திமுக

    ReplyDelete
  12. நல்ல பதிவு
    புரிய வேண்டியவங்களுக்கு புரியணுமே!!??

    ReplyDelete
  13. //எந்த இனத்தைக் கூறுகிறீர்கள் தலைவா?//

    தன் குடும்பன் என்பதை தன் இனம் என்று சொல்லும் பேச்சு வழக்கம் உண்டு எங்க ஊரில் :)

    ReplyDelete
  14. அதை இனிமேல்தான் கற்க வேண்டும்...

    ReplyDelete
  15. அழுத்தமான பதிவு, விரிவான அலசல். வாழ்த்துக்களும் வாக்குகளும்.

    ReplyDelete
  16. இந்த கூத்தில் தமிழினத் தலைவனாம் காறித் துப்பத் தோன்றுகிறது.

    ReplyDelete
  17. நல்ல காட்டமான கடிதம்..சூப்பர்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"