பீர் அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் முகப் புத்தகத்தில் சொல்லிருக்க அதனை நாம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்ள வேணும் தானே.. !?
இவைகள் ஒன்றும் " பீலா " இல்லை. மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே.
பீர் அருந்துவது உடலுக்கு நல்லது.
கவனிக்கவும்- அருந்துவது.
வயிறு முட்ட குடித்து விட்டு வண்டியை மெயின் ரோடில் ட்ராபிக் மெரிடியனில் முட்டி விட்டு மல்லாந்து கிடக்க அல்ல.
1. பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. உண்மை ...
பொதுவாகவே அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது
மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு
செல்கிறதாம்.
2 . பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.
1982-1996 இந்த வருட இடைவெளிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு
வாரத்திக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும் பழக்கமுள்ளவர்களுக்கு
20 - 50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.
3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.
பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L - High Density Lipoprotein )
தருகிறது.எனவே இது இரத்தம் தன் பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.(Clotting)
4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber)
இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது.
ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில்
சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடதுவிடுமாம்.இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.
5 . பீர் வைட்டமின் செறிந்தது.
( பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு)
பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன.மக்னீசியம்,செலினியம்,
பொட்டாசியம்,பாஸ்பரஸ், பயோட்டின், போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.
6 . பீர் மாரடைப்பை தடுகிறது.
2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய
நோய் (Strokes) வருவது மிகக்குறைவாம். காரணம், அளவான மது இரத்தத்தின்
அடர்த்தியை குறைகிறது.இதனால் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம்
தடை இன்றி நடக்கிறது.இதனால் மிக சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள
மூளையில் இரதம் கெட்டியாகாமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான
இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புக்கள் அதிகரிக்கிறது.
7. பீர் உங்கள் மூளையை இளமையாக வைக்கிறது.
2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு - Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40% குறைவாக உள்ளது .
8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது.
மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களை அகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் "வளர் சிதை மாற்றம் " காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன
This is from Beer Net Publication,
April 2001 Biological Institute.
9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia)
லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.
10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.
நியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம்.
என்ன, ரொம்ப குஷியா ..??
இனிமே சரக்கு அடிச்சி வாந்தி எடுத்துட்டு இருக்கும் போது யாராவது புத்தி சொன்னங்கன்னா இந்த பதிவ படிக்க சொல்லுங்க...
சரி சரி அளவோட இருந்தா தான் இதெல்லாம்.. இல்லன்னா ஆசுபத்திரி கேசுதான்..
ஒரு வாத்தி இந்த மாதிரி பதிவு போடலாமான்னு கேட்கக்கூடாது. (பிளாக் நோண்டி அடிக்குது என்ன செய்ய) ஏன்னா இது இரு கிச்சுகிச்சு பதிவு(சமாளிபிசெஷன்). பீர் சாப்பிடும் நண்பர்களுக்காக.
வந்தமா .. படிச்சமா .... பீர் சாப்பிடற பழக்கம் இருந்தா சந்தோஷப் பட்டுகிட்டோமா ..ன்னு போய்கிட்டே இருக்கணும்.. Cheers....
Alcohol Addiction Is Injurious To Health.
நல்லா கொடுக்கராங்கய்யா டீடைல்லு...ஏன்யா நீ வேற வெறுப்ப கெளப்பரே ஹிஹி!
ReplyDeleteலேடீஸ் பதிவர்கள் எல்லாம் வந்து மைனஸ் ஒட்டு போடுங்க. ஹி ஹி
ReplyDeleteவாத்தி வில்லங்கமான ஆளுதாம்லேய்ய்...
ReplyDeleteஇப்படியே ஆரம்பிச்சி நல்ல குடிமகன்களாக வாழ்த்துக்கள்...
ReplyDeleteபீர் பற்றிய நன்மையான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.
ReplyDeleteரொம்ப நல்ல விஷயமாச் சொல்லியி ருக்கீங்க!தேவைதான்!
ReplyDeleteGoodooooo good...........
