Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/17/2011

உண்மையிலேயே பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையானவரா?



ஊழலின் உறைவிடமாக, காங்கிரஸ் கட்சி திகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் நேர்மையும் நன்கு உரசிப் பார்க்கும் நிலையில் தான் உள்ளது. 

காங்கிரஸ் ஆட்சியில், ஊழல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில், "எதிர்க்கட்சிகள் யோக்கியமா' என, மன்மோகன் சிங் கூறியிருப்பதும், அவர்களை வசைபாடி உள்ளதும், போற்றத்தக்கதல்ல. தன் நன்மதிப்பை அவர், நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டு வருகிறார். 


குற்றங்கள் செய்யும் போது, அதற்கு உடந்தையாக இருப்பவர்களையும், காவல்துறை கட்டாயம் கைது செய்யும். அதுபோல, ஊழல் செய்பவர்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ உடந்தையாக இருந்தால், அது குற்றம் இல்லையா? அது யாராக இருந்தால் என்ன? "பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும்' என, டில்லியில் நடத்தப்பட்ட மாதிரி ஓட்டெடுப்பில், 82 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர்.

"உயர் பதவியில் உள்ளவர்களையும் விசாரிக்கும் அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு இருக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருவதும், மக்களிடம் மாதிரி ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களின் எண்ணங்கள் பிரதிபலிக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர்கள் பலர், "இதை ஏற்க முடியாது' எனக் கூறி உள்ளனர். அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வர்? "மக்களுக்காகவே நடத்தப்படும் அரசு' எனக் கூறி, மக்கள் விரோத அரசை அல்லவா அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்!

கறுப்புப் பண விஷயத்தில், இரட்டை வேடம் போடுவதும், லோக்பால் மசோதாவை, ஆயிரம் ஓட்டைகளுடன் நிறைவேற்றத் துடிப்பதும், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தத் தவறுவதும், "இந்து பயங்கரவாதம்' எனக் கூறி திசை திருப்புவதும், விஷம் போல் ஏறி வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யாமல் இருப்பதும், காங்கிரசுக்கு வாடிக்கையாகிவிட்டது. 

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, மிக உயர்ந்த அளவான, 146 டாலர் வரை உயர்ந்தபோதும், ஏற்றிய எரிபொருள் விலையை தற்போது, 86 டாலர் இருக்கும் போதும் கூட, குறைக்க மனம் இல்லாமல், கச்சா எண்ணெய் விலை, சர்வதேச அளிவில் உயர்ந்து விட்டதாக, வாய் கூசாமல் பொய் பேசி, மக்களின் காதில் பூ சுற்றுவதும் தொடர்கதையாகி விட்டது.

 மத்திய அரசு, எரிபொருளுக்கு ஏகப்பட்ட வரியை விதித்துவிட்டு, வரியைக் குறைக்க, மாநில அரசிடம் ஆலோசனை கூறுவதை என்னவென்று சொல்வது? இதுதான் புத்திசாலித்தனமா? பெருகி வரும் விலைவாசி உயர்வுக்கு, புரியாத புள்ளி விவரங்களைக் கூறி மக்களை குழப்புவதும், பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டுவதும், யாரை ஏமாற்றும் வேலை?

25 comments:

  1. அரசியல் அலசல் அருமை

    பகிர்வுக்கு நன்றி

    தமிழ் மணம் இரண்டு

    ReplyDelete
  2. இம்புட்டு நாளா வராத டவுட்டு இப்ப வந்திருக்கே...

    ReplyDelete
  3. உண்மைய சொல்லணும்னா இல்ல

    ReplyDelete
  4. MGR பாஷையில சொல்லணும்னா
    இந்த ஆளு சரியான திண்ணை தூங்கி..

    ReplyDelete
  5. யாருக்கு தெரியும்?

    ReplyDelete
  6. காதில் பூ சுற்றும் வேலை தான் பார்க்கிறார்கள் நண்பரே.
    சாட்டையடி பதிவு.

    ReplyDelete
  7. காங்கிரஸ் ஒழிந்தால் தான் இந்தியா ஒளிரும்

    ReplyDelete
  8. எதுவுமே தெரியாதுன்னு சொல்ல ஒரு PM

    ReplyDelete
  9. எல்லா ஓட்டும் போட்டாச்சு

    ReplyDelete
  10. எல்லா ஓட்டும் போட்டாச்சு

    ReplyDelete
  11. மன்மோகன் ஒரு கல்லுளி மங்கன். இன்னும் 3 வருடத்திற்குள் இந்தியாவை காங்கிரஸ் சுரண்டிவிடும். அதையும் பார்த்துக்கொண்டு தான் இருப்பார் இந்த ஆள். எல்லாம் நம்ம தலைவிதிங்க.

    ReplyDelete
  12. தலையாட்டி பொம்மையிடம் நேர்மையை எதிர்பார்க்கலாமா?

    இதை அவரிடமே கேட்டாலும் 'தெரியாது. இப்படி ஒரு விஷயம் என்னப்பற்றி உலவுதா? 'ஐ ஆம் நாட் அவேர் ஆஃப் திஸ்'ன்னு சொல்வாரோ என்னவோ':-))))

    ReplyDelete
  13. உண்மையிலேயே பிரதமர் ரெம்ப ரெம்ப நல்லவர்... இப்ப அதுதான் பிரச்சனையே....

    காட்டான் குழ போட்டான்...

    ReplyDelete
  14. அரசியலா!!!!!!!!!!!!!..........எனக்கு சம்மந்தமே இல்ல
    ஆனா ஆராட்சி அருமை வாழ்த்துக்கள் சகோ ....
    இன்றும் ஒரு வித்தியாசமான ஆக்கம் என் தளத்தில்
    உங்கள் மேலான கருத்தினை எதிபார்க்கின்றேன்...
    உங்கள் வரவு நல்வரவாகட்டும்.....

    ReplyDelete
  15. இது ஒரு புள்ள பூச்சி..ஒரு இழவும் தெரியாது...எல்லா ஊழல்வாதிகளும் இந்தாளை மிரட்டி வேலை வாங்குறாங்க

    ReplyDelete
  16. மன்மோகன் சிங் பற்றி மக்கள் உணர்ந்து தெளியும் வகையில் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    ReplyDelete
  17. இன்னும் நிறைய இருக்கு இவர்களைப் பற்றி சொல்ல. . .2Gய பற்றி மறந்துடாங்களே. . .

    ReplyDelete
  18. அரசியல் அலசல் அசத்தல்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"