ReplyDeleteநம்மவங்களுக்கு அரிசி சோறு சாப்பிட்டே தொப்பை.இன்னும் பீர் சேர்த்திகிட்டா சொல்லவே வேணாம்:)
ReplyDeleteபீருக்கு இணையான ஒன்று பழைய சோற்றுல ராத்திரி தண்ணி ஊத்தி வச்சி காலைல அருந்துவது.
மது மறப்போம்.
வெளிநாட்டுக்காரன் தன் மனைவி மக்களோடு
ReplyDeleteகுடும்பத்தோடுதான் மது அருந்துகிறான்
அவனுக்கு குடிப்பது எப்படி என்பது
தெரிந்திருக்கிறது
நம்ம பயபிள்ளைகள்குடிக்கத் தெரியாம
குடிச்சி கும்மாளமடிச்சுதானே
குழப்பத்தை உண்டாக்கிவிடறான்
வேண்டுமானால் குடிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டும்
பீர் நல்லது என தலைப்பை மாற்றலாம்
த.ம.9
ReplyDeleteபீர் அப்படினா என்னா?
ReplyDeleteஅப்பறம் அந்த முதல் படத்தில் பீர் பாட்டிலுடன் போஸ் கொடுக்கும் பிகர் நல்ல அழகா இருக்கு பாஸ்.ஹி.ஹி..ஹி.ஹி.....
பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. உண்மை ...
ReplyDeleteபொதுவாகவே அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது
மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு
செல்கிறதாம்.
......
இது தமிழ் ஆண்களுக்கு மட்டும் அல்ல, தமிழ் பெண்களுக்கும் தான் என்று சிம்பாலிக் ஷாட் ஆக ஒரு படமும் போட்டு இருக்கீங்க போல இருக்குதே. :-)))
எல்லாமே அளவோடு தான் ஆரம்பிக்கிறது. பிறகு தான்?
ReplyDeleteம்துவை மறப்போம்.மதுவை பற்றி விலாவாரியாக எழுதியுள்ள பதிவரை விலாவில ஒரு குத்துவிட்டு பிறகு மன்னிப்போம். எழிலன்
ReplyDeleteஅந்த பாட்டில ஒடச்சி உங்கள குத்துற மாதிரி கனவு கண்டேன் தோழா...
ReplyDeleteCheers...
சகா இப்ப பீர்லையே பல பேர் சதவிகிதம் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க (%) 4ல் தொடங்கி 8 வரைக்கும் போகுது. . . அமா இதுல எத்ச் சாப்பிடலாம். . .சும்மா comedykku. . .
ReplyDeleteபீர் நல்லதுன்னு உசுப்பேத்திப்புட்டேளே
ReplyDeleteதமிழ் மணம் 12
ReplyDeleteஅந்த பிகர் போட்டோவ எத்தன பேர் தான் போடுவிங்க?
ReplyDeleteஅந்தப்பொண்ணு கைல இருக்குற வாட்டர் பாட்டிலை யாரோ கிராபிக்ஸ் பண்ணி பீர் பாட்டிலா மாத்தியிருக்காங்க... படத்தை உற்றுப் பார்த்தால் உண்மை புரியும்...
ReplyDeleteஎத்தனை பாட்டில் குடிக்கலாம் என்று போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான் ஒரு முறை 18 பாட்டில் குடித்திருக்கிறேன். விவரம் வேண்டுவோர் தோடர்பு கொள்ளவும்.
ReplyDeleteநல்ல பதிவு ..
ReplyDeleteஅஹா கருன் சகோ.... இது உங்களுக்கே அடுக்குமா ?
ReplyDeleteஉங்க பதிவ பார்த்துட்டு சும்மா இருந்தவாங்களும் குடிக்க கிளம்புவாங்களே ...
பீர் குடிச்சா நல்லதுன்னு பத்து பாயின்ட் போட்டுட்டு, கடைசிலே லிமிட்-ஆ குடிக்கனும்னு சின்னத எழுதி இருக்கீங்க.. அந்த பத்து பாயிண்ட் தானே கண்ணுக்கு தெரியுது !
என்னை பண்ண ? ஹஹஹா